சென்னை வில்லிவாக்கம் மற்றும் பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள ஏ ஜி எஸ் திரையரங்குகளில் ஒவ்வொரு படக் காட்சிக்கு முன்னும் கட்டாயமாக இந்திய தேசிய கீதத்தை ஒலிபரப்புகிறார்கள் . அதற்கு அனைவரும் எழுந்து நின்று பாடும்படி செய்கிறார்கள். ஏன் இவ்வாறு செய்கிறார்கள் என்று விசாரித்தால் இந்திய நாட்டின் ஒற்றுமைக்கு இதை நாங்களே செய்கிறோம் . எங்கள் பின்னால் இருந்து யாரும் இயக்குவதில்லை என்கிறார்கள். இது குறித்து நமக்கு புகார் வந்த காரணத்தால் ஏ.ஜி.எஸ் நிறுவனத்திற்கு தமிழர் பண்பாட்டு நடுவத்தின் சார்பாக கீழ்க்கண்ட கடிதம் அனுப்பி உள்ளோம்.
//வணக்கம் ,
உங்கள் திரையரங்குகளில் கட்டாய இந்திய தேசிய கீதம் பாடல் ஒலிக்கப்படுவதாகவும் , அதற்கு மக்கள் எழுந்து நிற்க வேண்டும் எனவும் எங்களுக்கு புகார் வந்துள்ளது . தமிழக அரசு உத்தரவுபடி , எந்த அரசு விழாவிலும் முதலில் தமிழ் தாய் வாழ்த்து பாடப்படுதல் வேண்டும். தமிழ் தாய் வாழ்த்து பாடலுக்கு பிறகு தான் எந்த நாட்டு பாடலையும் பாட வேண்டும் . தமிழகத்தில் இருக்கும் உங்கள் திரையரங்கில் இந்திய தேசிய கீதம் கட்டாயம் ஆக்கப்பட்ட காரணத்தால் , தமிழ் தாய் வாழ்த்து பாடலையும் கட்டாயம் ஆக்கப்படுத்தல் வேண்டும் . தமிழ்த் தாய் பாடலை புறக்கணித்தால் தமிழர்கள் உங்கள் திரையரங்கை புறக்கணிக்க நாங்கள் பரப்புரை செய்வோம்.
உடனே தமிழ்த் தாய் பாடலை உங்கள் திரையரங்கில் ஒலிக்க செய்யுமாறு வேண்டுகிறோம் . அவ்வாறு ஒலிக்கவில்லை எனில் உங்கள் திரையரங்கின் உள்ளே நாங்களே தமிழ்த் தாய் பாடலை ஒலிக்கச் செய்வோம் - தமிழர் பண்பாட்டு நடுவம். //
நாம் இப்போது இந்த கோரிக்கையை இவர்களுக்கு வைத்துள்ளோம். இது குறித்து தங்கள் நிர்வாகத்துடன் கலந்து பேசி முடிவு சொல்வதாக கூறியுள்ளனர் ஏ.ஜி.ஸ் நிர்வாகம். ஒருவேளை தமிழ்த் தேசிய பாடலை இந்த நிறுவனம் ஒலிக்கவில்லை எனில் தமிழ் அமைப்புகள் , கட்சிகள் திரையரங்கினுள் சென்று தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலை கட்டாயமாக ஒலிக்கச் செய்வோம். நாளை ஏ ஜி எஸ் திரையரங்கிற்கு சென்று நேரடியாக இந்த கோரிக்கை வைக்க உள்ளோம். தமிழர்கள் அனைவரும் இந்த திரையரங்கிற்கு செல்ல நேரிட்டால் , தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலை போடச் சொல்லுங்கள் . நீங்களும் பாடுங்கள் . அனைவரும் தமிழ்த் தாய் வாழ்த்து பாடலின் போது எழுந்து நிற்க வேண்டும் . யாரும் இப்பாடலை அவமதிக்கக் கூடாது . அவமதித்தால் அவர்களை அரங்கை விட்டு வெளியேற்ற வேண்டும் .
எங்களை தொடர்பு கொண்ட ஏஜிஸ் நிறுவனம், தமிழ்த் தேசிய கீதம் ஒலிக்க வேண்டும் என்று எந்த சட்டமும் இல்லையே என்று பதில் அளித்துள்ளனர். நாங்களும் கூறுகிறோம் இந்திய தேசிய கீதம் ஒலிக்க வேண்டும் என்ற எந்த சட்டமும் இல்லையே ? பின்பு ஏன் கட்டாய இந்திய தேசிய கீதம் என்ற கேள்வி எழுப்பி உள்ளோம்.
தமிழர்களே ! உடனே ஏ.ஜி.எஸ் திரையரங்கை தொடர்பு கொண்டு , படம் தொடங்குவதற்கு முன் தமிழ்த் தாய் வாழ்த்து இடம் பெற வேண்டும் என்றும் , படத்தின் முடிவில் தான் இந்திய தேசிய கீதம் ஒலிக்க வேண்டும் என்றும் கேளுங்கள். இது தான் தமிழக அரசு கடைபிடிக்கும் நடவடிக்கையாகும். இந்த சட்டத்தை இந்த திரையரங்கு கடைபிடிக்க வேண்டும் என்று உரிமையுடன் கேளுங்கள். தமிழ் தேசியப் பாடல் ஒலிப்பது நம் உரிமை. தொடர் கொள்ள வேண்டிய எண் 8754542222.
-ராவணன் தமிழன்
No comments:
Post a Comment