Showing posts with label உண்மை உடனுக்குடன். Show all posts
Showing posts with label உண்மை உடனுக்குடன். Show all posts

Monday, October 28, 2013

பகுத்தறிவு பாடம் ௧ - புகைப்படத்தில் இருப்பது தமிழ் மொழியை நீசபாசை என்று கூறி, வீட்டு வேலைக்காரியிடம் கூட தமிழை பேச வேண்டாம் என்று கூறி.., பின்பு கதிர்வேளர் முன் தமிழ் புலவர்களை இழிவாக பேசியதை கண்டித்து அவன் தந்த பாலை அவன் முன்பே வாந்தியெடுத்து அசிங்கப்பட்டும் திராவிட சொரிநாய்களால் தூக்கி நிறுத்தப்படும் வெங்காய ராமசாமி அல்ல (DO NOT JUDGE A BOOK BY ITS COVER)

தீபாவளி என்றால் என்ன? (புராணம் கூறுவது) 
1. ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான்.

2. தேவர்களின் முறையீட்டின்மீது மகாவிசுணு பன்றி அவதாரம் (உரு) எடுத்து கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு வந்து விரித்தார்.
3. விரித்த உலகம் (பூமி) அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது.

4. ஆசைக்கு இணங்கி பன்றி (விசுணு) பூமியுடன் கலவி செய்தது.

5. அதன் பயனாய் பூமி கர்ப்பமுற்று நரகாசூரன் என்ற பிள்ளையைப் பெற்றது.
6. அந்தப் பிள்ளை தேவர்களை வருத்தினான்.

7. தேவர்களுக்காக விசுணு நரகாசூரடனுடன் போர் துவங்கினார்.

8. விசுணுவால் அவனை வெல்ல முடியவில்லை. விசுணுவின் மனைவி நரகாசூரனுடன் போர் தொடுத்து அவனைக் கொன்றாள்.

9. இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

10. இந்த மகிழ்ச்சியை (நரகாசுரன் இறந்ததற்காக) நரகாசுரனின் இனத்தாரான திராவிட மக்கள் கொண்டாட வேண்டும்.

இதுதானே தீபாவளிப் பண்டிகையின் தத்துவம்! இந்த 10 விடயங்கள்தான் தமிழரை தீபாவளி கொண்டாடும்படி செய்கிறதே அல்லாமல், வேறு என்ன என்று யாருக்குத் தெரியும்? யாராவது சொன்னார்களா? இதை ஆராய்வோம். இக்கதை எழுதிய ஆரியர்களுக்குப் பூமிநூல்கூடத் தெரியவில்லை என்று தானே கருத வேண்டியிருக்கிறது?

பூமி தட்டையா? உருண்டையா? தட்டையாகவே இருந்தபோதிலும் ஒருவனால் அதைப் பாயாகச் சுருட்ட முடியுமா? எங்கு நின்றுகொண்டு சுருட்டுவது? சுருட்டினால் தூக்கிக் கட்கத்திலோ தலை மீதோ எடுத்து போக முடியுமா? எங்கிருந்து தூக்குவது? கடலில் ஒளிந்து கொள்வதாயின், கடல் அப்போது எதன்மீது இருந்திருக்கும்? விசுணு மலம் தின்னும் பன்றி உருவம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன? அரக்கனைக் கொன்று பூமியை விரித்ததால் பூமிக்கு பன்றிமீது காதல் ஏற்படுவானேன்?

பூமி மனித உருவமா? மிருக உருவமா? மனித உருவுக்கும் மிருக உருவுக்கும் கலவியில் மனிதப் பிள்ளை உண்டாகுமா? பிறகு சண்டை ஏன்? கொல்லுவது ஏன்? இதற்காக நாம் ஏன் மகிழ்ச்சி அடைய வேண்டும்?

இவைகளைக் கொஞ்சமாவது கொண்டாடும் தமிழ்ப் புலவர்கள், அறிஞர்கள் சிந்திக்க வேண்டாமா? நரகாசூரன் ஊர் மாகிசமகி என்ற நகரம். இது நர்மதை ஆற்றின் கரையில் இருக்கிறது. மற்றொரு ஊர் பிரகத் சோதிசா என்று சொல்லப்படுகிறது.

