Saturday, October 5, 2013

தமிழனின் தமிழ் உணர்ச்சி தவறாக பயன்படுத்தப்படுகிறது இங்குள்ள அரசியல் தலிவர்களால்??? இங்குள்ள அரசியல் களமே தவறானது – இக்கேள்விகளுக்கு அரசியல் கட்சியில் உள்ள ஏதேனும் ஒருவர் பதில் கூற முடியுமா???



மிகவும் கவனிக்க படவேண்டிய செய்தி :

உணர்வாளர்கள் தீ இரையாவது அவர்களது குடும்பத்தை மட்டுமே பாதிக்குமே தவிர, இந்த சனநாயக ஒன்றியத்தில் வேறு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. இதனால் பயன் பெறுபவர்கள் அந்த சங்கம் அல்லது கட்சியில் இருபவர்கள் மட்டும் தான்.. அவர்களும் ஒருவாரம் பெருமை பேசிவிட்டு பிறகு மறந்துவிடுவார்கள் அந்த நன்றி கெட்ட மனிதர்களை விட நாய்கள் மேலடா?.

மேடையில் கூட்டத்தில் பாராட்டுவார்கள் வெளியே சென்றால் இவனை யார் தீக்குளிக்க சொன்னது என்பார்கள். எனவே தயவுசெய்து இது போன்ற மடத்தனத்தை யாரும் செய்ய வேண்டாம்.


நேற்று கொளத்தூரில் உள்ள எனது அழகு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றி அமைத்தேன். அப்படி மாற்றி அமைக்கும் போது தேவை இல்லாத பொருட்களை அங்கயே வைத்து விட்டு சென்றேன்.

அதை இன்று பழைய பொருட்கள் வாங்கும் கடையில் போட்டு விடலாம் என்று என்னுடைய அழகு நிலைய பணிப்பெண்ணிடம் அந்த வேலையை ஒப்படைத்தேன், அவளும் ஒரு முதியவரை அழைத்து வந்து பழைய பொருட்களை எல்லாம் கொடுத்தாள்.அதன் மதிப்பு 80 ரூபாய் என சொன்னவர், அவரிடம் உரூபாய் 60தான் இருந்ததென கூறி மீதி கொடுக்க வேண்டிய 20 ரூபாயை பிறகு கொடுக்கிறேன் ,இப்போது பணம் இல்லை என சொல்லி விட்டு சென்றார்!

யார் அவர் தெரியுமா ? ? ? ? ?

என் இனம் செத்து மாள்வதை காண பொறுக்காமல் அதை தடுக்க,என் உயிரை தருகிறேன் என்று தனதுயிரை தீக்கிரையாக்கின வீரத் தமிழன் "முத்துக் குமாரின் " தந்தை அவர்!

இந்த இனத்திற்காக தன் மகன் கொடுத்த உயிரை கொச்சைப்படுத்த விரும்பாமல் தமிழக அரசு கொடுத்த லட்சங்களை வேண்டாம் என்று சொல்லி பணத்தை தூக்கி எரிந்தவர்தான் இந்த தந்தை.

ஆனால் இன்று இவரது நிலை ? ? ? ?

வயதான அவர் வெயிலிலும் மழையிலும் வீணாக போகும் பொருட்களை வாங்கி விற்கும் நிலை !!!!!!!!!!!!!!!!!!!!

அவரது தொடர்பு என்னை கேட்டதற்கு,அவரிடம் அலைபேசி இல்லை என்றார்!

இந்த நிலையிலும் தன்னை தமிழ் உணர்வாளர்களும்,கட்சிகளும் கண்டுகொள்ளவில்லை என பதிவு செய்யவே இல்லை அந்த தன்மானத் தந்தை!

முத்துக்குமரனின் தியாகத்தை பேசும் நாம் ,அவனது வயதான பெற்றோருக்கு என்ன செய்தோம் இது வரை! இனியாவது செய்வோமா?

