Tuesday, October 1, 2013
இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டை இந்திய ஒன்றியம் புறக்கணிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து தோழர் தியாகு காலவரையற்ற உண்ணா நிலை போராட்டத்தை முன்னெடுத்து உள்ளார்.
இதுவரை தமிழக காவல்துறை இந்த போராட்டத்திற்கு அனுமதி வழங்கவில்லை. அதனால் நீதிமன்றத்தை அணுகி உண்ணாநிலைப் போராட்டத்திற்கு அனுமதி கோரியுள்ளனர் போராட்டக் குழுவினர் .
தற்போது தீர்ப்பளித்த நீதிமன்றம், காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்திற்கு அனுமதியளிக்க வேண்டும் என காவல்துறையிடம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் அடிப்படையில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் காவல்துறை போராட்டம் நடத்துவதற்கு இடம் கொடுத்துள்ளது.
இன்று மாலை 5 மணி முதல் தோழர் தியாகு சாகும் வரை பட்டினிப் போராட்டத்தை அங்கிருந்து தொடர உள்ளார். தமிழர் நலன் சார்ந்த அனைத்து கட்சிகளும் , அமைப்புகளும் , மாணவர்களும் , தனி நபர்களும் தோழர் தியாகுவின் உன்னதமான போராட்டத்திற்கு நேரில் வந்து ஆதரவு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
-இளையவேந்தன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment