Monday, September 23, 2013

"எதை பெற்று விட்டோம்" எதை பெற்று விட்டோம் இப்படி மகிழ்ச்சி பெரு வெள்ளத்தில் நீந்த! ஒன்றும் இல்லை, இந்த மாகான சபை முறைமை சிங்கள, இந்திய தேசத்தின் கூட்டு சதி.




 
இந்த தேர்தல் வெற்றியை சிங்களமும், இந்தியமும்,சிங்கள இந்திய கைக்கூலி பத்திரிகைகளும் , சில அறிவில்லாத தமிழ் மூடர்களும் எதோ தமிழினத்திற்கு எல்லாம் கிடைத்து விட்டது, அவர்களின் எல்லா பிரச்சினைகளும் தீர்ந்து விட்டது என்பது போல் காட்ட முற்படுகிறார்கள்.


 
இந்த மாகான சபை முறைமை என்னும் தமிழினத்தை பிரித்தாளும் கொடிய சூழ்ச்சிக்காக இந்திய பயங்கரவாத அரசுடன் போராடி, அதற்காக ஆயிரத்திக்கும் மேற்ப்பட்ட மாவீரகளையும், பல்லாயிரம் தமிழ் உறவுகளையும் நாம் மறக்கவில்லை. அதற்காக நாம் கொடுத்த விலைகளையும், அனுபவித்த வலிகளையும் மறக்கவில்லி.

நேற்றைய தேர்தல் வெற்றி என்பது , எம் இனம் தன்னாட்சி உரிமையை நாம் கைவிடவில்லை, அதற்கான போராட்டம் தொடரும் என்பதை கூறி நிக்கிறதே தவிர, இந்த மாகான சபை முறைமையை ஏற்று கொள்வதாக என்று எண்ண கூடாது.

எதை பெற்று விட்டோம் இப்படி மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்த, ஒன்றும் இல்லை, எம் பயணம் எல்லாம் தன்னாட்சி உரிமைக்கான "பொது வாக்கெடுப்பும், ", இனப்படுகொலைக்கான தண்டனையுமே " அன்றி . தைவிட வேறெதுவும் இல்லை.

இதை எதிர்பவர்கள் எவராக இருப்பினும் ஈன துரோகிகளே,

தமிழரின் தாகம் தமிழ் ஈழ தாயகம்.

-ராவணன் தமிழன் 




No comments:

Post a Comment