இது வங்காளத்தில் விசாம் மாகாணத்துக்கு அருகில் இருக்கிறது. இதை திராவிட அரசர்களே ஆண்டு வந்திருக்கிறார்கள். வங்காளத்தில் தேவர்களும் அசுரர்களும் யாராக இருந்திருக்க முடியும்?

இவைகள் ஒன்றையும் யோசிக்காமல் பார்ப்பனன் எழுதி வைத்தான் என்பதற்காகவும், சொல்கிறான் என்பதற்காகவும், நடுசாமத்தில் எழுந்து கொண்டு குளிப்பதும், புதுத்துணி உடுத்துவதும், பட்டாசு சுடுவதும், அந்தப் பார்ப்பனர்கள் வந்து பார்த்து, “கங்காசுநானம் ஆயிற்றா?’’ என்று கேட்பதும், நாம் ‘ஆமாம்’ என்று சொல்லிக் கும்பிட்டுக் காசு கொடுப்பதும், அவன் காசை வாங்கி இடுப்பில் சொருகிக் கொண்டு போவதும் என்றால், இதை என்னவென்று சொல்வது?

சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!!

மாணவர்களே! உங்கள் ஆசிரியர்களுக்கு மானம், புத்தி இல்லாவிட்டாலும் நீங்களாவது சிந்தியுங்கள். எதற்காக இவ்வளவு சொல்லுகிறேன் என்றால் இக்கதை எழுதின காலத்தில் (ஆரியர்) பார்ப்பனர்கள் எவ்வளவு காட்டு மிராண்டிகளாக இருந்திருக்க வேண்டும்? அந்தக் காலத்தில் நாம் மோசம் போனது, ஈனநிலை அடைந்தது ஏன்? என்பதை தமிழன் ஒவ்வொருவரும் நன்கு சிந்திக்க வேண்டும் என்பதற்கு ஆகவேயாகும்.

தீபாவளிப் பண்டிகை என்று இன்பமும், துன்பமும் கொடுக்கத்தக்க பண்டிகையொன்று வந்துபோகின்றது. அதிலும் ஏதாவது அறிவுடைமை உண்டா என்று கேட்கிறேன். தீபாவளிப் பண்டிகையின் கதையும் மிக்க ஆபாசமானதும், இழிவானதும், காட்டுமிராண்டித் தனமானதுமாகும். அதாவது விசுணு என்னும் கடவுள் பன்றி உருக்கொண்டு பூமியைப் புணர்ந்ததன் மூலம் பெறப்பட்டவனான நரகாசுரன் என்பவன், வருணனுடைய குடையைப் பிடுங்கிக்கொண்டதால் விசுணு கடவுள் நரகாசுரனைக் கொன்றராம். இதைக் கொண்டாடுவதற்காகத் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறதாம்.

சகோதரர்களே! இதில் ஏதாவது புத்தியுள்ள தன்மையோ அறிவோ இருக்கிறதா என்பதைப் பாருங்கள். விசுணுக் கடவுள் பூமியைப் புணரமுடியுமா என்றாவது, பூமியைப் புணர்வதால் பிள்ளை பிறக்குமா என்றாவது யோசித்துப் பாருங்கள்.

இப்படிப் பொய்யான பண்டிகையினால் எவ்வளவு துன்பம், எவ்வளவு கடன், எவ்வளவு அறியாத்தனம், எவ்வளவு????????

எதையுமே நம்பாத சில பகுதரிவாதிகளுக்காக நாம் சில சான்றுகளை பார்ப்போம்!!!!!

தீபாவளி தமிழர்களின் பண்டிகை அல்ல...
தீபாவளி கதையை எடுத்து கொண்டால் நராகசூரன்னை [அசுரனை] கொன்றதாகத்தான் கூற படுகின்றது .அசுரர்கள் ,அரக்கர்கள் ,தஸ்யுக்கள் ,ராட்சதர்கள் ,குரங்குகள் ,கரடிகள் ,என்று சொல்லபடுவர்கள் எல்லாம் யார் ??வரலாற்று பேராசிரியர்கள் என்ன சொல்கின்றனர் என்று பார்ப்போம் 

''தென்னிந்தியாவில் வசித்து வந்த ஆரியர் அல்லாதவர்களையே குரங்குகள் என்றும் அசுரர்கள் என்றும் ராமாயண கதையில் எழுதி வைக்கப்பட்டுள்ளது [ரோமேஷ் சந்திர தத் எழுதிய ''புராதன இந்தியா ''என்னும் நூல் பக்கம் 52]

