
லண்டன் வாழ் தமிழர்கள் மட்டுமல்ல, உலகத் தமிழர்கள் அனைவரும் பெருமையாக இருக்கவேண்டிய தருணம் இது. ஏன் எனில் பிரித்தானியா உட்பட பல நாடுகள் புலிகள் இயக்கத்தை தடைசெய்தார்கள். அவர்கள் கொடியை ஒத்த தமிழீழ தேசிய கொடியை புலிகளின் கொடி என்று கூறிவந்தனர். பல போராட்டங்களில் தமிழீழ தேசிய கொடியை, புலிகளின் கொடி என நினைத்து அதனைப் பிடித்தவர்களை பொலிசார் கைதுசெய்தார்கள். ஆனால் பிரித்தானியாயில் உள்ள தமிழர்கள் விட்டபாடாக இல்லை. அதனை விட பிரித்தானியாவில் செயல்பட்டு வரும் மக்கள் அமைப்பான பிரித்தானிய தமிழர் பேரவையினர்(BTF) இதனை சாதித்து முடித்துள்ளார்கள். அவர்கள் கடினமாக பாடுபட்டு, ஆதாரங்கள் மற்றும் வரலாற்று ஆவணங்களைக் காட்டி, பல ஆவணங்களை தயாரித்து காவல்துறையிடம் கொடுத்துள்ளார்கள்.
இதனால் தற்போது தமிழ் மொழிக்கு, ஒரு இலச்சினை கிடைத்துள்ளது. தமிழர்களுக்கு என்று ஒரு தனி நாடு இல்லை ! உலகம் எல்லாம் வாழும் தமிழர்கள் 2ம் தர குடிகளாகவே வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் தற்போது அவர்களுக்கு என்று ஒரு கொடி உள்ளது என்பதனை பிரித்தானியா ஏற்றுக்கொண்டுள்ளது. தமிழர்களின் தேசிய கொடியை பிரித்தானியப் பொலிசார் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். எனவே இனி வரும் காலங்களில் அதனைப் பிடிக்க பிரித்தானியாவில் தடை எதுவும் கிடையாது. இதனை முன்னுதாரணமாகக் கொண்டு தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் , புலிக்கொடியை அன் நாட்டின் தமிழ் இலச்சினையாக மாற்ற எல்லா நாட்டு தமிழர்களும் முயற்சி எடுக்கவேண்டும். தமிழர்களுக்கு தற்போது கொடி அங்கிகாரம் கிடைத்துள்ளது.
பிரிட்டன் லூசிஹம் பகுதியில் உள்ள கவுன்சிலில் தமிழ் மொழிக்கு புலிக்கொடியை அடையாளமாகப் போட்டு உள்ளார்கள். அதாவது தமிழர்கள் என்பதற்கு அடையாளம் என்னவென்று கேட்டால் அது தமிழீழ தேசியகொடியான புலிக்கொடி தான் என்பது வெள்ளைக்காரர்களுக்கு நன்றாக விளங்கியுள்ளது.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!
-இதழினி
No comments:
Post a Comment