Tuesday, October 1, 2013

எங்கள் மண்ணில் இந்திய ஒன்றியத்தின் மொழிக்கு என்ன டா வேலை?. சென்னை வானூர்தி நிலையம் தமிழர்களுக்கான ஒரு நிலையமாக இல்லாமல் ஹிந்தியர்களின் கூடாரமாக விளங்குகிறது. இந்தி அல்லாத மக்களையே இங்கு பணியில் அமர்த்துகிறது இந்திய அரசு .

ஹிந்தி வெறி

சென்னை வானூர்தி நிலையத்தை தனியாருக்கு விற்பனை செய்யவுள்ளதாக இந்திய அரசு அறிவித்தது. ஏற்கனவே சென்னை வானூர்தி நிலையம் தமிழர்களுக்கான ஒரு நிலையமாக இல்லாமல் ஹிந்தியர்களின் கூடாரமாக விளங்குகிறது. இந்தி அல்லாத மக்களையே இங்கு பணியில் அமர்த்துகிறது இந்திய அரசு . மேலும் இந்தி வளர்ச்சித் துறை மூலமாக தமிழக ஊழியர்களை கட்டாயமாக இந்தி கற்றுக் கொள்ள அறிவிப்புகள் ஆங்காங்கே வைத்துள்ளது . தமிழ் பேசும் காவலர்களை இங்கு காண்பது அரிது. தமிழில் நாம் பேசினால் நம்மை வெளிநாட்டவர் போல் பார்பார்கள் இந்த ஹிந்தியர்கள். இந்நிலையில் விமான நிலையத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதை நாம் தடுத்து நிறுத்தி , தமிழக அரசும் , தமிழக மக்களாகிய நாமும் சென்னை வானூர்தி நிலையத்தின் பங்குதாரர்களாக மாறி அதை வாங்கினால் , பல தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கலாம் . தமிழர்களின் உரிமையான வானூர்தி நிலையையும் நம் கைகளுக்கே வந்து சேரும்.

-முத்துகிருட்டிணன்

No comments:

Post a Comment