Tuesday, October 1, 2013
கர்நாடக வீதிகளில் கசாப்புக் கடையில் ஆடுமாடுகளை அறுத்தெறிவது போல தமிழர்கள் தாக்கப்பட்டபோதும் தமிழச்சிகள் சீரழிக்கப்பட்டபோதும் அந்த வெறியர்கள் தமிழர் தமிழரல்லாதவர் என்று எப்படி அடையாளம் கண்டனர்?
தமிழர் நலம் என்ற பார்வையிலிருந்து ஒருக்காலும் திராவிடத்தால் வாழ்ந்தோம் என்று சொல்ல முடியாது. தமிழரை ஒடுக்குவதிலும், சுரண்டுவதிலும், தமிழரை அதிகாரத்திலிருந்து வீழ்த்துவதிலும் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக திராவிடம் என்ற கருத்தியல் வரிந்து கட்டிக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
கர்நாடக வீதிகளில் கசாப்புக் கடையில் ஆடுமாடுகளை அறுத்தெறிவது போல தமிழர்கள் தாக்கப்பட்டபோதும் தமிழச்சிகள் சீரழிக்கப்பட்டபோதும் அந்த வெறியர்கள் தமிழர் தமிழரல்லாதவர் என்று எப்படி அடையாளம் கண்டனர்? கொலைவெறியோ பாலியல் வெறியோ அந்த வெறியர்களுக்கு ஓர் அடிப்படை வெறியாக இருந்திருந்தால் பக்கத்தில் கருப்பு வண்ணத்தில் தாலிச்சரடு போட்டிருந்த கன்னடப் பெண்கள் மீதும் கை வைத்திருப்பார்களே! அந்தக் கன்னட வெறியர்களுக்கு தமிழர்கள் என்று அடையாளப்படுத்த என்ன வரப்பு இருந்தது? பல நூறு ஆண்டுகள் அந்த மண்ணிலேயிருந்து கன்னடம் பேசி அடித்தட்டு மக்களாயிருந்த ஆனால் பிறப்பால் தமிழர்களாகிப் போன பெரும் பாவத்திற்காக அவர்கள் தமிழர்களாகவே அடையாளப்படுத்தப்பட்டு மிதிக்கப்பட்டார்களே அப்போதெல்லாம் இனத்தை அடையாளப்படுத்தும் வரம்புகள் எங்கே போயின?
-அரிமாவளவன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment