Wednesday, October 9, 2013

இந்திய ஒன்றியம் திருகோமலை மாவட்டத்தில் பலநூறு தமிழ் மக்களை சிங்கள அரசின் மூலம் விரட்டியடித்து சம்பூர் அனல்மின் நிலையம் கட்டுவதற்கு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ள இந்திய ஒன்றியம், யாழ்மாவட்டத்தில் இரு வீடுகளைத் திறந்து கொடுத்திருப்பது இந்திய ஒன்றிய அரசின் கபடத்தனத்தை சுட்டிக்காட்டத்தக்கதாக இருக்கின்றது????? தமிழ் மக்களை ஏமாற்றி திசைத்திருப்பும் இந்திய ஒன்றியம்!!

 

யுத்த குற்றங்களின் பங்காளிகளான இந்திய ஒன்றிய அரசு ஈழத்தமிழ் மக்களது மனங்களை வெல்ல பல தடைவைகளாக முயற்சித்து வருகின்ற போதும் அதை பொருட்படுத்தும் மனநிலை தமிழ் மக்களிடம் இல்லாதேயுள்ளது.

அவ்வகையினில் இன்றைய தினம் இடம்பெற்ற இந்திய ஒன்றியத்தின் வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித் வரவும் வடக்கு மக்களிடையே பொருட்டாக எடுத்துக்கொள்ளப்படவில்லை.

ஏற்கனவே கட்டி வழங்கப்படுமென கூறப்பட்ட இந்திய ஒன்றியத்தின் வீடமைப்புத்திட்ட வீடுகளை மாதம் தோறும் திறந்து வைக்கும் நாடகமும் தொடர்கின்றது.சர்வதேசத்திற்கும் தமிழ் மக்களிற்கும் இந்திய ஒன்றியம் அள்ளிக்கொடுப்பது போன்று காண்பிக்க முயற்சிகள் தொடர்கின்றன.

இந்நிலையினில் படைத்தரப்பின் வசமுள்ள பலாலி விமான நிலையம் விரைவினில் தமிழ் மக்களது பயன்பாட்டிற்கான பொது விமான நிலையம ஆக்கப்படும்.அதே போன்று விரைவினில் மன்னார் துறைமுகம் புனரமைக்கப்பட்டு கப்பல் போக்குவரத்துக்களிற்கான ஏற்பாடுகள் செய்யப்படுமென இந்திய ஒன்றியத்தின் வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித் தெரிவித்துள்ளார். இரண்டு நாள் உத்தியோகபூர்வ விசயம் மேற்கொண்டு இலங்கை வந்திருந்த அவர் இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்திற்கான விசயத்தினை மேற்கொண்டார்.

இந்த விசயத்தின் போது வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேசுவரன் தலைமையிலான தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளை அவர் சந்தித்துப்பேசினார்.அதே வேளை யுத்த பாதிப்புக்களை சந்தித்த கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு வர்த்தகர்கள் சிலருக்கும் தமது வீடமைப்பு திட்ட பயனாளிகளிற்கும் அவர் சான்றிதழ்களை வழங்கினார்.

இந்த விசயங்களில் இலங்கைக்கான இந்திய ஒன்றியத்தின் உயர் அதிகாரி வை.கே.சின்கா, இந்திய ஒன்றியதிற்க்கான இலங்கை உயர் அதிகாரி பிரசாத் காரியவசம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

யாழ்.நகரினில் இடம்பெற்ற சான்றிதழ் வழங்கும் நிகழ்வினில் பேசுகையினில் இவ்வாறு தெரிவித்த அவர் தமிழ் மக்கள் மாகாணசபை தேர்தலில் பெற்றுள்ள ஆணையை பலப்படுத்த இந்திய ஒன்றியம் உதவுமெனவும் தெரிவித்தார்.

முன்னதாக தெல்லிப்பழை பாதுகாப்பு வலயத்தினில் விடுவிக்கப்பட்ட பகுதிகிளில் இந்திய ஒன்றியத்தின் அரசினுதவியின் கீழ் கட்டப்பட்ட இரு வீடுகளையும் அவர் திறந்து வைத்தார். வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடனான சந்திப்பினில் அவருடன் மாவை சேனாதிராசாவும் சுமந்திரனும் பிரசன்னமாகியிருந்தனர்.

இதேநேரம் இந்திய ஒன்றியம் திருகோமலை மாவட்டத்தில் பலநூறு தமிழ் மக்களை சிங்கள அரசின் மூலம் விரட்டியடித்து சம்பூர் அனல்மின் நிலையம் கட்டுவதற்கு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ள இந்திய ஒன்றிய அரசு, யாழ்மாவட்டத்தில் இரு வீடுகளைத் திறந்து கொடுத்திருப்பது இந்திய ஒன்றிய அரசின் கபடத்தனத்தை சுட்டிக்காட்டத்தக்கதாக இருக்கின்றது.

நன்றி தமிழ் ஊடகங்கள்

-ஈழ மகான் தமிழ் 

No comments:

Post a Comment