அரசியல் கட்சிகள் பொதுகூடங்களை நடத்திகொண்டிருக்கின்றன; மக்கள் அனைவரும் மந்திரித்துவிட்ட பைதியக்காறர்களை போல் நின்று கேட்டுக்கொண்டிருக்கின்றனர். இங்கு நின்று கேட்டுக்கொண்டிருக்கும் மக்களுக்கு வேறு வேலை ஏதும் இல்லையா???. தன்னிச்சையாக சிந்தித்து செயல்படும் பகுத்தறிவு இல்லாத இழிவான இனமாக நமது தமிழினம் ஆனது வேதனைக்குரியது.

தமிழர் தேசத்தில் பாதிக்கும் மேற்ப்பட்டோர் ஏழைகலாக இருக்கின்றனர். இவர்களின் நிலையை உயர்த்த இதுவரை உள்ள அரசியல் கட்சிகள் என்ன செய்தன, ஒன்றுமில்லை.

இந்த அரசியல் கட்சியில் உள்ளவர்கள் ஆட்சிக்கு வந்தால் மட்டும் தான் நல்லது செய்ய முடியுமா என்ன???. நன்மைகளை செய்ய பணமிருந்தால் மட்டும் போதாதா??? நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கமும் இருக்க வேண்டும்.

இவர்கள் பொதுக்கூட்டம் போடும் செலவில், தமிழில் படித்தவர்களுக்கு வேலையளிக்கலாமே?.

பொதுவுடைமை பேசும் கட்சிகள் நலிவடைதோரின் வாழ்க்கையை மேம்படுத்தலாமே?.

மக்கள் பணத்தை சொரண்டும் அடிவருடிகள் ஏன் அரசியலை விடுத்தது, உழைத்து பிழைக்க கூடாது?? வியர்வை வருமோ???

தமிழனின் தமிழ் உணர்ச்சி தவறாக பயன்படுத்தப்படுகிறது இங்குள்ள அரசியல் தலிவர்களால்


தமிழின உணர்வாலும், நம்மால் முடிந்த நன்மைகளை தமிழர் தேசத்திற்கு செய்ய வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடன் செயல்படும் தமிழர்களுக்கு நான் கூறிக்கொள்வது ஒன்றே பன்று தான்.

நீங்கள் இந்த அரசியல் களத்தில் உள்ள அரசியல் தலிவர்களின் பேச்சை மட்டும் கேட்டு இந்த இழிபிறப்புகளுடன் நிற்காதீர்கள், இவர்களின் கட்சி வேலைகளை செய்யாதீர்கள்; இவர்களின் வரலாற்றை பின்னோக்கி நன்றாக ஆராயந்துபாருங்கள்; பல முறை ஆய்வுகளுக்கு பின்னர் கட்சிகளில் செயல்படுங்கள். அதுவே உண்மையான பகுத்தறிவு. இந்த அடிவருடிகள் யார் என்பதும், இவர்கள் செய்துள்ள துரோகங்களும் நன்கு விளங்கும்.

பேச்சிற்க்கும், செயலுக்கும் சமந்தமே இல்லாத இவர்களின் பின்னால் நிற்க்காதீர்கள். இவர்கள் பேசியே இளைஙர்களை  ஏமாற்றுகிறார்கள்; இதுவரை செயல் ரீதியாக ஒன்றுமே செய்ததில்லை.

அரசியல்வாதிகள் என்றேனும் போதுவாகனங்களில் சென்றதுண்டா?., இல்லை நீங்கள் தான் இவர்களுக்கு எங்கிருந்து வந்தது இவ்வளவு பணமென்று கேட்டதுண்டா?.

தெருவோரங்களில் உழைத்து, தற்சார்பு பொருளாதார வாழ்வியல் முறையில் வாழும் தோழர்களிடம் பேரம் பேச சுழலும் நாக்கு இங்குள்ள அடிமைகளுக்கு ஏன் கொள்ளையடிக்கும் இழிபிறவிகளிடம் கேள்விகள் கேட்க்காதா?

உதவாதினி ஒரு தாமதம் உடனே விழி தமிழா?

-புவிநன்…

No comments:

Post a Comment