Friday, October 4, 2013

மோடியை பின்னின்று இயக்கும் ஆர்.எஸ்.எஸ் என்கிற இந்துத்வா தீவிரவாத அமைப்பை பற்றியது தான் . காரணம் இந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சில நிபந்தனையின் பேரில் தான் மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க சம்மதித்தது. அதில் முக்கியமான நிபந்தனைகள், அயோத்தியில் கோவில் கட்ட வேண்டும், நாடு முழுவதும் ஒரே இந்துவாவிற்கான உரிமையியல் விதி (uniform civil code), காஷ்மீருக்கான தனி சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது போன்றவை ஆகும்.


மோடியின் பின் நின்று இயக்கும் இந்துத்வா சக்திகளை குறித்து சதீஸ் ஆச்சார்யா வரைந்த அசத்தலான கேலிச் சித்திரம்.டெல்லியில் ஒரு விழாவில் பங்கேற்ற மோடி, முதலில் இந்த நாட்டில் கழிவறைகள் தான் கட்டப் பட வேண்டும் , பின்பு தான் கோவில்கள் கட்டப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். இது குறித்து மோடி கருத்து தெரிவிக்கையில்,

'நான் ஒரு இந்துத்வாவாதி தான் . இப்படிப் பட்ட கருத்தை சொல்ல எனது இந்துத்வா அடையாளம் அனுமதிக்காது தான் . இருந்தும் தைரியமாக சொல்கிறேன் , இந்த நாட்டில் முதலில் கழிவறைகள் தான் கட்டப் படவேண்டும் . பின்பு தான் கோவில்கள் எல்லாம்'

இப்படியான வாசகத்தை ஒரு இந்துத்வா வாதி சொல்வார் என்று எந்த இந்துத்வா அமைப்புகளும் நினைத்துக் கூட பார்த்ததில்லை. காரணம் இதே போன்றதொரு கருத்தை காங்கிரஸ் அமைச்சர் ஜெயராம் ரமேஷ் கூறிய போது இந்துத்வா அமைப்பினர் கடுமையாக எதிர்த்தனர் , அவருக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

இங்கு சதீஸ் ஆச்சார்யா வரைந்த கேலிச் சித்திரத்தில் நாம் அறிந்து கொள்ள வேண்டிய விடயம், மோடியை பின்னின்று இயக்கும் ஆர்.எஸ்.எஸ் என்கிற இந்துத்வா தீவிரவாத அமைப்பை பற்றியது தான் .
காரணம் இந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சில நிபந்தனையின் பேரில் தான் மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க சம்மதித்தது. அதில் முக்கியமான நிபந்தனைகள், அயோத்தியில் கோவில் கட்ட வேண்டும், நாடு முழுவதும் ஒரே இந்துவாவிற்கான உரிமையியல் விதி (uniform civil code), காஷ்மீருக்கான தனி சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது போன்றவை ஆகும்.

ஆனால் மோடி இப்போது நாட்டிற்கு முக்கியம் கழிவறை தான் என்று கூறியுள்ளது ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு பெரும் தலைவலியை கொடுத்துள்ளது . இப்போது அந்த அமைப்பின் கொள்கைக்கு எதிராக மோடி பேசி உள்ளார். அதனால் தான் இந்த கேலிச் சித்திரத்தில் மோடியை இயக்கும் தொலைதூர கட்டுப்பாட்டுக் கருவியில் உள்ள மின்கலத்தை சரி பார்க்கவும் என்று இந்துத்வா தலைவர் ஒருவர் சொல்வது போல சதீஸ் ஆச்சார்யா வரைந்துள்ளார்.

நிச்சயம் இந்த கேலிச் சித்திரம் பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் இயக்கத்தை கொதிப்படைய வைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை. மோடி ஆட்சிக்கு வந்தாலும் மோடியை இயக்குவது என்னமோ இந்த ஆர்.எஸ்.எஸ் கேடிகள் தானே !



-இளையவேந்தன்

No comments:

Post a Comment