Tuesday, October 8, 2013

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்அவர்களின் நினைவு நாள் இன்று.. அக்டோபர் 8, 1959...



சுவையான தகவல்கள்...

கட்சிகளுக்கு அப்பாற்பட்டு முற்போக்குக் கொள்கையில் பற்றுடைய அனைவரது மன மண்டபங்களிலும் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் வீற்றிருக்கிறார்.

பகுத்தறிவுப் பாசறையில் பயின்றவர்கள், பொதுவுடமைக் கொள்கைகளில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்கள் ஆகியோர் அனைவரது மனதிலும் மறையாமல் உள்ளார் கல்யாணசுந்தரம்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் போன்று மேலும் பல கவிஞர்கள் தோன்ற வேண்டும்.

எழுத்தாளர்களால் இந்த உலகம் முன்னேற முடியும். எழுத்தாளர்கள் கொள்கைப் பிடிப்பு உள்ளவர்களாக, லட்சியவாதிகளாக இருந்தால் இந்த உலகம் முன்னேறும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

அந்த நம்பிக்கையின் ஒரு கணுவாகத் திகழ்ந்தார் கல்யாணசுந்தரம்.

விழாவில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் துணைவியார் கௌரவம்மாள், புதல்வர் குமாரவேலு, சகோதரர் கணபதிசுந்தரம் வாழ்வில் சிறக்கவும் வாழ்த்துக்கள்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் மனைவி கௌரவம்மாள் கூறியுள்ள செய்தியில் :

எனது கணவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் நினைவைப் போற்றும் வகையில் மக்கள் அவரின் பகுத்தறிவு சிந்தனைகளையும், புரட்ச்சி பாடல்களையும் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்...

-கவின்

No comments:

Post a Comment