ராமாயண கதை என்பது ஆரியர்கள் ,தென் இந்திய தஸ்யுக்கள் or தமிழர்கள் மீது படையெடுத்து வெற்றி பெற்றதை சித்தரித்து காட்டுவதாகவும் '' 
[சிதம்பரம் பிள்ளை எழுதிய 'திராவிடரும் ஆரியரும் ''என்ற நூல் பக்கம் 24]

''தென் இந்தியாவில் இருந்த மக்களே (தமிழர்கள்) தான் இராமாயணத்தில் குரங்குகள் என்றும் ,அரக்கர்கள் என்றும் அழைக்க பட்டிருகின்றனர் ''
[விவேகானந்தரின் சொற்பொழிவுகளும் கட்டுரைகளும் என்னும் நூலில் ராமாயணம் என்ற தலைப்பில் 587-589 ம் பக்கம் ]

''ஆரியரல்லாதவர்களை ரிக் வேதத்தில் தாசர்கள் என்றும் ,தஸ்யுக்கள் ,அசுரர்கள் ,என்றும் கூறபட்டிருக்கின்றது ..ஆரியருக்கும் ,ஆரியரல்லாதவரும் இருந்து கொண்டு இருந்த அடிபடையான பகமையை பற்றி ரிக் வேதத்தில் பல இடங்களில் காணலாம் .இரு வகுப்பாருக்கும் இருந்த கலை வேற்றுமையும்,அரசியல் வேற்றுமையுமே இந்த பகைமைக்கு காரணம் ''
[டாக்டர் ராதா முகர்ஜி எழுதிய ''இந்து நாகரீகம்''என்னும் நூல் பக்கம் -69].

ராமாயணமும் ,மகாபாரதமும் இந்தோ -ஆரியர் காலத்தையும் அவர்களுடைய வெற்றிகளையும் ,உள் நாட்டு சண்டைகளையும் பற்றி சொல்வதாகும் ..
[ஜவஹர்லால் நேரு எழுதிய ''டிஸ்கவரி ஆப் இந்திய நூல் பக்கம்-76-77]

''இராமாயணம் என்பது தென்இந்தியாவில் ஆரியர் பரவியதை குறிக்கும் ''
[ஜவஹர்லால் நேரு -அதே நூல் பக்கம்-82]

இந்த வரலாற்று உண்மையை அடிப்படையாக தெரிந்து கொண்டால் நாம் கொண்டாடும் பண்டிகைகளில் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட அசுரர்கள் எல்லாம் நம் திராவிடர்கள் என்ற பேருண்மை சூரிய ஒளி போல தெரிந்து விடும் ..

நம்மை அழித்தற்காக நாமே விழா கொண்டாடலாமா என்பது தான் கேள்வி .இந்நிலை இப்படியே சென்றால் நாளைய தலைமுறை மே ௧௮ (18) ஐ விழாவாக நாளை தமிழர் கொண்டாடுவர் ????

-புவிநன்

 

"இந்தி"(தீ)யன் அல்ல தமிழன்டா "

"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..                         

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

www.senkettru.wordpress.com 

இனப்படுகொலை ஆதாரங்கள் 

http://www.youtube.com/watch?v=3TeDzggUFkc

 

Sunday, October 27, 2013

மே-4-2013 வந்தேறிகளின் திராவிட கழகத்தினரின் திராவிட மாநாட்டு தீர்மானம்...... வந்தேறி மிகத்தெளிவாக இருக்கின்றான்.... தமிழன் வந்தேறிக்கு தமிழ்நாட்டின் ஆளும் கட்ச்சி, எதிர் கட்ச்சி, மூன்காம் நான்காம் நிலை கட்ச்சி என்று ழுழு ஆட்ச்சி, அதிகாரத்தையும் கொடுத்துவிட்டு... வந்தேறிகளின் திராவிடமாயையில் வீழ்ந்து இழித்தவாயனாக இருக்கின்றான்



 

Thursday, October 17, 2013

எதிர்ப்பினைப் பதிவு செய்வோம்!

422211_365583370178608_686235286_n 1234034_684332878245407_1240642107_n




தமிழக, கேரள மக்களின் பாதுகாப்பைக் கருத்தில்கொள்ளாமலும், லட்சக்கணக்கான மக்களின் உயிரோடு விளையாடும் வகையில் கூடங்குளத்தில் தொடங்கப்பட்டுள்ள அணுஉலைகளில் இதுவரை மின் உற்பத்தி தொடங்கப்படவில்லை.


