நம் உரிமைகள் அனைத்தும் இழந்து தற்போது கடிதம் மட்டுமே எழுதும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். அந்த கடிதமும் குப்பையில் தான் போடப்படுகிறது. அரசியல் சிக்கல், சமுதாய சிக்கல் , பண்பாட்டு சிக்கல், மொழிச் சிக்கல், சாதி மத சிக்கல், பொருளாதார, வாழ்வாதார சிக்கல் என பல சிக்கல்கள் நீண்டு கொண்டே போகிறது. தமிழ்த் தேசிய அமைப்புகள் இப்போது தான் துளிர் விட்டு வளர்ந்து வருகின்றன அல்லது வெளிப்படுகின்றன. இருப்பினும் இத்தமிழ் அமைப்புகள் இன்னும் ஒன்றாக இணைந்து செயல்படாத நிலையில் தான் உள்ளன. தமிழகத்தில் மட்டுமல்ல உலகெங்கிலும் உள்ள தமிழ் அமைப்புகள் , இயக்கங்கள் ஒன்றினைந்தாலே நாம் மிகப்பெரிய வலிமை பெற்றுவிடுவோம். நம்மை அடக்கி ஆளும் சக்திகளுக்கு நாம் அறைகூவல் விடுக்கலாம்.
அந்த வகையில் தமிழர் பண்பாட்டு நடுவம் சார்பில், தற்போது செயல்பாட்டில் உள்ள அனைத்து தமிழ், தமிழ்த் தேசிய அமைப்புகளை ஒன்றிணைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு ஒன்றுகூடல் சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளோம். தோழர்களுக்கு தெரிந்த அனைத்து திராவிடம் சாராத தமிழ் , தமிழ்த் தேசிய அமைப்புகளை பட்டியலிடுங்கள் . இந்த அமைப்புகளின் தலைவர்கள் அனைவரையும் தொடர்பு கொண்டு நாம் ஒரு ஒன்றுகூடல் நடத்தி வலுவான ஒரு தமிழர் அணியை உருவாக்குவோம். வருங்கால வளமான தமிழகத்திற்கு வித்திடுவோம். இந்த கருத்தில் உடன்படும் தமிழ் அமைப்புகள் தயவு செய்து தொடர்பு கொள்ளவும். நன்றி.
-இளையவேந்தன் - (௯௫௬௬ ௨௨ ௪௦௨௭) 9566 22 4027
புவிநன் - (௭௪௦௧ ௬௩ ௭௬௮௩ ) 7401 63 7683
No comments:
Post a Comment