நடுவண் அரசின் சேவைகளை பெற வேண்டுமெனில் அனைத்து தனிமனித விவரங்களும் அரசுக்கு வேண்டும் என்று சொல்வது அடிப்படை ஜனநாயக உரிமை மீறலாகும் என சமூக ஆர்வலர்கள் குற்றும் சாட்டி வருகின்றனர் . இந்த நாட்டின் கடைக் கோடி குடிமகன் அனைவருக்கும் அரசின் சேவைகள் நிபந்தனையின்றி கிடைக்க வேண்டும். மேலும் இந்த ஆதார் அட்டை விவரங்களை சேகரிப்பது ஒரு தனியார் நிறுவனம். இந்த நிறுவனத்தின் கைகளில் பொதுமக்களின் தனிமனித விவரங்கள் இருப்பது பாதுகாப்பு அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது. ஊழல் மலிந்துள்ள இந்த நாட்டில் பணத்திற்காக அனைத்து தனிமனித விவரங்களையும் வேறு ஒரு நிறுவனத்திற்கு விற்க நேரிடலாம். அப்போது குற்றம் இழைப்பவர்கள் இந்த தனி மனித விவரங்களை தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது.
அதுமட்டுமில்லாமல் , அரசுக்கு எதிராக தங்கள் உரிமைகளுக்கு பொது மக்கள் போராடினால் , அவர்கள் தனி மனித விவரங்கள் உள்ள ஆதார் அட்டைகளை அரசு செயலிழக்க செய்ய வாய்ப்பும் உள்ளது . அந்த நிலையில் போராடும் மக்களின் உரிமைகள் ஒரே நாளில் பறிக்கப்படும் அபாயமும் உள்ளது . இந்த காரணத்தால் சமூக ஆர்வலர்கள் ஆதார் அட்டையை கட்டாயப் படுத்தி திணிக்கக் கூடாது என்று கூறி வருகின்றனர். ஆனால் இதையும் மீறி மத்திய மாநில அரசுகள் ஆதார் அட்டைகளை கட்டாயமாக பெற வேண்டும் என்று மக்களை ஏமாற்றி வருகிறது .
-இளையவேந்தன்
No comments:
Post a Comment