Thursday, October 3, 2013
வானகத்தில் (மார்ச் 2012ல்) பயிற்சி பெற்றவரின் (லட்சுமி நாராயணன் ) முயற்சிக்கு கிடைத்த வெற்றி : வாடி வதங்கும் வீரிய ரகம்... பசுமைக் காட்டும் பாரம்பரிய ரகம்... மானாவாரியிலும் மகத்தான வளர்ச்சி!
நவீனக் கண்டுபிடிப்புகள் எத்தனை வீரியமாக இருந்தாலும்... அவை, இயற்கையை ஒருபோதும் வெல்ல முடிவதில்லை. இது, பற்பல முறைகள், பற்பல ரூபங்களில், சந்தர்ப்பங்களில் நிரூபிக்கப்பட்டாலும், அறிவியல் அறிவுதான் உசத்தி என்கிற இறுமாப்போடு இருப்ப-வர்கள்... அதைப் புரிந்து கொள்வதில்லை என்பதுதான் உண்மை. இதோ... இங்கே மீண்டும் ஒரு முறை இயற்கை, தனது வலிமையை நிரூபித்துக் காட்டியிருக்கிறது. கடந்த மாதம் வரை மழை இல்லாமல், வறட்சியில் வாடியது, தமிழ்நாடு. அந்தக் கடுமையான வறட்சியைத் தாக்குப்பிடிக்க முடியாமல் வீரிய நெல் ரகங்கள் வாடிக்கிடந்த போதும், பசுமைக் காட்டி செழித்து நிற்கின்றன, பாரம்பரிய நெல் ரகங்கள்!
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகேயுள்ள முப்பையூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் வழக்கமாக மானா-வாரியாகத்தான் நெல் சாகுபடி நடக்கிறது. இந்தப் பகுதி விவசாயிகள் பெரும்பாலும் ஜே.ஜி.எல். என்கிற வீரிய ரகத்தைத்தான் விதைக்கிறார்கள். புதுச்சேரியைச் சேர்ந்த லட்சுமி நாராயணன், இந்த ஊரில் தனக்குச் சொந்தமாக இருக்கும் நிலத்தில், மானாவாரியாக நெல் சாகுபடி செய்து வருகிறார்.
இவர், 11 ஏக்கரில் பாரம்பரிய ரகங்கள், 6 ஏக்கரில் ஜே.ஜி.எல். ரகம் என்று விதைத்திருக்கிறார். ஆனால், எதிர்பார்த்தபடி மழை இல்லாத நிலையில், பயிர்கள் வாட ஆரம்பித்து, கிட்டத்தட்ட ஒரு மாதத்தில் ஊர் முழுக்க வீரிய ரக நெற்பயிர்கள் கருகும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன. அதேசமயம்... பாரம்பரிய ரகங்கள் மட்டும் பசுமைக் கட்டி நின்றிருக்கின்றன. சுற்றுவட்டார விவசாயிகள் மத்தியில் ஆச்ச-ரி-யத்தை ஏற்படுத்திய இந்தச் செய்தி, நம் காதுகளையும் அடைய... லட்சுமி நாராயணனை, அவ-ருடைய வயலில் சந்தித்தோம்.
வரப்பில் நடந்தபடியே நம்மிடம் பேசியவர், ‘‘எங்களுக்குச் சொந்தமா 60 ஏக்கருக்கு மேல நிலம் இருந்தது. நான் பேங்க் வேலைக்குப் போயிட்டதால, விவசாயம் பாக்க ஆளில்லாம, நிலங்களை எல்லாம் அப்பா வித்துட்டாரு. பேங்க்ல அக்ரி மேனேஜராக நான் இருந்தப்போ... பல தோட்டங்களைப் பாக்கறதுக்காகப் போவேன். அப்போ, எனக்கு திரும்பவும் விவசாயத்து மேல ஆர்வம் வந்துச்சு. அதனால, ரிட்டையர்டு ஆனதுக்குப் பிறகு இங்க 30 ஏக்கர் நிலம் வாங்கினேன்.
நான் வாங்குறப்போ இந்த இடம் முழுக்க சீமைக்கருவேல் புதர் மண்டிக் கிடந்தது. இப்போதைக்கு 17 ஏக்கரை மட்டும்தான் சரி பண்ணி விவசாயம் பண்ணிக்கிட்டு இருக்கேன். இங்க, கிணறோ, போர்வெல்லோ கிடையாது. வருஷத்துக்கு ஒரு தடவை மானாவாரியா நெல் சாகுபடி மட்டும்தான் செய்ய முடியும்’’ என்று முன்னுரை கொடுத்த
லட்சுமி நாராயணன் தொடர்ந்தார்.
நன்றி :
-பசுமை விகடன் 10.12.12
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment