Showing posts with label ஈகையர்கள். Show all posts
Showing posts with label ஈகையர்கள். Show all posts

Sunday, October 20, 2013

முல்லைக் கடற்பரப்பில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா கடற்படையின் டோறா கடற்கலங்களை வழிமறித்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலி மேஜர் றோசா உட்பட கடற்புலி போராளிகளின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.



|| கடற்கரும்புலிகள் பாகம் 06ல் "அலையின் காற்றிலே" எனும் கானம் (லெப் கேணல் அமுதசுரவியுடன் இணைத்து) இவர் வீரம் உரைத்து இசைக்கிறது......

கடலிடை உயிர்பூவைச் சொரிந்த உயிராயுதமாக சென்றவர்கள் இதே நாளில் தாயக விடுதலை வேள்வி தன்னில் கடலிலும் - தரையிலும் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

|| புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் ||

Wednesday, October 9, 2013

| தமிழீழப் பெண்களின் எழுச்சிக்கு வித்தாகி வீழ்ந்த விடுதலைச்சுடர்!



எமது சமூகத்தில் வேரூன்றியிருந்த, பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். பெண்ணானவள் இப்படித்தான் இருப்பாள். இதற்கு மேல் அவளால் முடியாது. ஆணைவிட பெண்ணுக்கு ஆற்றல் குறைவு என்ற கருத்துக்களை – 2ஆம் லெப். மாலதி பொய்யாக்கினாள்.

பெண்ணினால் எல்லாம் முடியும் என்று செய்து காட்டினாள். அந்நிய ஆக்கிரமிப்பில் எமது தேசம் துவண்டிருந்த போது வீறு கொண்டெழுந்தாள். பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாவதைப் பார்த்துக் கொதித்தாள்.

நாட்டின் விடுதலையோடு பெண்ணினத்தின் விடுதலையையும் கருத்தில் கொண்டு ஆயுதம் தூக்கியவள், அந்த இலட்சியக் கனவோடே வீரச்சாவை தழுவிக் கொண்டாள்.

அன்று (10.10.1987 ) நடுராத்திரியில் தமிழ் பெண்களுக்கு அநீதி இழைத்த, வல்லாதிக்க இந்திய இராணுவத்தை எதிர்கொள்ள கோப்பாய் கிறேசர் வீதியில் காத்திருந்தாள்.

1987 அக்டோபர் 10 ஆம் திகதி நள்ளிரவு 1 மணியளவில் இந்திய வல்லாதிக்க இராணுவம் மீது அவளது எம்16 ரக துப்பாக்கியிலிருந்த குண்டுகள் சீறிப்பாய்ந்தன. அந்தத் தாக்குதல் 2 ஆம் லெப் மாலதியின் இறுதித் தாக்குதல்.

புலிகள் போராட்ட வரலாற்றில் முதல் பெண் போராளி 2 ஆம் லெப் மாலதி வித்தாகி வீழ்ந்தாள். அது தமிழீழப் பெண்களின் எழுச்சிக்கு வித்தாகவும் அமைந்தது.

தமிழ்த்தேசிய உணர்வுகளை கட்டியெழுப்பி புதிய பெண்ணெழுச்சிக்கு வழிசமைப்பதே அவளது இலட்சியமாக அமைந்தது

பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். பெண்ணானவள் இப்படித்தான் இருப்பாள். இதற்கு மேல் அவளால் முடியாது. ஆணைவிட பெண்ணுக்கு ஆற்றல் குறைவு என்ற கருத்தை ஆழமாக கொண்டே மனித சமூக அமைப்பு வேரூன்றிவிட்டது.

வரலாற்றில் எழுந்த இலக்கியம், இதிகாசம், புராணம் என எதுவானாலும் பெண்ணின் புற அழகிற்கே முக்கியத்துவத்தை கொடுத்து பெண்ணின் பலத்தை வெளிக்கொணராமல் போயுள்ளன. பெண் எனப்பட்டவள் இயலாமையின் வடிவம் என்ற பிம்பத்தை தோற்றுவிப்பதில் சமூகத்தின் பிற்போக்குவாதிகள் வெற்றி கண்டுள்ளனர்.

வீட்டில் ஆண் குழந்தை பிறந்துவிட்டால் மகிழ்ச்சி பெருமிதம். பெண் பிறந்துவிட்டால் கவலை. ஏக்கப் பெருமூச்சு. இதுதான் இன்றுள்ள நிலை. இந்த அவலம் ஏன் நமக்கு ஏற்பட்டது?

ஏன் எங்கள் மனங்களில் மாற்றம் வரவில்லை. ஒரு ஆணுக்குரிய ஆற்றல் அவ்வளவும் பெண்ணுக்குள்ளும் இருக்கிறதுதானே. அப்படியிருந்தும் சமூகத்தில் ஏன் இந்தப் பாகுபாடு?

இந்தக் கேள்விகள் எல்லோர் மனங்களிலும் எழவேண்டும். இதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைக்கும் திறன் புதிய தலைமுறைக்கு உண்டு.

மனிதகுல வரலாற்றில் கிறிசுதுவுக்கு 6000 (ஆறாயிரம்) ஆண்டுகளுக்கு முன் தாய் வழிச் சமூகமே இவ்வுலகில் ஆட்சி புரிந்தது. காடுகளில் குழந்தைகள் குழுக்களாக வாழ்ந்த காலத்தில் தாயின் இராச்சியமே நடைபெற்றது.

குழுவிற்கு தாய்தான் தலைமை தாங்கினாள். பெண்ணே பெரிதாக மதிக்கப்பட்டாள். தாய் என்ற சொல்லே மருவி தலைவி என்றாகிவிட்டது என வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.

தன்னுடைய இனத்தைக் காக்கும் சக்தியாக பெண் விளங்கினாள். அவளின் சக்திக்கு கட்டுப்பட்டு பின்னால் செல்ல அவளது சமூகம் தயாராகவிருந்தது அன்று. தனது இனத்தை பாதுகாக்கவும்,

அவர்களுக்கு உணவு கொடுக்கவும், தேவையானவற்றை தேடிக் கொடுக்கவும், தாயானவள் தன்னைப் பலி கொடுக்கவும் தயாராகவிருந்தாள் என்பது உயர்ந்த தியாகமாகும். அது அன்றே இருந்தது.

எதிரிகளிடமிருந்தும் காட்டு விலங்குகளிடமிருந்தும் தனது இனத்தை காக்க தானே தலைமை தாங்கி வழி நடத்தினாள். பஞ்சாயத்து சபையை நிறுவி நிர்வாகம் செய்தாள். அன்றைய பெண்ணும் போர் முனைகளைச் சந்தித்தவள்தான். எதிரிக் குழுக்களை தாக்க, வேட்டையாட தானே ஆயுதங்களைக் கொண்டு முன்னே சென்று தாக்குவாள்.

அந்த தாய்க்குப் பின்னால் தான் அவளது குழுவைச் சேர்ந்த பெண்களும், ஆண்களும் வருவார்கள். சண்டை செய்வார்கள். சாவைச் சந்திப்பார்கள். வெற்றி பெறுவார்கள்.

மலைகளின் மீது மான்களைப் போன்று ஏறி எதிரியை விரட்டவும், தேனை எடுக்கவும் அந்தப் பெண்களால் முடிந்தது. தேன் குடிக்க கரடி ஏற முடியாத இடத்தில் கூட ஏறி நின்று தேன் குடிப்பாள் வீரமங்கை. கல்லினால் கூரிய ஆயுதம் செய்யவும், தோலினால் கருவி செய்யவும், பாத்திரம் செய்யவும், அழகிய குடிசை கட்டவும், நடனமாடவும் அந்தப் பெண்களால் முடியும்.