பிரதமர் தொடங்கி மத்திய அமைச்சர்கள் பலரும் அணு உலையில் உற்பத்திக்கான தேதியை பலமுறை அறிவித்தும், அறிவித்தபடி உற்பத்தியே தொடங்கவில்லை. கூடங்குளம் அணு உலைத் திட்டமே தோல்வியில் உள்ள நிலையில் 3ஆவது மற்றும் 4ஆவது உலைகளுக்காக ரசுயாவுடன் ஒப்பந்தம் செய்ய பிரதமர் மன்மோகன் சிங் முடிவு செய்துள்ளார்.


இதற்காக ரசுயாவுக்கு வரும் 20ஆம் தேதி புறப்பட்டுச் செல்கிறார். அங்கு கூடங்குளம் அணு உலை திட்டம் தொடர்பாக அடுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார். பிரதமரின் இந்த முடிவுக்கு அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கம் கடும் கண்டனம் தெரிவிக்கிறது.


இடிந்தகரையில் வரும் 20ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். மற்ற இடங்களிலும் தயவு செய்து எதிர்ப்பினைப் பதிவு செய்யுங்கள்.


-கூடங்குளம் அணுவுலை எதிர்ப்பியக்கம் மற்றும் செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர் குழு




"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..                         

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

www.senkettru.wordpress.com

தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க

That's the reality of the Fukushima Daiichi nuclear power plant accident

http://youtu.be/pV2OEJTmR7k


தமிழ் மொழியில் ஊர்தியில் எண்களை வைப்பது குறித்த நடுவண் அரசின் ஆணை.



வாகன என் மாற்றம்47968_447628965283853_1019644062_nநாம் அனைத்து தளங்களிலும் நம்மை தமிழர் என்று அடையாளப்படுத்திகொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

தமிழன் ஒவ்வொருவனும் தன்னைத்தான் "இந்தி"(தீ)ய ஒன்றியத்தை சார்ந்தவன் அல்ல என்றும், தன்னை தமிழன் என்றும் உணர்தல் வேண்டும். 

சாதிகளாய், மாதங்களாய், பிரிந்திராமல் தமிழன் என்ற உணர்வோடு ஒரு கொடயினுள் ஒன்றிணைய வேண்டும்.

வென்றாக வேண்டும் தமிழ்!!! அதற்க்கு ஒன்றாக வேண்டும் உணர்வுள்ள தமிழர்.

-புவிநன்

 

"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..                         

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

www.senkettru.wordpress.com

thamilarulaham.org

http://senkettru.blogspot.in/

http://iamnotaliberator.blogspot.in/

தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க

https://www.youtube.com/my_videos?o=U

Wednesday, October 16, 2013

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்வதை கண்டித்து ரெயில் மறியல் போராட்டம்: கருணாநிதி அறிவிப்பு??? நரி ஊளையிட்டுச்சி!!! இலங்கைக்கு போகிற ஸ்பைஸ் ஜெட் விமானத்தை ஓட விடுவாராம் உள்ளூர் மக்கள் போகிற ரயில நிப்பாட்டுவாராம்! என்ன இது??? சிங்களனை கேப்டனா வச்சி கிரிக்கெட் விளையாடுவாராம்??? சிங்கள தேசத்தை எதிர்ப்பாராம்! ஏன் இந்த பித்தலாட்டம்?

 

AGS திரையரங்கம் தமிழ்த் தாய் வாழ்த்து பாடல் ஒலிக்காமல் இந்திய (ஒன்றிய) நாட்டுப் பண் மட்டுமே தங்கள் திரையரங்குகளில் ஒலிக்கச் செய்யும் காரணத்தால், நாம் தமிழர் கட்சியின் சார்பிலும், தமிழர் பண்பாட்டு நடுவத்தின் சார்பிலும் AGS திரையரங்க உரிமையாளருக்கு கோரிக்கை மனு ஒன்றை நேரடியாக கையளித்தோம். ஒவ்வொரு படக் காட்சிக்கும் முன் கட்டாய தமிழ்த் தாய் வாழ்த்து பாடல் இடம்பெற வேண்டும் என்பதே அக்கோரிக்கை ஆகும்.








