Sunday, October 6, 2013

விழிப்புணர்வு, பகுத்தறிவு, சுதந்திரம், இவை மூன்றுமே நம் மூச்சுக்காற்றை போன்றிறுக்க வேண்டும். வேறு ஒருவர் வந்துதான் நம்மை அடிமைகளாக இருக்கிறோம் என்றுணரச் செய்வதைப்போன்று இழிவு வேறு ஒன்றும் இல்லை.



சென்னையில் இலங்கையின் கொலைக்களம் படம் - இளைஞர்கள் திரையிட்டனர்

நாம் தமிழர் கட்சி இளைஞர் அணியை சேர்ந்த சில இளைஞர்கள் இலங்கையின் இனப்படுகொலை காணொளியை எப்படியாவது பொதுமக்களிடம் சென்று சேர்க்க வேண்டும் என்ற பெரும் நோக்கத்துடன், பல தடைகளை தாண்டி பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலை அருகே உள்ள மக்கள் நெருக்கமான பகுதியில் இலங்கையின் கொலைக்களம் படத்தை நேற்று திரையிட்டனர். அந்த பகுதியை சேர்ந்த வியாபாரிகள், பெண்கள், முதியவர்கள், குடியிருப்பு வாசிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் முதல் முறையாக இந்த காணொளி காட்சியை பார்த்து அதிர்ந்து போயினர். இப்படி எல்லாம் கொடுமை நிகழ்ந்துள்ளதா என வேதனைபட்டனர்.

இலங்கையை கட்டாயம் தண்டிக்க வேண்டும் என கருத்து தெரிவித்தனர். இது போல் திரையிடப்படுதல் மற்ற பகுதியிலும் நடத்தப்பட வேண்டும் என வேண்டுகோளும் பொதுமக்கள் வைத்தனர். அந்த பகுதி காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கம் நிறைந்த பகுதியானதால், இந்த இளைஞர்கள் தங்கள் பாதுகாப்பையும் பொருட்படுத்தாமல் இந்த காணொளியை மக்களிடம் காட்டினர். இப்படிப்பட்ட வீர இளைஞர்களை பொது மக்கள் பெரிதும் பாராட்டினார்கள்.

No comments:

Post a Comment