எலும்பாலும், கல்லாலும், மரத்தாலும், கொம்பாலும் செய்யப்பட்ட விதம் விதமான கூரிய ஆயுதங்களால் பெண்கள் சண்டை போட்டார்கள். தமக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய எதிரிகளை தேடி, தேடி தாக்கி அழித்தார்கள்.

கி.மு. 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் பெண்கள் ஆளுமையே இருந்தது. அக்காலத்தில்தான் சமூகம் முழுவதும் ஒரே குடும்பமாகவிருந்தது என ஆய்வாளர்கள் எடுத்துக் கூறுகின்றனர். இதனை மெய்ப்பிப்பது போல அகழ்வாராய்வின்போது மிகப் பழமையான காலத்து வரலாற்று ஆவணங்களில் சக்தி வழிபாட்டு முறை இருந்து வந்துள்ளதை சுட்டுகின்றனர்.

உலகில் சரிபாதியினர் பெண்கள், எமது சமூகத்திலே சரிபாதியினர் பெண்கள். இந்தச் சரிபாதித் தொகையினரான பெண்கள் போராட்டத்தில் பங்கு பெறாது எமது தேசத்தின் விடுதலை சாத்தியப்படாது.

சரிபாதியினரான பெண்களுக்கு விடுதலையின்றி எமது தேசவிடுதலையும் முழுமை பெறாது என்பது தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரனின் கருத்தாகும். அடக்கு முறையின் வடிவமாக பெண்ணை ஆளாக்கியுள்ள நமது சமூகம் அந்தத் தளையை அறுக்க முன்வரவில்லை. பெண் ஒடுக்குமுறைக் கருத்துகள் இன்னமும் பலமான நிலையில் பேசப்படுகின்றன. அவ்வாறான சமூக கட்டமைப்பு எழுதப்படாத வாக்கியமாக நிலைத்து நிற்கிறது.

சாதி வேறுபாடுகள், மூட நம்பிக்கைகள் புரையோடிப் போயிருந்த சூழ்நிலையில் பெண்கள் அதிலே புதையுண்டு போனதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. தமிழரது வாழ்வில் அடிமைத்தனம் என்பது பல ஆண்டுகளாக நீடித்துள்ளது. அந்நியப் படையெடுப்புகளால் தமிழரது கலாசாரம் பண்பாடு என்பன சிதையுண்டு போயுள்ளன.

தமிழர் வாழ்வில் பெண் மதிக்கப்பட்டு அவளுக்குரிய கௌரவம் வழங்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் ஆரியப்படைகளுக்கு தமிழன் அஞ்சியோடவில்லை. ஆனால் வஞ்சகமாக ஆன்மீக தத்துவங்களை புகுத்தி ஆரிய சக்கரவர்த்திகள் தமிழ் நாடுகளை அடிபணிய வைத்தார்கள். அதுதான் தமிழ்மக்களின் தமிழ்ப் பெண்களின் வாழ்கையை சிதைத்தது.

ஆரிய பார்ப்பன துரோகிகள் போட்ட விதைதான் பெண்ணடிமை, சீதனம், சாதிமுறை, குலதொழில் என்பன. இன்றுகூட இந்திய ஒன்றியத்தில் பெண்கள்படும் இழிவுநிலை ஏராளம். இந்திய ஒன்றியத்தில் ஆதிக்கம் ஈழத்திலும் நிலை கொண்டதனால் ஈழப்பெண்களும் இதுபோன்ற அடக்கு முறைக்கு ஆளாகினர்.

அன்று எமது சமூகத்தில் பெண்களுக்கெதிரான சமூக அநீதிகள் அதிகரித்திருந்தன. பெண் அடக்குமுறைக் கருத்துகள் பலமாக நிலவின. எமது சமூகமே சாதி சமய வேறுபாடுகளால் ஆழமாகப் பிளவுபட்டு நின்றது.

எல்லாவற்றுக்கும் மேலாக நிலச்சுவாந்தர் முறைமையையும், சாதியக் கட்டமைப்புக்களையும் இறுக்கமாகப் பின்னிப்பிணைத்து அமைந்த பொருளாதார உற்பத்தி முறையில் எமது சமூகக் கட்டமைப்பு எழுதப்பட்டிருந்தது.

அது சுய சிந்தனைக்கு வரம்புகளை விதித்தது. பெண்கள் தாம் அடக்கு முறைக்குள் வாழ்கிறோம் என்பதை உணரவிடாது தடுத்தது. அத்தோடு எதிரியின் இன அழிப்புப் போர் என்றுமில்லாதவாறு எம்மண்ணில் தீவிரமடைந்திருந்தது. அந்நிலையில் அடிப்படையான சமூக மாற்றத்தை ஏற்படுத்தி பெண் விடுதலைக்கு வழிசமைப்பது பற்றி நாம் சிந்திக்க முடியாதிருந்தது.

எனவே விடுதலைப் போராட்டத்தில் பெண்களையும் அணி சேர்ப்பதினூடாகப் படிப்படியாக சமூகமாற்றத்தை ஏற்படுத்தி பெண் விடுதலையையும், தேசவிடுதலையையும் சாத்தியமாக்கலாம்.

இவ்வாறுதான் எமது போராட்டத்தில் பெண் புலிகள் தோற்றம் பெற்று இன்று எதிரியின் படைப்பலத்தைச் சிதைத்து யுத்தத்தின் போக்கையே நிர்ணயிக்கின்ற பெரும் படையணிகளாக எழுந்து நிற்கிறார்கள்.

ஒரு நூற்றாண்டுக்கு மேலாக மேற்குலகப் பெண்கள் பெரும் போராட்டங்களை நிகழ்த்தி, புரட்சிகளை நடத்தி விவாதங்களை புரிந்து கருத்தமர்வுகளை மேற்கொண்டு பெற்றெடுத்தவற்றைவிட எமது பெண் புலிகள் மிக்க குறுகிய காலத்துக்குள் எமது பெண்களுக்குப் பெற்றுக் கொடுத்த உரிமைகளும், சுதந்திரங்களும் அளப்பரியவை.

அத்தோடு சமூகத்திலே பெரும் புரட்சியை நிகழ்த்தியிருக்கிறார்கள். சமூகக் கருத்துலகில் புதிய பார்வையை வளர்த்து வருகிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக ஆணும், பெண்ணும் சமமான ஆற்றல்களுடனேயே படைக்கப் பட்டிருக்கிறார்கள் என்ற உடற் கூற்றியல் நிபுணர்களது, கூற்றுக்கு பெண் புலிகளே உலகுக்கு உதாரணமாக வாழ்கிறார்கள் என பெண் போராளிகள் பற்றி தலைவர் பிரபாகரன் பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார்.

உலகில் பெண்கள் மோசமான அடக்கு முறைக்கு ஆளாகி வந்துள்ளனர். இற்றைக்கு சுமார் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன் தாய்வழிச் சமூக அமைப்பு சிறப்புற்று விளங்கியது.

அதன்பின், கால வெள்ளத்தில் தாய் வழி சமூக அமைப்பு முறைகள் பல்வேறு காரணிகளால் சிதைந்துபோய் ஆணாதிக்க முறைமைகள் தோற்றம் பெற்றன. இன்றும் உலகில் பெண்கள் மோசமாக நடத்தப்படுகிறார்கள். மேற்காசியா, ஆபிரிக்கா மற்றும் இசுலாமிய மதக் கோட்பாடுகளை தீவிரமாக பின்பற்றும் நாடுகளில் பெண்களின் உரிமைகள் அடியோடு மறுக்கப்பட்டு வருகின்றன.

இந்திய ஒன்றியத்தில் ஆரியர்களின் மனுதர்ம சாசுதிரம் பெண்களுக்கு எதிராக சமூக நீதிகளை அதிகரிக்க செய்திருக்கின்றன. சாதியம், அடிமைத்தனம் போன்றவற்றை ஆழப்பதித்திருக்கின்றன. வரதட்சனை, இரத்த உறவு திருமணம், கொடுமை, சித்திரவதை, உயிர் நீப்பு என பெண்களுக்கிழைக்கப்படும் கொடுமைகள் ஏராளம்.

எகிப்து நாட்டை தாலமி அயோலேட்டஸ் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனுடைய மகள் கிளியோபாட்ரா! தாலமி இறப்பதற்கு முன் அவள் தம்பி ஏழாவது தாலமி, சகோதரி கிளியோபாட்ராவை திருமணம் செய்து கொண்டு நாட்டை ஆளவேண்டுமென அறிவித்தார். அதன்படி இருவருக்கும் திருமணம் நடந்தது. அப்போது கிளியோபாட்ராவுக்கு வயது 16. தாலமிக்கு வயது 10. இது ஒரு செய்தியல்ல.

20 நூற்றாண்டுகளுக்கு முன்னரும் இப்படி பெண்ணியல் பற்றி பெண்ணுரிமை பற்றி, யாரும் வாய் திறக்கவில்லை. அப்போதும் பெண் அடிமைதான். இப்போதும் பெண் அடிமைதான் எகிப்து நாட்டில்.
அக்டோபர் 10 தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும் 2 ஆம் லெப்டினன் மாலதியின் நினைவு நாளும் ஆகும். அடக்கி ஒடுக்கப்பட்டிருந்த தமிழீழப் பெண்கள் இன்று தலை நிமிர்ந்து நிற்கிறனர். தீரத்தினாலும், தியாகத்தினாலும், விவேகத்தினாலும் உலகப் பெண்களுக்கு வழிகாட்டியாக உயர்ந்து நிற்கின்றனர் என்பதை அனைவரும் ஏற்றுள்ளனர்.

ஐம்பது வருட கால ஆக்கிரமிப்புக்கும் முப்பது வருடகால கொடிய போருக்கும் தமிழீழப் பெண்கள் முகம் கொடுத்து தமது நுண்ணிய ஆற்றலினால் அனைத்து தடைகளையும் அறுத்தெறிந்து வருகிறார்கள்.

தலைவர் பிரபாகரனின் காலத்தில் பெண்கள் அனைத்துத் துறைகளிலும் தம்மை வளர்த்தது மட்டுமன்றி தமிழ்த்தேசத்தின் விடுதலைக்காக தமது இன்னுயிர்களை அர்ப்பணித்தும் வருகிறார்கள். தமிழ்த்தேசிய உணர்வுகளை கட்டியெழுப்பி புதிய பெண்ணெழுச்சிக்கு வித்திட்டுள்ளார்கள்.

அதிகாரப் போக்கினாலும், ஆக்கிரமிப்பாளர்களின் ஆயுத வெறியினாலும், தமிழர்களின் சனநாயக உரிமை நசுங்கியது. ஆனால் இளைய பெண் தலைமுறை சுதந்திர வேட்கை கொண்டு விடுதலைக்காக ஆயுதக் கருவிகளை கையிலேந்தி தீர்த்த தீரமான வேட்டுக்களாலே இன்று சனநாயகம் மலர்ந்தது மட்டுமல்ல, பெண்ணினத்தின் விடுதலையும் முழுமை பெற்றது.

ஆண் பெண் சமநிலை புத்துயிர் பெற்றுள்ளது.

2ஆம் லெப். மாலதி அந்த இலட்சியக் கனவோடுதான் வீரச்சாவை தழுவிக் கொண்டாள்.

அந்த நடுராத்திரியில் வல்லாதிக்க இந்திய இராணுவத்தை எதிர்கொள்ள கோப்பாய் கிறேசர் வீதியில் காத்திருந்தாள். இந்திய ஒன்றியத்தின் இராணுவம் தமிழ் பெண்களுக்கு இழைத்த அநீதி இன்னமும் தமிழர் மனங்களில் ஆறாத காயமாகவுள்ளது.

1987 அக்டோபர் 10 ஆம் திகதி நள்ளிரவு 1 மணியளவில் இந்திய ஒன்றியத்தின் வல்லாதிக்க இராணுவம் மீது அவளது எம்16 ரக துப்பாக்கியில் குண்டுகள் சீறிப்பாய்ந்தன. அந்த தாக்குதல் 2 ஆம் லெப் மாலதியின் இறுதி தாக்குதல்.

புலிகள் போராட்ட வரலாற்றில் முதல் பெண் போராளி 2 ஆம் லெப் மாலதி வித்தாகி வீழ்ந்தாள். அதுவே தமிழீழப் பெண்களின் எழுச்சிக்கு வித்தாக அமைந்தது.
- ஆதிரை (புரட்சி)

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

Monday, October 7, 2013

தலைவர் பிரபாகரன் அவர்களால் தனது படையணிவீரர்கள் நூறுபேருக்கு சமனானவன் என்று புகழப்பட்டவரும்



சிங்களத்தால் அந்தக்காலத்திலேயே இவர் தொடர்பாக தகவல் தருபவர்களுக்கு 10 இலட்சம் பரிசு என்று அறிவிக்கப்பட்டவரும்

இவரின் பெயரைக்கேட்ட மாத்திரத்திலேயே சிங்களப்படையினர் சிறுநீர் கழித்த நிகழ்வுக்கு சொந்தக்காரரும்

இலங்கை - இந்திய கூட்டு சதியால் கைது செய்யப்பட்டு சயனைட்டு அருந்தி வீரச்சாவை தழுவிக்கொண்டிருந்த வேளையிலும் இரு சிங்கள இராணுவத்தினரை கொன்றொழித்த வீரனுமாகிய

தமிழர் படையின் தலைமைத் தளபதி லெப் கேணல் புலேந்திரன்.

-தமிழீழத்தின் வேங்கை

Wednesday, October 2, 2013

இடிமுழக்கம் படை நடவடிக்கைக்கு எதிரான சமரில் 03.10.1995 அன்று காவியமான லெப்.கேணல் ஜீவன், மேஜர் வெள்ளை உட்பட்ட 161 போராளிகளினதும் மட்டக்களப்பில் காவியமான 2ம் லெப். அன்பரசன் என்ற போராளியினதும் 18ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.



இடிமுழக்கம் நடவடிக்கைக்கு எதிரான சமரில் காவியமான 161 போராளிகளின் வீரவணக்க நாள்

இடிமுழக்கம் படை நடவடிக்கைக்கு எதிரான சமரில் 03.10.1995 அன்று காவியமான லெப்.கேணல் ஜீவன், மேஜர் வெள்ளை உட்பட்ட 161 போராளிகளினதும் மட்டக்களப்பில் காவியமான 2ம் லெப். அன்பரசன் என்ற போராளியினதும் 18ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

இடிமுழக்கம் என்ற குறியீட்டுப் பெயருடன் முன்நகர்ந்ந்து வலிகாமம் புத்தூர் பகுதியில் நிலை கொண்டிருந்த சிறிலங்கா படையினர் மீது 03.10.1995 அன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது தீரமுடன் களமாடி வெற்றிக்கு வித்திட்டு கல்லறையில் உறங்கும் மாவீரச்செல்வங்கள்…

லெப்.கேணல் ஜீவன் (ஆசிம்)

மேஜர் வெள்ளை (றொபேட்)

மேஜர் அருள்

|| இடிமுழக்கம் நடவடிக்கையில் …..

லெப்.கேணல் ஜீவன் (ஆசிம்) (அருளப்பு ஜேம்ஸ்குரூஸ் – மன்னார்)
மேஜர் வெள்ளை (றொபேட்) (சேனாதிராசா நாகராசா – முல்லைத்தீவு)
மேஜர் அப்பன் (ஜெசி) (தியாகராசா அருட்தியாகலிங்கம் – வவுனியா)
மேஜர் வசந்தன் (மணிமாறன்) (சுப்பிரமணியம் சுகுமாறன் – யாழ்ப்பாணம்)
மேஜர் அன்பு (கார்வி) (கந்தசாமி யோகேஸ்வரன் – மன்னார்)
மேஜர் நீரஜா (சேனாதிராசா ஜெயராணி – யாழ்ப்பாணம்)
மேஜர் அருள் (ஐயாத்தம்பி காந்தரூபன் – யாழ்ப்பாணம்)
மேஜர் வில்லாளன் (ஆனந்த்) (சிதம்பரநாதன் சிவானந்தராசா – யாழ்ப்பாணம்)
மேஜர் வீரமணி (கென்றி) (இராசரட்ணம் யோகராசா – யாழ்ப்பாணம்)
மேஜர் செங்கண்ணன் (வீரா) (முத்தையா கேதீஸ்வரன் – யாழ்ப்பாணம்)
மேஜர் சீராளன் (சூட்டி) (தர்மலிங்கம் கனகரத்தினம் – திருகோணமலை)
கப்டன் சண்முகம் (சின்னத்துரை கேதீஸ்வரன் – யாழ்ப்பாணம்)
கப்டன் அழகநம்பி (ஞானப்பிரகாசம் ஞானேந்திரன் – மன்னார்)
கப்டன் எழிற்செல்வன் (பவான்) (கைலாயநாதன் சரவணபவான் – யாழ்ப்பாணம்)
கப்டன் செவ்வேள் (விக்கி) (தர்மலிங்கம் புண்ணியலிங்கம் – மட்டக்களப்பு)
கப்டன் இளந்திரையன் (சேரன்) (திருநாவுக்கரசு சதீசன் – யாழ்ப்பாணம்)
கப்டன் சங்கிலியன் (நியூட்டன்) (கார்மேகம் விக்கினேஸ்வரன் – மன்னார்)
கப்டன் ஆனந்தராசா (இராசையா ஜெயசேகரன் – மன்னார்)
கப்டன் பொன்னழகன் (எட்வேட் மரியதாஸ் – கிளிநொச்சி)
கப்டன் பத்மினி (மயில்வாகனம் தயாவதி – யாழ்ப்பாணம்)
கப்டன் அம்மணி (மணி பரமேஸ்வரி – மன்னார்)
கப்டன் அமுதா (முருகேசு இந்திராகாந்தி – முல்லைத்தீவு)
கப்டன் நம்பி (தில்லைநடராசா மங்களமுருகநம்பி – யாழ்ப்பாணம்)
கப்டன் சங்கிலியன் (சியாம்) (தியாகராசா உயதகுமார் – யாழ்ப்பாணம்)
கப்டன் வீரபாண்டியன் (நசீர்) (கனகசபை ரூபேஸ்குமார் – திருகோணமலை)
கப்டன் தவசீலன் (பாலன் அல்விஸ் பிறல்சிலீஸ் – யாழ்ப்பாணம்)
கப்டன் சின்னக்குட்டி (மைக்கல்) (இராமையா சந்திரகுமார் – திருகோணமலை)
கப்டன் அன்பு (சிவசுந்தரம் ரவிக்குமார் – மட்டக்களப்பு)
கப்டன் பொறையாளன் (இராமலிங்கம் திவாகரன் – யாழ்ப்பாணம்)
கப்டன் அருமை (காந்தி) (கந்தசாமி சுதாபரன் – யாழ்ப்பாணம்)
கப்டன் அச்சுதன் (ரகீம்) (இராமசாமி ராஜீ – கண்டி)
கப்டன் அன்பரசன் (அனுஸ்) (கந்தசாமி ரவிச்சந்திரன் – யாழ்ப்பாணம்)
கப்டன் தமிழினியன் (ஜேம்ஸ்) (நாகலிங்கம் இராஜேஸ்வரன் – யாழ்ப்பாணம்)
கப்டன் சமுத்திரன் (பெருமாள்) (இரத்தினசிங்கம் சுரேஸ் – யாழ்ப்பாணம்)
கப்டன் மகான் (சின்னத்தம்பி மகாலிங்கம் – யாழ்ப்பாணம்)
கப்டன் சிவனேசன் (பிறேம்) (சின்னத்தம்பி செல்வநாதன் – யாழ்ப்பாணம்)
கப்டன் இளங்கோவன் (ஈழராஜ்) (இராமையா ஜெயரூபன் – கிளிநொச்சி)
கப்டன் இலக்கியன் (ஜீவராஜ்) (அந்தோனிச்சாமி சசிகரன் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் பழனி (மார்க்கண்டு பார்த்தீபன் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் ராகவன் (ரகு) (கதிர்காமர் சுரேசன் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் பிரதீபன் (அருள்ராஜ் சாந்தகுமார் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் கருவண்ணன (செல்லையா கெங்காதரன் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் காந்தன் (முருகன் யோகராசா – மட்டக்களப்பு)
லெப்டினன்ட் ரூபசீலன் (பரதர்) (சின்னவன் சிவகுமார் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் இறைகுமரன் (பரமன்) (குணரட்ணம் சண்முகராசா – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் செழியன் (குரு) (அரசசிங்கம் ரவீந்திரன் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் சரத்பாபு (தர்மலிங்கம் சதீஸ் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் குணாளன் (இம்மானுவேல் நிச்சாட் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் இளங்கோ (இரத்தினேஸ்வரன் செந்தில்நாதன் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் ஏந்தன் (வேணு) (கோபாலகிருஸ்ணன் சசிகுமார் – மட்டக்களப்பு)
லெப்டினன்ட் தமிழ்முடியான் (விக்ரம்) (கிருஸ்ணநாயர் பாஸ்கரன் – மட்டக்களப்பு)
லெப்டினன்ட் அன்பழகன் (கோபாலப்பிள்ளை சுசில்குமார் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் செம்முகிலன் (பாலசிங்கம் மணிவதனன் – முல்லைத்தீவு)
லெப்டினன்ட் மைந்தன் (சதீஸ்) (கனகரத்தினம் இரத்தினகுமார் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் சித்திரன் (செல்லையா சுப்பிரமணியம் – வவுனியா)
லெப்டினன்ட் தங்கச்சி (குணரட்ணம் சசிகரன் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் உதயசீலன் (முருகேயன் கரிதரன் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் எழிலமுதன் (தங்கவேலாயுதம் தவராசா – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் ஜெயந்தன் (பாலன்) (செல்லத்தம்பி ஈஸ்வரகுமார் – கிளிநொச்சி)
லெப்டினன்ட் அகத்தியன் (நில்டன்) (செல்வராசா சிறீதரன் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் சுதர்சன் (சாந்தன் குயின்ரன்நீக்ளாஸ் – மன்னார்)
லெப்டினன்ட் கஜன் (தினகரநாதன் பாஸ்கரன் – மன்னார்)
லெப்டினன்ட் கனிமொழி (செல்லத்துரை வனிதா – முல்லைத்தீவு)
லெப்டினன்ட் மைவிழி (அமலதாஸ் யசோ கோகுலவதனி – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் வேணுகா (சிவஞானம் ராஜேஸ்வரி – கிளிநொச்சி)
லெப்டினன்ட் யாழ்மொழி (சண்முகம் பூரணவதி – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் ஆதவன் (இரத்தினம் ஜெயக்குமார் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் தேவா (சண்முகலிங்கம் தயாபரன் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் தமிழ்செல்வன் (சுப்பிரமணியம் தயாபரநாதன் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் ஜெயந்தன் (அப்புலிங்கம் கரிகரன் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் பாஸ்கரன் (நடராசா நித்தியசபேசன் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் புதியவன் (வெற்பன்) (மகாலிங்கம் சிவனேஸ்வரன் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் வீணைக்கொடியோன் (கோவிந்தசாமி விமலநாதன் – வவுனியா)
லெப்டினன்ட் தென்னவன் (ராஜ்) (மரியநாயகம் ரூபநாயகம் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் அன்பரசன் (கோபால் ஜெகநாதன் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் நீலவண்ணன் (கேசவன்) (சிவபாக்கியநாதன் பாபு – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் தூயவன் (கேசவன்) (பாலசுப்பிரமணியம் ஈஸ்வரதாசன் – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் இதயவாணன் (தியாகராசா சிவகுமார் – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் தவமாறன் (மாடசாமி இலங்கேஸ்வரன் – அம்பாறை)
2ம் லெப்டினன்ட் நான்முகன் (அருளானந்தசாமி சிறிசங்கர் – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் தங்கன் (நடராசா விஜயகுமார் – கிளிநொச்சி)
2ம் லெப்டினன்ட் கோபி (ஜேம்ஸ்றஞ்சன் சுதாகரன் – மன்னார்)
2ம் லெப்டினன்ட் நித்தியானந்தன் (மரியதாசன் பிலிப்பன் – மன்னார்)
2ம் லெப்டினன்ட் தாரகை (நாகலிங்கம் சித்திரா – கிளிநொச்சி)
2ம் லெப்டினன்ட் கல்கி (சுப்பிரமணியம் தயாரஞ்சிதம் – கிளிநொச்சி)
2ம் லெப்டினன்ட் சூட்டி (சுப்பிரமணியம் விமலாதேவி – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் நங்கை (சிதம்பரப்பிள்ளை சதீஸ்வரி – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் வேல்லிழி (கண்ணம்மா) (சோமசுந்தரசர்மா சாமந்தீஸ்வரி – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் குந்தவி (கந்தசாமி சாந்தி – கிளிநொச்சி)
2ம் லெப்டினன்ட் முடியரசன் (அகிலேசபிள்ளை சிவகுமார் – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் தமிழ்நம்பி (சதீஸ்) (தம்பிராசா யோகேஸ்வரன் – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் சேயோன் (முருகேசு யோகராஜன் – அம்பாறை)
2ம் லெப்டினன்ட் மணாளன் (அலையப்போடி கைலேஸ்வரன் – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் இளம்பிறை (சண்முகநாதன் கமலதாசன் – திருகோணமலை)
2ம் லெப்டினன்ட் இளஞ்சேரன் (கிருஸ்ணபிள்ளை விஜயசுந்தரம் – திருகோணமலை)
2ம் லெப்டினன்ட் பைந்தமிழ் (வெள்ளைக்குட்டி தில்லையம்பலம் – அம்பாறை)
2ம் லெப்டினன்ட் அருள்நாதன் (சோமு துரைசிங்கம் – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் அருளன் (ஜோன்சன்) (சுப்பிரமணியம் லிங்கேஸ்வரன் – திருகோணமலை)
2ம் லெப்டினன்ட் நாயகன் (நாயுடு) (அமராவதி சிறீஸ்கந்தராசா – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் கலையரசன் (அமிர்தநாதன் சிவலிங்கம் – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் மாரிமுத்து (உதயசீலன்) (தங்கவேல் கமலநாதன் – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் கருணை (கைலாசபதி சுபாகரன் – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் மருதப்பன் (விஜயகாந்தன் இராகுலன் – வவுனியா)
2ம் லெப்டினன்ட் முகிலன் (ரஞ்சன்) (யோகேஸ்வரன ஜெகதீஸ்வரன் – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் சற்குணம் (தர்மலிங்கம் ராஜா – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் கலைச்செல்வன் (முத்துசாமி நவஜீவன் – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் மதுரன் (சுந்தரலிங்கம் சிவகுமார் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை ஈழத்துரை (நாகராசா வினோத்குமார் – கிளிநொச்சி)
வீரவேங்கை தீவண்ணன் (கீறுவிலிஸ் ரஞ்சன் – மன்னார்)
வீரவேங்கை அஞ்சன் (சரவணமுத்து கருணாகரன் – மன்னார்)
வீரவேங்கை தேவன் (வேலுப்பிள்ளை விஜயகுமார் – முல்லைத்தீவு)
வீரவேங்கை மாவளத்தான் (கண்ணன்) (அழகர்சாமி அருள்குமார் – வவுனியா)
வீரவேங்கை விடுதலை (நீர்நாடான்) (மாணிக்கம் திருநாவுக்கரசு – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை வேலன் (வேலவன்) (வீரபத்திரர் நந்தகுமார் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை அப்பன் (பொன்னையா பரமதேவன் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை சம்பந்தன் (மாதவன் சுபாகரன் – திருகோணமலை)
வீரவேங்கை கதிரொளி (சிவசேகரம் நவநீதன் – திருகோணமலை)
வீரவேங்கை முத்து (மாணிக்கம் கண்ணன் – அம்பாறை)
வீரவேங்கை தமிழழகன் (தாமோதரம் செந்தில்நாதன் – மட்டக்களப்பு)
வீரவேங்கை தூயமணி (சின்னராசா ரவிகரன் – அம்பாறை)
வீரவேங்கை வீரபாண்டியன் (செல்வராசா பரமானந்தம் – மட்டக்களப்பு)
வீரவேங்கை அன்பு (சுந்தரம் கேசவராஜ் – மட்டக்களப்பு)
வீரவேங்கை புயல்வாணன் (ஆரோக்கியநாதன் நியூட்டன் – மன்னார்)
வீரவேங்கை தமிழ்ச்செல்வன் (சிவலிங்கம் தனேந்திரா – மட்டக்களப்பு)
வீரவேங்கை ஐங்கரன் (கிறிஸ்ரி யூட்மல்கம் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை வள்ளுவன் (பொன்னுத்துரை ரகுராஜன் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை கொற்றவன் (செல்லையா விஜயகுமார் – அம்பாறை)
வீரவேங்கை தூயவன் (சிவராசா சதீஸ்குமார் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை இசையரசன் (கிருஸ்ணபிள்ளை மோகனராஜன் – திருகோணமலை)
வீரவேங்கை கோகிலன் (எரிசுடர்) (கிருஸ்ணபிள்ளை அழகுராசா – திருகோணமலை)
வீரவேங்கை இளமாறன் (பத்மநாதன் சிவகுருநாதன் – திருகோணமலை)
வீரவேங்கை இசைச்செல்வன் (இராசதுரை சந்திரவதனன் – திருகோணமலை)
வீரவேங்கை தன்ணொளி (வரதன்) (முத்துத்தம்பி கேசவன் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை அன்பரசன் (கனகரட்ணம் வரதகிருஸ்ணன் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை நெடுங்குன்றன் (கிட்டுணன் ரவிச்சந்திரன் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை திலகன் (குமாரசாமி இராஜேஸ்வரன் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை சுடர்வண்ணன் (சற்குணசிங்கம் சசிகுமாரன் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை வாகீசன் (சுந்தரலிங்கம்) (தம்பையா சிவகுமார் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை ஈழமாறன் (மகாலிங்கம் பாலமுரளி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை கலைச்செல்வன் (செல்வரத்தினம் தியாகரூபன் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை சாண்டில்யன் (விஜயராசா கிருஸ்ணமேனன் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை திருமால் (நடராசா கபிலன் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை மருதகாசி (தருமகுலசிங்கம் பிரதீபன் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை தமிழினியன் (பொனனம்பலம் சிவகுமார் – திருகோணமலை)
வீரவேங்கை வளர்நாதன் (முருகேசு மனோகரன் – அம்பாறை)
வீரவேங்கை அமுதரசன் (கோவிந்தராசா ரவிசங்கர் – திருகோணமலை)
வீரவேங்கை மதியழகன் (சபாரட்ணம் யோகநாதன் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை கிரிதரன் (பெரியசாமி வீரசிங்கம் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை துளசிதரன் (நல்லையா மகேந்திரன் – வவுனியா)
வீரவேங்கை இராகவேந்தன் (தங்கராசா சிவஞானசுந்தரம் – திருகோணமலை)
வீரவேங்கை மதிநிலவன் (தம்பிப்பிள்ளை கமலதாசன் – திருகோணமலை)
வீரவேங்கை தமிழ்மகன் (வர்ணகுலசிங்கம் பிரபாகரன் – திருகோணமலை)
வீரவேங்கை வான்முகிலன் (வெற்றிவேல் அன்பழகன் – திருகோணமலை)
வீரவேங்கை புலேந்திரன் (நாகராசா கோணேஸ்வரன் – திருகோணமலை)
வீரவேங்கை கலையமுதன் (திருநாவுக்கரசு விஜயகுமார் – திருகோணமலை)
வீரவேங்கை ஜீவன் (கோபாலன்) (காளிராசா விக்கினேஸ்வரன் – திருகோணமலை)
வீரவேங்கை குமரிநாடன் (செல்லத்துரை கமலநேசன் – அனுராதபுரம்)
வீரவேங்கை திருமகன் (அறிவுக்குமரன்) (மாசிலாமணி பிரதீஸ்குமார் – திருகோணமலை)
வீரவேங்கை பொழிலன் (செல்வராசா சத்தியசீலன் – திருகோணமலை)
வீரவேங்கை சிவரஞ்சன் (குட்டியாண்டி தனரூபன் – திருகோணமலை)
வீரவேங்கை இராவணன் (பொன்னையா சிவராசா – திருகோணமலை)

|| மட்டக்களப்பு இலுப்பையடிச்சேனையில் ஏற்பட்ட வெடிவிபத்ததில்…

2ம் லெப்டினன்ட் அன்பரசன் (தீசன்) (உருத்திரன் சச்சினாந்தம் – மட்டக்களப்பு)

இதே நாளில் தாயக விடுதலை வேள்வி தன்னில் கடலிலும் - தரையிலும் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

Monday, September 30, 2013

உங்கள் ஈகை எருவாகட்டும், விடுதலை உணர்ச்சி கருவாகட்டும்; தாரணிமீதினில் எம் தாயகம் பிறக்கும் தடுக்க நினைப்பவர்கள் தலைகள் தெறிக்கும்



தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் நடத்தப்பட்ட தியாக தீபம் திலீபனின் நினைவு வணக்க
ஈழத் தமிழினத்தின் வரலாற்றில் அகிம்சையின் எல்லையைத் தொட்டுவிட்ட தியாக தீபம் திலீபன் அனைத்துத் தமிழர்களின் மனதிலும் தெய்வமாக வாழ்ந்து கொண்டிருப்பவன். அத்தியாக தீபத்தின் 26ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு செப்டெம்பர் 29ஆம் திகதி East ham Trinity Centreஇல் மிகவும் உணர்வு பூர்வமாக மண்டபம் நிறைந்த மக்களுடன் நடந்தேறியது.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்த மக்கள் அனைவரதும் முகங்களிலும் 26 ஆண்டுகளுக்கு முன்னர் நல்லூர் முருகன் முன்றலில் நடந்த வேள்வியில் அன்று கலந்துகொண்ட உணர்வே பிரதிபலித்ததைக் காணக்கூடியதாக இருந்தது.

அங்கு இதே மாதத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கேணல் சங்கர், கேணல் ராயு அவர்களின் நினைவுப் பகிர்வுடன் அஞ்சலியும் செலுத்தப்பட்டது. மாவீpரர் பெரியதம்பி அவர்களின் புதல்வன் பிரேம் பொதுச்சுடரினை ஏற்றி வைக்க தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து வடகிழக்குப் பிராந்திய பொறுப்பாளர் பகீர் அவர்கள் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். அதைத் தொடர்ந்து மாவீரர் கப்டன் கீரோராஜ் அவர்களின் பெற்றோர் திரு திருமதி சண்முகசுந்தரம் அவர்கள் மாவீரர்களின் திருவுருவப் படங்களுக்கு மாலை அணிவித்தனர்.

தொடர்ந்து கவிதைகள், சிறப்பு உரைகள், எழுச்சிப் பாடல்கள் என மிக எழுச்சி மிக்கதாக நிகழ்வு அமைந்தது நிகழ்வின் ஆரம்பத்தில் ஏற்றி வைக்கப்பட்ட தேசியக் கொடி இறக்கப்பட்டு தமிழரின் தாரக மந்திரத்துடன் நிகழ்வு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

-நாதன்

பிரான்ஸில் இடம்பெற்ற தியாகதீபம் திலீபனின் நினைவெழுச்சி நிகழ்வுகள்






பிரான்ஸில் இடம்பெற்ற தியாகதீபம் திலீபனின் நினைவெழுச்சி நிகழ்வுகள்

தியாகதீபம் லெப்டினன்ட் கேணல் திலீபன் என்ற அடிமுடி தோன்றா அற்புதத் தியாகியின், 26ம் ஆண்டு நினைவெழுச்சி நாள் நிகழ்வு இன்று, பாரிசின் புறநகர்ப் பகுதியான மொந்ரோயில் பகுதியில் அமைந்துள்ள மண்டபத்தில் மிகச் சிறப்பாகவும் எழுச்சிடனும் நடைபெற்றது.
பிரான்ஸ் தமிழர் நடுவத்தின் ஏற்பாட்டில், தியாக தீபம் திலீபனின் வணக்க நிகழ்வுகள் தேசியச் செயற்பாட்டாளர் திரு. பார்த்திபன் தலைமையில் மாலை ஆறு மணிக்கு
ஆரம்பித்தன.

பொதுச்சுடரினை, தமிழர் நடுவத்தின் இணைப்பாளர் திரு. சந்தோஸ் ஏற்றிவைக்க, ஈகைச் சுடரினை தேசியச் செயற்பாட்டாளர் திரு. பாலா அவர்கள் ஏற்றிவைத்தார்.

மலர் வணக்கத்தினை எழுச்சிப் பாடகர் திரு. இந்திரன் மற்றும் திருமதி செல்வி ஆகியோர் ஆரம்பித்து வைக்க, தொடர்ந்து பொதுமக்கள் திலீபனின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி
வணக்கம் செலுத்தினர்.

நிகழ்வில் எழுச்சிப் பாடல்களும், எழுச்சி நடனமும், இடம்பெற்றன. திலீபனின் நினைவு சுமந்து, தேசியச் செயற்பாட்டாளர் திரு. தமிழரசன் உரையாற்றுகையில்,

புலம் பெயர்ந்து வாழும் மக்களின் கைகளில் மிகப் பெரும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருப்பதையும், நாடுகடந்த தமிழீழ அரசின் பாத்திரம் குறித்தும் எடுத்துக்கூறியதுடன், நாடுகடந்த தமிழீழ அரசைப்பலப்படுத்த வேண்டிய தேவை குறித்தும் எடுத்துரைத்தார்.

தமிழர் நடுவ இணைப்பாளர் திரு. சந்தோஸ் உரையாற்றுகையில்,

மக்களுக்காக உணவு தவிர்த்து போராட்டம் நடத்தி தன் இன்னுயிரை திலீபன் ஈகம் செய்து, இருபத்தாறு ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், மக்கள் புரட்சி வெடிக்கட்டும்
சுதந்திர தமிழீழம் மலரட்டும் என்ற அவரது இறுதி ஆசையை நிறைவேற்ற, தமிழ்மக்கள் ஒற்றுமையாகப் பாடுபடவேண்டும்.

தாயக மக்கள் எழுச்சியுடன் இருப்பதையே கடந்த மாகாணசபைத் தேர்தல் முடிபு வெளிப்படுத்தி நிற்பதாகவும் அவர் தனதுரையில் குறிப்பிட்டார்.

நாடுகடந்த தமிழீழ அரசின் அமைச்சர்களான திரு. கொலின்ஸ், திரு. சுதன்ராஜ் ஆகியோர் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில்,

திலீபனின் நினைவுகளை மனக்கண் உணர்வுபூர்வமாகக் கொண்டுவந்ததுடன், இந்தத் தியாகங்களுக்கான பலனை அறுவடை செய்வதற்கு புலத்துமக்கள் உளப்பூர்வமாக பணியாற்ற முன்வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

இதேவேளை, தியாக தீபம் திலீபனின் நினைவுசுமந்து, இளையோருக்கான சதுரங்கப் போட்டியை தமிழர் சதுரங்க ஒன்றியம் ஒழுங்குசெய்து நடாத்தியிருந்தது. காலை 10 மணிக்கு ஆரம்பித்து மதியம் தாண்டியும் தொடர்ந்த போட்டியில், முப்பதுக்கும் மேற்பட்ட இளையோர், இளம் சிறார்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

தமிழர் நடுவம்- பிரான்ஸ்

Friday, September 27, 2013

தமிழா, இன்னும் நம்பவேண்டுமா? இது காந்தியின் அறவழி தேசம் இந்தியா என்று...?



காந்தீயே பார்த்து
தலைகுனிவார்
என் திலீபனின்
நீராகார உண்ணா நிலை
வீர மரணத்தை
பார்த்து...

-தமிழன்

உண்ணா நோன்பிற்கு உயிர்கொடுத்த ஈகையர்கள் - Fastenzeit nonpirku uyirkotutta ikaiyarkal



“பொதுஜனங்களின் விருப்பத்திற்கு மாறாக தவறான வழியில், கண்மூடித்தனமாகப் போய்க் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சி ஒழிந்தே தீரும். அறிவுத் திறன் இருந்தால் திருத்திக்கொள்ளட்டும்”
- சங்கரலிங்கனார்

-----------
சங்கரலிங்கனார் :

காங்கிரஸ் அரசின் முன்பாக 1956 ஜூலையில் 12 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்தார் அவர். தனியாக மொழிவழி மாகாணம் வேண்டும். சென்னை மாகாணத்திற்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டவேண்டும். அரசியல் தலைவர்கள் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சாதாரண மக்களைப்போல் வாழவேண்டும். தேர்தல் முறையில் மாற்றம் வேண்டும். தொழில்கல்வி, இந்தியா முழுவதும் மதுவிலக்கு என்று பன்னிரெண்டு கோரிக்கைகளுடன் ஜூலை 27ந்தேதி சூலக்கரை மேட்டில் தனியாளாக உண்ணாவிரதத்தைத் துவக்கினார்.

அப்போது அந்த இடம் விருதுநகரிலிருந்து தூரத்தில் ஆட்கள் நடமாட்டமில்லாத பகுதியாக இருந்ததால் பொதுவுடமைக் கட்சியினரின் ஆலோசனையின்பேரில் விருதுநகர் தேசபந்து மைதானத்தில் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.அப்போதிருந்த காங்கிரஸ் அரசு சங்கரலிங்கனாரின் கோரிக்கைகளை ஏற்கவில்லை. அதற்குள் சங்கரலிங்கனாரின் உண்ணாவிரதம் பல சலசலப்புகளை ஏற்படுத்த ஆரம்பித்துவிட்டது. ம.பொ.சிவஞானம்., அண்ணாத்துரை, காமராசர், ஜீவானந்தம் உட்படப் பல தலைவர்கள் உண்ணாவிரதத்தை நிறுத்தச் சொல்லிக் கோரிக்கை விடுத்தனர்.

இருந்தும் உண்ணாவிரதம் நிறுத்தப்படவில்லை.நாளாக நாளாக சங்கரலிங்கனாரின் உடல்நிலை மோசமானது. விருதுநகருக்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேசினார் அண்ணா. அப்போது தொடர்ந்து மூன்று கடிதங்களை எழுதினார் சங்கரலிங்கனார். “பொதுஜனங்களின் விருப்பத்திற்கு மாறாக தவறான வழியில், கண்மூடித்தனமாகப் போய்க் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சி ஒழிந்தே தீரும். அறிவுத் திறன் இருந்தால் திருத்திக்கொள்ளட்டும்” என்று ‘எச்சரிக்கையுடன்’ எழுதியிருக்கிறார்.76 நாட்கள் வரை அவருடைய உண்ணாவிரதம் தொடர்ந்தது. தமிழகத்தில் அப்போதிருந்த தின இதழ்களில் இது குறித்த செய்திகள் தினமும் வெளிவந்து கொண்டிருந்தன.

அக்டோபர் 10ந் தேதி அன்று நிலைமை மோசமாகி சங்கரலிங்கனார் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். 13.10.1956 அன்று அவருடைய உயிர் பிரிந்தது.அப்போது சென்னை மாகாணத்தில் இந்தச் செய்தி பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சென்னை நகரக் கல்லூரி மாணவர்கள் ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தனர். மதுரை எர்ஸ்கின் மருத்துவமனையிலிருந்த சங்கரலிங்கனாரின் உடல் மதுரையில் அடக்கம் செய்யப்பட்டபோது பல கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். அவரை அடக்கம் செய்வதில் துணை நின்றவர்கள் பொதுவுடமைக் கட்சித் தலைவர்கள்.

சங்கரலிங்கனாரின் ‘தமிழ்நாடு’ பெயர் சூட்டுவது குறித்த கோரிக்கைக்கு அவருடைய மறைவுக்குப் பிறகு அழுத்தம் கொடுக்கப்பட்டு பல இயக்கங்கள் அந்தக் கோரிக்கைகளை முன்வைத்தன. 1962 மார்ச்சில் நாடாளுமன்றத்தில் ‘தமிழ்நாடு’ கோரிக்கைக்காக தனி மசோதாவே கொண்டுவந்தபோது, அது தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து 1964 சனவரியில் சென்னை மாநிலச் சட்டமன்றத்தில் தமிழ்நாடு பெயர் சூட்டத் தீர்மானம் கொண்டுவரப்பட்டபோதும் அத்தீர்மானம் தள்ளுபடி செய்யப்பட்டது. 1967ல் ஏப்ரல் 14 அன்று சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை ‘தமிழக அரசு’ ஆக மாறியது. 1968 சூலை 18ல் சென்னை மாநிலத்தை ‘தமிழ்நாடு’ ஆகப் பெயர் மாற்றம் செய்யும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. 23.11.1968ல் தமிழ்நாடு பெயர் மாற்ற மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.

இதையடுத்து 1.12.1968ல் தமிழ்நாடு முழுக்கப் பெயர் மாற்றம் விழாவாகக் கொண்டாடப்பட்டபோது "சங்கரலிங்கனாருக்கு நன்றியும் வணக்கமும்" தெரிவிக்கப்பட்டது.

திலீபன்:

வீரவணக்கம் - ராசைய்யா பார்த்திபன் என்னும் திலீபனின் தாகம் அடங்காமல் பசி மட்டும் அடங்கிய நாள் செப்டம்பர் 26

இந்திய அமைதிப் படையினரிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து அமைதி வழியில் நீரும் அருந்தா உண்ணாவிரதம் இருந்து, அக்கோரிக்கைகள் நிறைவேற்றப்படா சமயம் உறுதியுடன் அவ் உண்ணாவிரதத்தில் உயிர்துறந்தவர். இவரை இந்திய அரசு இறக்க விட்டது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இந்திய இராணுவத்துக்குமிடையே பின்னர் ஏற்பட்ட போருக்கு ஒரு முக்கிய காரணம்.

1987 செப்டெம்பர் 15ஆம் திகதி ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் 26ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.48 மணிக்கு லெப்டினன் கேணலாக, யாழ்.மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த திலீபன் மரணம் எய்தினார்.

-அகவழ்

" PA die Wünsche in die falsche Richtung, wird der Congress Party olinte verrückt . Wenn das richtige Wissen "
- Cankaralinkanar

-----------
Cankaralinkanar :

Vor Kongress im Juli 1956 legte die 12- Punkte-Forderungen nach vorn. Molivali zur Provinz allein. State of Chennai , Tamil Nadu ' cuttaventum diesen Namen . Politische Führer und gewöhnliche Menschen , für Luxus und Kostensenkungen zu leben. Die Notwendigkeit, das Wahlsystem zu ändern. Berufsschule , begann dieses Verbot in ganz Indien mit zwölf Forderungen am 27. Juli culakkarai Matt Der Hungerstreik selber.

Die Entfernung von der Stelle Virudhunagar Teil der Kommunistischen Partei von isolierten Menschen war alocanaiyinper begann seinen Hungerstreik auf dem Gelände Virudhunagar tecapantu . Dann cankaralinkanar der Regierung Forderungen wurden nicht akzeptiert. Cankaralinkanar Es ist schnell und begann zu rauschen . H. Funke . Sivagnanam . , Annatturai , kamaracar , einschließlich jivanantam Führer hatten ihn aufgefordert, seinen Hungerstreik zu beenden.

Doch Fasten ist nicht gestoppt. Tage ab dem Tag der cankaralinkanar schlechte Gesundheit. Virudhunagar und Bruder traf ihn . Er schrieb drei Briefe cankaralinkanar . " PA die Wünsche in die falsche Richtung, wird der Congress Party olinte verrückt . Wenn das richtige Wissen " , dass " Vorsicht " 0,76 Tage hat er seinen Hungerstreik fort. The Daily Zeitschriften wurden dann in den Nachrichten veröffentlicht jeden Tag.

Am 10. Oktober hat sich die Situation auf cankaralinkanar ins Krankenhaus gebracht . Am 1956.10.13 trennte er sein Leben. Dann Madras viele in dieser Nachricht schockiert. Chennai City College Studenten wurden für einen Tag fasten . Wenn der Körper wurde in Madurai Erskine மருத்துவமனையிலிருந்த cankaralinkanar würdigte mehrere Parteiführer begraben . Führer der Kommunistischen Partei , um ihn in der Sub- Stand zu begraben.

Cankaralinkanar die 'News' Anfrage über die Benennung ihm nach seinem Tod , da der Druck der Anforderungen machte einige Bewegungen . Parlament im März 1962 in der 'News' Antrag auf getrennte macotave kontuvantapotu wurde abgewiesen. Im Anschluss daran , im Januar 1964 in Chennai , Tamil Nadu Resolution கொண்டுவரப்பட்டபோதும் Namen cutta Fall wurde der Vorschlag abgelehnt. Fort St. George in Chennai am April 14, bis 1967 "Regierung" zu werden. 18. Juli 1968 im Bundesstaat Chennai , Tamil Nadu, hat über eine Entschließung zur Änderung des Namens gebracht . 23.11.1968 verabschiedete das Parlament das Gesetz, den Namen des Tamil Nadu ändern.

1.12.1968 Änderung des Firmennamens von Tamil Nadu ganze Zeremonie கொண்டாடப்பட்டபோது "Danke für cankaralinkanar Bogen ", sagte.

Thileepan :

Manager - Racaiyya nehmen Sie die hungrig, durstig , bestehend aus Thileepan 26. September

Fünf Forderungen an die indische Friedenstruppe setzen Wasser auf dem Weg nach unten von Arunta schnell, schnell Platz akkorikkaikal niraiverrappata uyirturantavar Zeit zu gewährleisten. Dies ist für die Einfuhr der indischen Regierung und der LTTE seit dem இராணுவத்துக்குமிடையே ein Hauptgrund für den Krieg .

Fünf - Punkte-Forderung setzen Hungerstreik begann am 15. September 1987 . Am 26. September 1987 um 10.48 am Samstagmorgen als leptinan Oberst , General. Kreis Politischen Abteilung , zuständig war Pässe Thileepan Tod.

- புவிநன்

தியாகி திலீபனுக்கு சேலம் சட்ட கல்லூரி மாணவர்கள் அஞ்சலி


தமிழீழ மக்களின் விடிவுக்கான கோரிக்கைகளோடு உண்ணாவிரதம் இருந்த திலீபன் அவர்கள் 1987 செப்டம்பரில் வீர மரணம் அடைந்தார்.
அவரின் மறைவு உலக தமிழர்களிடம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. அதன் பின் அவர் நினைவை போற்ற தொடங்கினர் தமிழர்கள்.

அவரின் நினைவு தினத்தை முன்னிட்டு சேலம் சட்ட கல்லூரி மாணவர்கள் விடுதிக்கு எதிரில் மாணவர்கள் மற்றும் உணர்வாளர்கள் திலீபன் படம் வைத்து மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர்கள் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

இதில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தமிழின உணர்வாளர்கள் கலந்துகொண்டனர்.

-நாதன்