பல திரைப்பட ரசிகர்கள் திரையரங்கில் கூடி இருக்க ‘தமிழ்த் தாய் வாழ்த்தை புறக்கணிக்காதே’ என்ற முழக்கத்தை அனைவரும் முன்வைத்தோம். உடனே திரையரங்க நிர்வாகமும், காவல்துறையும் எங்கள் கோரிக்கையை விரைந்து வந்து பெற்றுக் கொண்டனர்.

இது குறித்து நிர்வாகக் குழுவிடம் பேசி மூன்று நாட்களுக்குள் பதில் தருகிறோம் என்று திரையரங்க மேலாளர் பதிலளித்தார். அவர்கள் தமிழ்த் தாய் வாழ்த்து ஒலிக்க மறுத்தால் அவர்கள் திரையரங்கில் தமிழர்கள் நாங்கள் தமிழ் தாய் வாழ்த்தை ஒலிக்கச் செய்வோம் என்பதை உறுதியுடன் கூறினும்.

காவல்துறையும், தமிழ்த் தாய் வாழ்த்து முதலில் பாடுவது தான் முறையானது என்று ஒத்துக் கொண்டனர். தமிழக அரசின் விதிமுறைப்படி நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், முடிவில் "இந்தி(தீ)ய ஒன்றியப்  பண்ணையும் பாட வேண்டும் . அதை நடைமுறைப்படுத்த வேண்டியது தமிழகத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களின் கடமையாகும்.



ஏ.ஜி.எஸ் திரையரங்கில் இந்திய நாட்டுப் பண் மட்டுமே ஒலிப்பதாகவும், அதற்கு தமிழர்கள் அனைவரும் எழுத்து நிற்க வேண்டும் எனவும் நம்மிடம் புகார் வந்ததை தொடர்ந்து தமிழர் பண்பாட்டு நடுவம், நாம் தமிழர் கட்சி, தமிழக மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் இந்த திரையரங்கத்தில் பத்து நாட்களுக்கு முன் மனு கையளிக்கப்பட்டது. அந்த மனுவில், திரையரங்கில் இந்திய நாட்டுப்பண் ஒலிக்கும் நிலையில் தமிழ் தாய் வாழ்த்தும் ஒலிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தோம். 

தற்போது திரையரங்க நிர்வாகம் நம்முடைய கோரிக்கையை ஏற்றுள்ளது. ஏ.ஜி.எஸ் வில்லிவாக்கம், நாவலூர் திரையரங்கங்களில் முதலில் தமிழ் தாய் வாழ்த்துப் பாடல் ஒலித்த பின்பே இந்திய நாட்டுப் பண் ஒலிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறோம். இது தமிழர்களுக்கு, தமிழுக்கு கிடைத்த வெற்றியாகும். 

விரைவில் மற்ற திரையரங்கிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை ஒலிக்கச் செய்வோம். தமிழகத்தில் இனி எந்த நிறுவனமும் தமிழ்த் தாய் வாழ்த்தை புறக்கணித்து "இந்தி"(தீ)ய ஒன்றியப் பண்ணை மட்டுமே முதன்மை படுத்த முடியாது.

தாய் தமிழுக்கு உரிய மரியாதை செலுத்திய பின்பே மற்ற மொழிகளுக்கு உரிய இடமளிக்கப்படும் . அதற்கான வேலைகளை தமிழ் அமைப்புகள் நிச்சயம் செய்யும். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற இலக்கு அடையும் வரை நாம் ஓயாமல் பாடுபடுவோம். வாழ்க தமிழ் !

-இளையவேந்தன்

"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..                         

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

www.senkettru.wordpress.com            

thamilarulaham.org

http://senkettru.blogspot.in/

http://iamnotaliberator.blogspot.in/

தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க

https://www.youtube.com/my_videos?o=U

ஒரு சனநாயக நாட்டில் ஒவ்வொரு குடிமகனும் அவரது சொந்த தாய் மொழியில் தானே கையெழுத்து இடும் உரிமையை பெறவேண்டும். அவ்வாறு இல்லாமல் ஏன் வேறு ஒரு மொழியில் கட்டாயமாக கையெழுத்து போட வேண்டும்? நீதியை நிலைநாட்டும் நீதிபதிகளுக்கு இது தெரியாதா ?

ஹிந்தி வெறி சுதந்திரம், சமஉரிமைகளுக்கு எதிரான ஆதார் அட்டை கட்டாயமல்ல : உச்சநீதிமன்றம் அதிரடி தனிமனித விவரங்களான கண்ரேகை , விரல் ரேகைகளை பொது மக்களிடம் சேகரிப்பதோடு , அவர்களை கட்டாயப் படுத்தி அவர்களின் வங்கிக் கணக்கை ஆதார் அட்டையோடு இணைக்கிறது நடுவண் அரசு.நாங்கள் தாய் மொழியில் தான் கையெழுத்திடுவோம் என்று ஏன் நீதிபதிகள் சொல்லவில்லை. "இந்தி"(தீ)யில் கையெழுத்து இட்டவுடன் அவர்களுக்கு நீதிபதி பதவி வழங்கப்பட்டுவிடுமாம் . அதுவரை அவர்களுக்கு பதவி வழங்கப்படாது எனத் தெரிகிறது.

இது மொழி உரிமைக்கு புறம்பானது அல்லவா ?

மனித உரிமை மீறல் ஆகாதா ?

 

 

நீதிபதிக்கே இந்த நிலை என்றால் "இந்தி"(தீ)ய ஒன்றியத்தில் சாதாரண குடிமகனுக்கு எந்த அளவில் இந்தி"(தீ) திணிப்பு இருக்கும் என்று சொல்ல வேண்டியதே இல்லை. அதை தடுக்கும் வல்லமை குடிமகனுக்கு நிச்சயம் இருக்காது.

"இந்தி"(தீ)ய ஒன்றியத்தின் இந்தி"(தீ) திணிப்பு, வெறிப் போக்கிற்கு நாம் நிச்சயம் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும். "இந்தி"(தீ)ய ஒன்றியத்தில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் சம உரிமைகள் கொடுக்கப் பட வேண்டியது தான் முறையானது .

அனைத்து மொழிகளும் ஆட்சி மொழியாக வேண்டும் என்ற கோரிக்கையை இந்திய மக்கள் அனைவரும் வலியுறுத்த வேண்டும் . இல்லையெனில் "இந்தி"(தீ)யை அனைவரின் தாய் மொழியாக ஏற்க வைக்கும் "இந்தி"(தீ)ய ஒன்றியம் என்பதில் ஐயமில்லை.

இந்தி"(தீ) திணிப்பு, வெறிப் போக்கையும் ஆதிக்கத்தை ஒழிப்பதே நாம் தற்போது முன்னெடுக்க வேண்டிய பெரும் போராட்டமாகும்.

-----------------------------------------------------------

இதை ஏற்றுக்கொண்ட சனாதிபதி, 7 பேரையும் நீதிபதியாக நியமிக்க கடந்தவாரம் ஒப்புதல் அளித்தார். இதை தொடர்ந்து, சனாதிபதி மாளிகையில் இருந்து, சென்னை உயிர்நீதிமன்றத்திற்க்கு ஆவணங்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

அந்த ஆவணங்களில், உயிர்நீதிமன்றத்திற்க்கு நீதிபதி பதவிக்கு தேர்வாண ஆர்.மகாதேவன் உட்பட 7 பேரும் நேற்று இந்தி"(தீ) மொழியில் தங்களது கையெழுத்தை போட்டனர். இதையடுத்து அந்த ஆவணங்கள் நேற்று மாலையே டெல்லியிலுள்ள சனாதிபதி மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

நீதிபதிகளாக தேர்வு செய்யப்பட்டவர்கள் இந்தி"(தீ) மொழியில் கையெழுத்திட்ட பிறகு, அவர்களை நீதிபதியாக நியமித்து சனாதிபதி இறுதி உத்தரவு பிறப்பிப்பது வழக்கம்.

இப்போது, 7 பேரும் இந்தி"(தீ)யில் கையெழுத்து போட்டதை தொடர்ந்து, அடுத்த சில நாட்களில் இவர்களை உயிர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமித்து சனாதிபதி உத்தரவு பிறப்பிப்பார் என்றும், இதைத்தொடர்ந்து 7 பேரும் வரும் வாரங்களில் பதவி ஏற்பார்கள் என்றும் உயிர்நீதிமன்ற வட்டாரத்தில் கூறப்பட்டது.

-இளையவேந்தன்

"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..                         

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

www.senkettru.wordpress.com

thamilarulaham.org

http://senkettru.blogspot.in/

http://iamnotaliberator.blogspot.in/

தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க

https://www.youtube.com/my_videos?o=U