Saturday, October 5, 2013
தமிழ்நாட்டில் மக்களுக்கு முதன்முதலாக திருக்குறள் வகுப்பு நடத்தியும், முதியோர் கல்வியை ஏற்படுத்தியும், மருத்துவம், அறிவியல், மொழியியல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தியும், முதல் கல்வெட்டு ஆராய்ச்சியாளராகவும், பெண்களுக்கு கல்விமுறை ஏற்படுத்தியும், சாதி மறுப்பு திருமணங்கள் ஊக்குவித்தும், மூடநம்பிக்கைகளை ஒழிக்க பரப்புரை செய்தும் பெருமை சேர்த்துள்ளார் வள்ளல் பெருமானார். சாதி, மதத்தினை கடந்து தமிழனாய் உயர்வோம். தமிழர் நாட்டை தமிழனே ஆளும் நிலையை உருவாக்குவோம். நாம் தமிழராய் ஒன்றிணைவோம்.
வள்ளலார் !!
தமிழ்நாட்டில் சிதம்பரத்திற்கு வடமேற்கே 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருதூரில் 1823-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5-ஆம் நாள் மாலை 5:30 மணிக்கு திருவருட்பிரகாச வள்ளலார் இராமையா, சின்னம்மையார் தம்பதிக்கு ஐந்தாவது மகவாக பிறந்தார். இராமையா கிராமக் கணக்கராக வேலை பார்த்து வந்தார். சின்னம்மையார் பொன்னேரிக்கு அருகில் சின்னக்காவனத்தில் பிறந்து வளர்ந்தவர். இராமையாவின் முதல் ஐந்து மனைவியர் ஒருவர் பின் ஒருவராக இறக்கவே ஆறாவது மனைவியாக சின்னம்மையார் வாழ்க்கைப்பட்டார்.
ஓதாதுணர்தல்
ராமலிங்கர் பள்ளிப் பருவம் எய்தியதும் தமையனார் சபாபதி தாமே கல்விப் பயிற்சியை தொடங்கி வைத்தார். பின்னர் தமது ஆசிரியரான மகாவித்துவான் சபாபதி முதலியாரிடம் கல்வி கற்க அனுப்பி வைத்தார். ராமலிங்கரின் அறிவையும், திறனையும் கண்ட மகாவித்துவான் இவர் ஒதாமல் உணர வல்லவரென்று உணர்ந்து கற்பிப்பதைக் கைவிட்டார். ராமலிங்கர் எவ்வாசிரியரிடத்தும் பயின்றதில்லை. இறைவினிடமே ஓதாது உணர்ந்தார்.
சன்மார்க்கம் தோற்றுவித்தல்
சமரச சுத்த சன்மார்க்கம் என்னும் நெறியை ஏற்படுத்தி அதைப் பரப்ப 1865-ல் பெருமான் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை நிறுவினார். 1867-ல் திருவருட்பாவின் முதல் நான்கு திருமுறைகள் அச்சிடப்பட்டு வெளியாயின. கடவுளின் அருளை எவ்வாறு பெறக்கூடுமெனில் சீவகாருண்ணிய ஒழுக்கதினால் பெறக்கூடுமல்லாது வேறு எவ்வழியிலும் பெறக்ககூடாது. எந்த வகையிலும் ஆதாரமில்லாத எழைகளுக்கு உண்டாகின்ற பசி என்னும் ஆபத்தை நிவர்த்தி செய்வதே சீவகாருண்ணியத்தின் முக்கிய லட்சியம்.
அதன்படி 23.05.1867-ல் அற்றார் அழிபசி தீர்க்கும் வண்ணம் சத்திய தருமச் சாலையை ஏற்படுத்தினார். அன்று வள்ளற்பெருமான் காட்டிய வழியில் இன்றும் சீவகாருண்ணியத் தொண்டு நடந்து வருகிறது.
தமிழ்நாட்டில் மக்களுக்கு முதன்முதலாக திருக்குறள் வகுப்பு நடத்தியும், முதியோர் கல்வியை ஏற்படுத்தியும், மருத்துவம், அறிவியல், மொழியியல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தியும், முதல் கல்வெட்டு ஆராய்ச்சியாளராகவும், பெண்களுக்கு கல்விமுறை ஏற்படுத்தியும், சாதி மறுப்பு திருமணங்கள் ஊக்குவித்தும், மூடநம்பிக்கைகளை ஒழிக்க பரப்புரை செய்தும் பெருமை சேர்த்துள்ளார் வள்ளல் பெருமானார்.
சாதி, மதத்தினை கடந்து தமிழனாய் உயர்வோம். தமிழர் நாட்டை தமிழனே ஆளும் நிலையை உருவாக்குவோம். நாம் தமிழராய் ஒன்றிணைவோம்.
-எழிலோவியா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment