
தமிழ் நாட்டுக்கும் தமிழ் ஈழத்துக்கும் இடையில் இருந்த நிலப்பகுதிகடல் கோலால் நீர் பெருக்கெடுத்து மண் அரித்துச் செல்லபட்டு விட்டது இன்று இரண்டு நாடுகளுக்கும் நாடுவில் உள்ள நிலப்பரப்புக்கிடையில் கல் திட்டுகளை மிக தெளிவாக பாக்கக்குடியதாக இருக்கின்றது இராமறினால் போடப்பட்டது மிதக்கும் பாலம் அல்லவா
ஆரியர்களின் பொய் புரளிகளுக்கு அளவே இல்லை ராமர் கட்டிய பாலம் நம்ப முடியாததும் நகைப்புக்குரியதும்
இலங்கையில் தமிழ் இனத்தை இல்லாது செய்து சிங்கள பௌத்த நாடக மாற்றுவதற்காக எழுதப்பட்ட பல பொய்கள் நிறைந்த மகவம்சத்தைப் போல் ராமாயணமும் உள்ளது
தமிழர்களை அடக்கி ஆல்வதர்க்கும் அடிமைகளை இருண்ட உலகில் வைத்திருப்பதர்க்குமே ராமாயணமும் மகாவம்சமும் எழுதப்பட்டது
ஒரு இனம் தன்னுடைய வரலாறு பற்றி மிகத் தெளிவான விளக்கத்தை தன்னகத்தே கொண்டிருப்பதென்பது அதனது மிகப் பெரிய பலம் என்றுதான் கூறவேண்டும். தனது இனத்தின் வரலாறு, வரலாற்றுச் சம்பவங்கள், அந்தச் சம்பவங்களுக்கான ஆதாரங்கள், அந்த இனத்தின் வழித் தோன்றல்கள், பரம்பரைகள் என்று பல விடயங்கள் பற்றிய அறிவையும் தெளிவையும் ஒரு இனம் நிச்சயம் கொண்டிருக்கவேண்டும். உலகத்தால் அங்கீகரிக்கப்படுவதற்கு இந்த அறிவும் தெளிவும் மிக மிக அவசியம்.
யூதர்களுக்கு இனது இனத்தின் தோற்றம், வளர்ச்சி பற்றிய அறிவும் தெளிவும் மிக அதிகமாகவே இருக்கின்றது. தமது இனத்தின் வலாறு பற்றிய அறிவு இல்லாத யூதர்களே இல்லை என்று கூறலாம். யூதக் குழந்தைகள் கூட தமது இனம் பற்றி, தமது மொழி பற்றி, தமது மதம் பற்றி மிக மிக விரிவான அறிவைத் தமதாகக் கெண்டவர்களாக இருக்கின்றார்கள். யாருக்கு யார் பிறந்தது. தமது சந்ததி என்ன? 3000, 4000 வருடங்களுக்கு முன்னர் தமது இனத்தை ஆண்ட அரசர்கள் யார், அவர்களது சந்தியினர் யார் என்ற வரலாறு ஆதாரங்களுடன் யூதர்கள் கரங்களில் இருக்கின்றது.
ஈழத் தமிழரைப் பொறுத்தவரையில் எம்மிடம் - எம்மில் பலரிடம் இருக்கின்ற ஒரு மிகப் பெரிய குறை இதுதான்.
தமிழின் வரலாறு எமக்கு தெரியாது. ஆரியர்களுடைய வரலாற்றைத்தான், அவர்கள் புனைந்த கதைகளைத்தான் நாம் தமிழின வரலாறாக கூறிக்கொண்டிருக்கின்றோம்.
ஒரு தமிழ் அரசன் ஆரியர்களால் அழிக்கப்பட்ட தினத்தை ஆரியர்கள் கொண்டாடுகின்றார்கள். அந்த கொண்டாட்டத்தை விளக்கம் தெரியாமல் நாமும் கொண்டாடுகின்றோம்- தீபாவளியென்று. (முள்ளிவாய்க்காலில் சிங்களவர்கள் பெற்ற வெற்றியை எதிர்காலத்தில் சிங்களவர்களுடன் சேர்ந்து எமது சந்ததிகள் கொண்டாடுவதைப் போன்றதுதான் இது)
தமிழர்களின் வரலாறு பற்றிய அறிவை நாம் கொண்டிருக்கவேண்டும்.
தொல்காப்பியம் பற்றியும் அதன் உள்ளடக்கம் பற்றியும் நாம் தெரிந்திருக்கவேண்டும். ஆத்திசூடி எங்களில் எத்தனை பேருக்கும் தெரியும்?
எமது இனத்தின் பெருமைகள் பற்றி ஒவ்வொருவரும் அடிக்கடி பேசிக்கொள்ளவேண்டும். எமது அடுத்த சந்ததிக்கு கூறி வைக்கவேண்டும்.
ஒரு இனம் விடுதலையை நோக்கிப் பயணிக்க வேண்டுமானால், அந்த இனத்திற்கான உலக அங்கீகாரம் மிக மிக அவசியம்.
No comments:
Post a Comment