Wednesday, October 2, 2013
அணு உலைப் போராளி அண்ணன் உதயகுமார் அவர்கள் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சென்னை கோட்டை அல்லது சிறைச்சாலை என்ற முழக்கத்தை முன்வைத்துள்ளார். அதாவது சென்னை கோட்டைக்கு வந்து முதல்வரை சந்தித்து அணு உலை இயங்குவது தொடர்பில் நீதி கேட்கப் போவதாக கூறியுள்ளார்.
தமிழக முதல்வர், அணு உலைப் போராளிகளை தேசத் துரோகிகள், திருடர்கள் என்று சொல்லி சிறைச்சாலையில் அடைத்து வைத்தால் சிறையில் தங்கள் வாழ்நாளை கழிக்க தயாராக உள்ளோம் என்றும் கூறியுள்ளார். மாறாக அணு உலைப் போராளிகளுக்கு நீதி கொடுத்துவிட்டால் அணு உலைப் போராட்டம் முடிவுக்கு வரும் என்று கருத்து தெரவித்துள்ளார்.
அண்ணனின் இப்படியான அறிவிப்பு உண்மையில் அதிர்ச்சி அளிக்கிறது. ஜெயாவின் கொடுரப்போக்கு போக்கு தெரிந்துமா முதல்வரை நீங்கள் சந்திக்க வருகிறீர்?
இங்கு தமிழகத்தில் அணு உலைப் போராட்டத்திற்கு மட்டும் நீதி மறுக்கப் படவில்லை . தமிழர்களின் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு யாருக்கும் நீதி கிடைக்கவில்லை. ஜெயா, பதவி வெறி பிடித்து ஆணவத்தின் உச்சியில் அமர்ந்து கொண்டு மக்களின் எந்த ஒரு வாழ்வாதார பிரச்சனைகளுக்கும், சிக்கல்களுக்கும் இதுவரை தீர்வு தரவில்லை. ஒருவேளை ஒரு பிரச்சனையில் அவர் அதை குறித்து பேசிவிட்டார் என்றால் அந்த பிரச்சனைக்காக பல போராட்டங்களை மக்கள் நிகழ்த்தி இருக்க வேண்டும். அப்போது தான் பிரச்சனை குறித்து பேசவே தொடங்குவார். இதை நாம் பல முறை பார்த்துவிட்டோம். அவரே நேரடியாக தலையிட்டு தமிழக மக்களுக்கு எந்த நன்மையும் இதுவரை செய்ததில்லை. எந்த நீதியையும் வழங்கியது இல்லை.
தமிழின விரோத போக்கை கடைபிடிக்கும் ஜெயா போன்றவருக்கு மனசாட்சி இருக்கும் என நம்பி நீங்கள் சென்னை வராதீர்கள்.
தமிழர்கள் அரசியல் பலம் அடையும்வரை கொஞ்சம் பொறுமையாக அங்கேயே இருந்து போராட்டம் நடத்துங்கள் என்று சொல்வதை தவிர வேறு ஏதும் சொல்லத் தோன்றவில்லை. மீண்டும் ஒருமுறை சிந்தித்து முடிவெடுங்கள் அண்ணா!
-இளையவேந்தன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment