கச்சத் தீவை மீட்க வேண்டும் என்று சி.பி.எம். கட்சியைத் தவிர, தமிழகத்தின் அனைத்து ஓட்டுப் பொருக்கி கட்சிகளும் மீண்டும் உரத்த குரலெழுப்பி வருகின்றன. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதையொட்டி, தமிழக மக்களால் வெறுத்தொதுக்கப்படும் காங்கிரசுக் கட்சியைத் தனிமைப்படுத்தும் நோக்கத்துடன் இந்த விவகாரத்தைச் சூடேற்றி சயலலிதாவும் இந்துவெறி பா.ச.க.வும் அரசியல் ஆதாயம் தேட முயற்சித்து வருகின்றன.
1974-இல் இந்திரா காந்தி தலைமையிலான மைய அரசு, கச்சத் தீவை இலங்கைக்குத் தாரை வார்த்தது தவறு என்று ஐந்தாண்டுகளுக்கு முன்பு எதிர்க்கட்சித் தலைவியாக இருந்த சயலலிதா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
2011-இல் அவர் மீண்டும் முதல்வரானதும் தமிழக அரசே இந்த வழக்கை நடத்தத் தொடங்கியது. 2013-இல் தி.மு.க. தலைவர் கருணாநிதியும் கச்சத்தீவை இந்தியா மீட்க வேண்டுமெனக் கோரித் தனியாக ஒரு வழக்கைத் தொடர்ந்தார்.
நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல், நாட்டின் ஒரு பகுதி வேறொரு நாட்டுக்குக் கையளிக்கப்பட்டுள்ளதால் இது அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணானது என்றும், தமிழக மீனவர்களின் நலனைக் காக்கும் வகையில் கச்சத் தீவை மைய அரசு மீட்டெடுக்க வேண்டுமென்பதுதான் இம்மனுக்களின் கோரிக்கை.
கடந்த 30.8.2013 அன்று உச்ச நீதிமன்றத்தில் இம்மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது, தனது பிரமாண பத்திரத்தைத் தாக்கல் செய்த இந்திய ஒன்றிய அரசு, 1974-இல் போடப்பட்ட ஒப்பந்தப்படி இந்திய ஒன்றியதிற்க்குச் சொந்தமான எந்த ஆட்சிப் பகுதியும் இலங்கைக்கு அளிக்கப்படவில்லை என்றும், எல்லை வரையறுப்பு இல்லாத நிலையில் கச்சத் தீவும் அதையொட்டிய கடற்பகுதியும் விவாதத்திற்குரிய ஆட்சிப் பகுதியாகவே இருந்தன என்றும், 1974 மற்றும் 1976-ஆம் ஆண்டுகளின் ஒப்பந்தங்கள் இச்சிக்கலைத் தீர்த்து எல்லை வரையறுப்புக்கு வழிகோலின என்றும் கூறியுள்ளது.
அதாவது, கச்சத்தீவு இந்தியாவின் பகுதியே அல்ல, அதனைத் திரும்பப் பெறுவது என்ற கேள்விக்கே இடமில்லை என்பதுதான் இதன் சாரம்...
No comments:
Post a Comment