நெல்லை கோடீசுவரன் நகரில் வசித்து வரும் இந்து முன்னணி அமைப்பின் நகர செயலாளர் வினோத்தின் வீட்டின் அருகே நேற்றிரவு பைப் வெடிகுண்டு கிடந்தது தெரிய வந்தது.
இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, பட்டாசுகளுக்கு பயன்படுத்தும் வெடிமருந்துகள் ஒரு குழாயில் அடைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதில் அலுமினியப்பொருட்களையும் அடைத்து சக்தி வாய்ந்த குண்டுபோல் தயாரித்து இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைதத் தொடர்ந்து வினோத்துக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
-தமிழ்ர் செய்திகள்
No comments:
Post a Comment