Friday, September 13, 2013

தமிழர் தேசிய விடுதலை தமிழில் படித்தவர்களுக்கு வேலையளிப்பதிலயே இருக்கிறது

படம்

நோக்கம் இருக்கும் தமிழ் தேசியவாதிகளிடம் பணமில்லை, பணமிருக்கும் தமிழர்களிடம் தமிழ் தமிழ் தேசிய நோக்கமில்லை. இவை இரண்டும் ஒன்று சேரும் போதே தமிழர் என்கிற மூத்த குடி இனம் விடுதலை பெரும்.

தமிழ் கணினியில் இருக்கிறது, அதை தமிழில் பயன்படுத்தும் நோக்கம் தமிழர்களிடம் இல்லை. ஆங்கிலத்தின் மீது மோகம் கொண்ட அடிமைகளாக வாழ்கின்றனர். தாய்மொழி கல்வியை தவிர்க்கின்றனர்; ஏன் இந்த அவள நிலையென்று சற்று சிந்திப்போம்.

தமிழில் படித்தால் வேலைகள் கிடைப்பதில்லை என்பதே அடிப்படை பிரச்சனை. தமிழ் தேசிய நோக்கமும், பணமும் உடையவர்கள் அவரவர் பகுதியில் மொழிப்போர் ஈகைகளாக இறந்தவர்கள் பேரில் ஒரு வலைத்தள மையம் அமைத்து பல கணினிகளை வைத்து தமிழில் படித்தவர்களுக்கு மட்டும் வேலையளிக்கலாம். இதனால் தமிழில் படித்தவர்களுக்கும் வேலை கிடைக்கும், வருமான வாய்ப்பாகவும் இருக்கும்.

ஒற்றை சொற் தேடலில் இப்போது விக்கிபீடியா சிறந்த ஐந்து தளங்களில் ஒன்றாக இருக்கிறது. நாம் இதே போல் ஒரு  வலைதளத்தை வாங்கி அதை வடிவமைத்து விக்கிபீடியாவை போல் உருவாக்கலாம்.

இதுவே தமிழ் தேசிய விடுதலைக்கான முதல் படி.

வென்றாக வேண்டும் தமிழ், அதற்க்கு ஒன்றாக வேண்டும் தமிழர்.

-புவிநன் .

No comments:

Post a Comment