Tuesday, October 1, 2013

பா.ஜ.க -மோடியின் இனப்படுகொலை குற்றத்தைவிட, காங்கிரசு-சோனியா,மன்மோகன், ராகுல் குழுவின் ஈழ இனப்படுகொலை குற்றம் எவ்விதத்தில் குறைவானது?

நாளை பஞ்சாப் மொகாலியில் நடக்க இருக்கும் கிரிக்கெட் போட்டியில் இனப்படுகொலை செய்த இலங்கை நாட்டின் ஆட்டக்காரன் திசாரா என்பவன் விளையாடுகிறான். இதற்கு தமிழ்நாடு மாணவர் பேரவை கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. இலங்கை ஆட்டக்காரனை இந்தியாவிற்குள் விளையாட அனுமதிக்காதே என்று கோரிக்கை வைத்துள்ளனர். மீறினால் மாணவர்கள் கிரிக்கெட் வாரியத்தை எதிர்த்து போராட்டம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மோடியா, ராகுலா என்ற இந்தியம் முன்வைக்கும் மாற்றுகளை ஆராய்வதல்ல தமிழினத்தாரின் வேலை.அது மதசார்பின்மை பேசும் இந்திய இடது வேடதாரிகளின் கவலை.ஈழ இனப்படுகொலையில் மதசார்பற்ற-இடது ’இந்து ராம்’ புரிந்துள்ள வேலைகளை அறிந்துள்ள அறிவார்ந்த தமிழர்கள்,இந்திய வலது, இடது, நடுசாரிகளில் பெரிதாக வேறுபாடு காண்பதற்கில்லை.

No comments:

Post a Comment