Friday, September 20, 2013

மக்களுக்கான அரசு என்று மலரும்? " நாங்களும் எல்லோரும்போலவே படிக்கிறோம். பட்டங்கள் வாங்குகிறோம். எங்களுக்கான வேலையை அரசு தருவதில்லை.அதற்காக கேட்டு போராட வந்தால் காவல்துறை உள்ளே தள்ளி அடிக்கிறார்கள் அண்ணா" என்கிறார் பார்வையற்ற மாற்றுதிறநாளி ஒருவர்

இன்று அலுவலகத்திற்கு வரும் வழியில் கிண்டி ரயில் நிலையம் அருகில் பெரும் திரளான மக்கள் முழக்கங்களை எழுப்பிக்கொண்டு இருந்தனர். அவர்களை சுற்றி வளைத்து காவல்துறையினர் அங்கே என்ன நடக்கிறது என்பதே தெரியாத வண்ணம் சூழ்ந்து கொண்டு நின்றுக்கொண்டு அங்கே போவோர் வருவோர் நின்று பார்க்காதவாறு விரட்டிக்கொண்டு இருந்தனர். அங்கிருந்த ஒருவரிடம் விசாரித்தபோது தெரிந்தது அவர்கள் மாற்றுத்திரனாளிகள். தங்கள் உரிமைகளுக்காக போராடுகொன்றனர் என்று. அங்கு அருகில் சென்று பார்த்தபோது காவல்துறையினர் அவர்களை நடத்தும் விதம் மிகவும் கண்டிக்கத்தக்கதாக இருந்தது. அவர்களை மாற்றுத்திரனாளிகள் என்றும் பாராமல் இழுத்து அங்கே நிருத்தப்பட்டுருக்கும் வேனில் ஏற்றிக்கொண்டு செல்கின்றனர். சற்று தொலைவில் நின்றுகொண்டிருந்த வேன் ஒன்றின் சன்னல் வழியாக ஒரு பெண் பேசியது கண்கலங்க வைத்தது. " நாங்களும் எல்லோரும்போலவே படிக்கிறோம். பட்டங்கள் வாங்குகிறோம். எங்களுக்கான வேலையை அரசு தருவதில்லை.அதற்காக கேட்டு போராட வந்தால் காவல்துறை உள்ளே தள்ளி அடிக்கிறார்கள் அண்ணா" என்கிறார்.

மற்ற போராட்டங்களை போல சுவரோட்டியோ கோரிக்கைகளை சொல்லும் துண்டரிக்கையோ இல்லாமல் நடக்கும் இந்த போராட்டம். காரணம் அதற்கான பணபலமோ உடல் பலமோ இவர்களிடம் இல்லை. எற்றத்தாழ்வில்லாத சமுதாயத்தை உருவாக்க எண்ணும் நாம் தானே இவர்களுக்காகவும் போராடி இருக்க வேண்டும். ஊடகங்களும் இவர்களுக்காக பேசுவதில்லை. ஒரு ஐந்து தலை பாம்பு எங்காவது வந்தால் ஓடி போய் காட்சிப்படுத்தும் ஊடங்கங்களுக்கு இவர்களின் குரல் கேட்காது. இவர்களின் குரலில் பொழுதுபோக்கு அம்சம் இல்லையே. இவர்களை கண்டும் காணாமல் போகும் மக்கள் தாமே நாம்.

பார்த்துவிட்டு பரிதாபப்பட்டுவிட்டு தமது வேலையை பார்க்கும் மற்ற சுயநலவாதிகளை போல நானும் கடந்து சென்றேன். ஆனால் இவர்களுக்காக ஏதேனும் செய்யவேண்டும் என்ற எண்ணம் இன்னும் இருக்கின்றது.

-செந்தில்குமார்

No comments:

Post a Comment