Tuesday, October 8, 2013

வரும் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் வட சென்னையில் தமிழக பண்பாட்டு கண்காட்சி! அனைவரும் வாரீர் !



இம்முறை வட சென்னையில் ஏழாம் ஆண்டு தமிழக பண்பாட்டு கண்காட்சி சிறப்பாக நடைபெற உள்ளது. தமிழக பெண்கள் செயற்களம் நடத்தும் இந்த கண்காட்சியில் கற்கால தமிழர் வராலறு முதல் ஆங்கிலேயர் ஆட்சி காலம் வரை படங்களாக ஆவணப் படுத்தி உள்ளனர் . இக்கண்காட்சியில் நிறைய பொதுமக்கள், சிறுவர்கள், மாணவர்கள் என எல்லா தரப்ப்பு மக்களும் கலந்து கொள்வர் என்ற தெரிகிறது.

தமிழர் வரலாறு திட்டமிட்டு மறைக்கப் பட்டுவிட்ட இன்றைய சூழலில் இத்தகைய கண்காட்சி காலத்தின் அவசியம் ஆகும். விரைவில் இக்கண்காட்சி தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் நடத்த இருகின்றனர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்.
இக்கண்காட்சியில் , தமிழர் வரலாறு மட்டுமின்றி, தமிழுக்காக பாடுபட்ட மனிதர்கள் , தமிழ்நாட்டு தலைவர்கள் , தமிழர்களின் உணவு முறை , தானியங்கள் , அறுபத்து நான்கு கலைகள், இசைக்கருவிகள் , பண்டைய இலக்கிய நூல்கள் , தமிழர் உற்பத்தி பொருட்கள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டது. பள்ளி மாணவர்களிடையே கேள்விகள் கேட்கப்பட்டு அவர்களுக்கு பரிசும் வழங்கப்படுகிறது.

பெரும் சிரமத்திற்கு நடுவில் பெண்கள் செயற்களம் இந்த கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளனர் . தமிழர் வரலாற்று படத் தொகுப்புடன் கூடிய நூலையும் வெளியிடுகின்றனர்.

தமிழர்கள் தங்கள் வரலாற்று உண்மைகளை மற்றும் பண்பாட்டை அறிய அறிய இந்த கண்காட்சிக்கு நேரில் வந்து ஆதரவு அளிக்க வேண்டும்.

-இளையவேந்தன்

No comments:

Post a Comment