
சிறீலங்காவில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை புறக்கணிக்க உள்ளதாக கனேடியப் பிரதமர் ஸ்டீவன் ஹார்பர் விளக்கம் அளித்துள்ளார். பொதுநலவாய நாடுகளின் கொள்கைகளுக்கும், விதிமுறைகளுக்கும் சிறீலங்கா மதிப்பளிக்கவில்லை. சர்வதேசத்திற்கு வழங்கிய உறுதிமொழிகளை சிறீலங்கா அரசாங்கம் நிறைவேற்றத் தவறிவிட்டது. சிறீலங்காவில் மனிதஉரிமைகள் மேம்படும் என்று நம்பியிருந்தமை நம் தவறு.
மனித உரிமைகள் விடயத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இறுதிக் கட்ட யுத்த மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றம் போன்றவற்றுக்கு இதுவரை தண்டனை வழங்கப்படவில்லை. எனினும் சிறீலங்கா தொடர்பில் கனடா உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கிறது எனவும் கனேடியப் பிரதமர் மேலும் கூறியுள்ளார்.
-ஈழ மகான் தமிழ்
No comments:
Post a Comment