Friday, October 4, 2013

கடந்த மாதம் இனப்படுகொலை இலங்கையில் இசை நிகழ்ச்சி நடத்திய டி.எம்.கிருஷ்ணாவின் மற்றொரு இசை நிகழ்ச்சி இன்று மயிலை இராதகிருஷ்ணன் சாலையில் உள்ள மியுசிக் அகாதமியில் நேற்று மாலை 7 மணிக்கு நடைபெறுவதாக இருந்தது இதனையறிந்த மாணவர்கள் நிகழ்ச்சி நடக்கும் மியுசிக் அகாதமியை முற்றுகையிட்டனர்.



கடந்த மாதம் இனப்படுகொலை இலங்கையில் இசை நிகழ்ச்சி நடத்திய டி.எம்.கிருஷ்ணாவின் மற்றொரு இசை நிகழ்ச்சி இன்று மயிலை இராதகிருஷ்ணன் சாலையில் உள்ள மியுசிக் அகாதமியில் நேற்று மாலை 7 மணிக்கு நடைபெறுவதாக இருந்தது இதனையறிந்த மாணவர்கள் நிகழ்ச்சி நடக்கும் மியுசிக் அகாதமியை முற்றுகையிட்டனர். மியுசிக் அகாதமியின் வளாகத்துக்குள்ளே நுழைந்த மாணவர்கள் உள்ளே அரங்கத்தினுள் செல்ல முயன்ற போது நிகழ்ச்சி ஏற்பாட்டார்களான திஇந்து நிறுவனம் போராடிய மாணவர்கள் மீது வாகனத்தை ஏற்றியது. அதைக்கண்டு கொதித்த மாணவர்கள் தி இந்து பத்திரிக்கையின் வாகனத்தை முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பினர்.” தி இந்து “ நிறுவனத்தின் செய்கைக்கு நடவடிக்கை எடுக்காமல் மாணவர்கள் கைது செய்து வாகனத்தில் ஏற்றியது. நிகழ்ச்சி முடியும் வரை மாணவர்கள் இராயப்பேட்டை சமுதாய நலக்கூடத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். பின்னர் இரவு 11 மணிக்கு விடுவிக்கப்பட்டனர்.

இந்த போராட்டத்தில் பாலச்சந்திரன் மாணவர் இயக்கத்தை சேர்ந்த சிபி லஷ்மணன் உள்ளிட்ட 20 மாணவர்கள் மற்றும் மாணவர் பேரவையை சேர்ந்த பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment