Showing posts with label Tamil. Show all posts
Showing posts with label Tamil. Show all posts

Saturday, September 28, 2013

இங்குள்ள தேசியக்கட்சிகளில் பிற மொழியினர் தலைமை தாங்க என்ன உரிமை இருக்கிறது? - In der anderen Sprache, an der Spitze der Nationalen was ist hier richtig?

Image

தேசியக்கட்சிகளின் தலைமைப் பொறுப்புகளை, அதாவது தமிழ்நாட்டின் பிரச்சினைகளில் முடிவு எடுக்கும் அதிகாரதைப் பெற தமிழர்கள் அக் கட்சிகளின் தலைமைப் பொறுப்புகளைக் கைப்பற்றவேண்டும். இங்குள்ள தேசியக்கட்சிகளில் பிற மொழியினர் தலைமை தாங்க என்ன உரிமை இருக்கிறது அதற்காகத்தானே மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது.தெலுங்கர்களுக்

கும்,கன்னடர்களுக்கும், மலையாளிகளுக்கும் தமிழ்நாட்டில் தலைமை ஏற்க எந்த உரிமையும் இல்லை.அவர்கள் மாநிலங்களில் எங்காவது தமிழன் தலமை ஏற்றிருக்கிறார்களா?...இல்லையே..பின் ஏன் தமிழர்கள் நாம் அவர்களைத் தலைவர்களாக ஏற்கவேண்டும்.

-ஏகாந்தன்நம்பி ஏகாந்தன்

Nationale Führungsaufgaben, wie die Macht, auf Fragen der Tamil Nadu Tamilen kaipparraventum Führungsverantwortung der Parteien zu entscheiden. Was ist hier genau richtig, um die nationale atarkakattane in der anderen Sprache und sprachliche manilankalakap Kopf Malayalam und Tamil Nadu haben kein Recht auf die Führung übernehmen. Stocken geraten Sie das Verfahren, wie sie irgendwo in den Staaten sind? ..... Und warum sind wir nicht als Führer, wir müssen sie akzeptieren.

-முகிலினி/Mukilini

Friday, September 27, 2013

தமிழர் நாட்டின் சிக்கல்கள் குறித்து பேசாது பாகிஸ்தான் அமெரிக்கா குறித்து மோடி திருச்சியில் பேசியது எந்த விதத்திலும் மோடிக்கு தமிழர்களின் ஆதரவை பெற்றுத் தராது.

ImageImage

தாய் மொழி உரிமைக்காகவும் , இந்தித் திணிப்பிற்கு எதிராகவும் கடந்த 75 ஆண்டுகளாக போராடும் தமிழ் மக்களின் நடுவே மோடி இந்தியில் உரையாற்றியது அவர் தமிழர்களின் உணர்வை புரிந்து கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது.

தமிழர்களின் தலையாய பிரச்சினையான ஈழப் பிரச்சனை, கூடங்குளம் அணு உலை, மீதேன் எரிவாயு, கைல் குழாய் பதிப்பு, நியூற்றினோ, முல்லைப்பெரியாறு, காவரி, பாலாறு, மூன்று தமிழர் தூக்கு, தமிழர் இழந்த நிலம் மீட்டல், மாநில சுயாட்சி, தாய் மொழிக் கல்வி, இந்தித் திணிப்பு, தமிழை ஆட்சி மொழியாக்குதல், சாதி சிக்கல்கள், இயற்கை வளங்கள் சுரண்டப்படுதல் போன்ற எந்த தமிழர் பிரச்சனைகள் பற்றியும் பேசாமல் தமிழர்களுக்கு தொடர்பே இல்லாத பல செய்திகளை மோடி பேசிவிட்டு சென்றுள்ளார். மீனவர் பிரச்சனை குறித்து மேலோட்டமாக குஜராத் தமிழக மீனவர்கள் குறிப்பிட்டு ஒப்பீட்டு அளவில் பேசியுள்ளார்.

1.5 லட்சம் தமிழ் உறவுகளை பறிகொடுத்து விட்டு, 600 மீனவர்களை பறிகொடுத்து விட்டு, 25 ஈகிகளை நெருப்புக்கு இரையாக்கி விட்டு தமிழ் மக்கள் அனாதையாக நிற்கின்றோம். இவர்களுக்கு அரை நிமிடம் அஞ்சலி செலுத்தாத மோடி, இந்திய இராணுவ வீரர்களுக்கு இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தியுள்ளது தமிழர்களின் உணர்வை பாஜக புரிந்து கொள்ளவில்லை என்பதை காட்டுகிறது. இப்படிப்பட்ட பாஜகவை நம்பி தமிழர்கள் வாக்களித்தால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு காவி உடை அணிந்த இன்னொரு காங்கிரஸ் ஆட்சி தான் நடக்கும் என்பதில் ஐயமில்லை.

- இளையவேந்தன்

Friday, September 20, 2013

தமிழை ஆட்சி மொழியாக்கு



தமிழ் மொழியை இந்தியாவின் ஆட்சி மொழியாக்க தமிழ் அமைப்புகள், கட்சிகள் அரசுக்கு வைத்த கோரிக்கையை வெளியிட்ட ஆங்கில ஊடகமான நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு நம் நன்றிகள்.

நம் கோரிக்கையை அரசு விரைவில் நிறைவேற்ற தொடர்ந்து உழைப்போம்.

-இளையவேந்தன்

Thursday, September 19, 2013

உங்கள் ஈகை எருவாகட்டும், விடுதலை உணர்ச்சி கருவாகட்ட்டும்; எட்டுத்திக்கும் விடுதலை தீ பறவட்டும் - நம் பரம்பரையில் வரும் தலைமுறைகள் நாம் அடிமையில்லை என்று முழங்கட்டுமே





செங்கல்பட்டு நோக்கி மாணவர்களின் மிதிவண்டி பயணம். தமிழ் உறவுகள் வரவேற்கவும்!

இனப்படுகொலை செய்த இலங்கை அரசின் தலைமையில் இலங்கையில் காமன் வெல்த் மாநாடு நடக்க உள்ளது. இம்மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது என்றும் இந்தியா இதில் பங்கேற்கக் கூடாது என்று வலியுறுத்தியும் மாணவர்கள் கடந்த 6 நாட்களாக மிதிவண்டி பயணம் செய்கின்றனர்.

திருச்சியில் தொடங்கிய இந்த பேரணி இன்று மாலை 4.30 மணி அளவில் செங்கல்பட்டு வந்தடைகிறது. இதுவரை மாணவர்கள் சென்ற இடமெல்லாம் தமிழ் உறவுகள் சிறப்பித்தனர். மாணவர்களை வாழ்த்தினர். தற்போது செங்கல்பட்டு வரும் மாணவர்களை தாய் தமிழ் உறவுகள் அனைவரும் வாழ்த்தி வரவேற்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

தொடர்புக்கு 8678962611

-இளையவேந்தன்

Wednesday, September 18, 2013

தனித் தமிழ் இயக்கம் இயக்கம் கண்ட மறைமலை அடிகள் நினைவு நாள் - ௧௫.௦௯.௧௯௫௦ (15.09.1950). கலப்புத் தமிழ் தவிர்ப்போம் ! தூய தமிழில் பேசுவோம் !

படம்

தனித் தமிழ் இயக்கம் இயக்கம் கண்ட மறைமலை அடிகள் நினைவு நாள். கலப்புத் தமிழ் தவிர்ப்போம் ! தூய தமிழில் பேசுவோம் !

தமிழர்கள் அனைவரும் கலப்படமின்றி தமிழ் பேச கடப்பாடு கொண்டால் நம் தாய்மொழியான தமிழ்மொழி வாழுமா? வீழுமா? என்ற கேள்விக்கே இடமில்லாமல் போகும். தமிழ் உலக வரலாற்றில் அத்தகைய உணர்வு வெகு சிலருக்குதான் இருந்திருக்கிறது. அந்த வெகு சிலரில் ஒருவர் 'தனித்தமிழ் இயக்கம்' என்ற ஒரு மாபெரும் இயக்கத்தையே தொடங்கி தமிழுக்காக அரும்பங்காற்றியிருக்கிறார். தமிழ் உலகம் அவரை 'தமிழ்க்கடல்' என்றும், 'தனித்தமிழின் தந்தை' என்றும் போற்றுகிறது.நாம் தெரிந்துகொள்ளவிருக்கும் அந்த வரலாற்று மாந்தர் மறைமலை அடிகள்.

1876-ஆம் ஆண்டு ஜூலை 15-ஆம் நாள் நாகப்பட்டினத்திற்கு அருகே அமைந்துள்ள காடம்பாடி எனும் சிற்றூரில் சொக்கநாத பிள்ளை, சின்னம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார் மறைமலை அடிகள். பெற்றோர் அவருக்கு இட்ட இயற்பெயர் வேதாசலம். பெரியவரானதும் அவர் சைவ சமய சொற்பொழிவுகளை ஆற்றி வந்ததால் சுவாமி வேதாசலம் என்று அவரை அழைத்தனர் பொதுமக்கள். பிந்நாளில் தமிழ் மொழி மீது ஏற்பட்ட பெரும் பற்றாலும் தனித்தமிழ் மீது இருந்த ஆர்வத்தாலும் வேதாசலம் என்ற தன் பெயரை தூய தமிழில் மாற்ற விரும்பினார். அந்த பெயரை வேதம், அசலம் என்று இரண்டு சொற்களாகப் பிரிக்கலாம். வேதம் என்ற வடமொழி சொல்லுக்கான தூய தமிழ்ச்சொல் மறை. அசலம் என்பதற்கான தூய தமிழ்ச்சொல் மலை. சுவாமி என்பதற்கான தூய தமிழ்ச்சொல் அடிகள். எனவே சுவாமி வேதாசலம் என்ற பெயர் 'மறைமலை அடிகள்' என்றானது.

மறைமலை அடிகளின் புலமை அவருக்கு தமிழாசிரியர் பணியைப் பெற்றுத் தந்தது. மாதம் 25 ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தார். பின்னர் சொந்தமாக இதழ் நடத்த விரும்பிய மறைமலை அடிகள் 1902-ஆம் ஆண்டு ஞானசாகரம் என்ற பத்திரிகையைத் தொடங்கினார். அதன் பெயரை பின்னர் அழகு தமிழில் 'அறிவுக்கடல்' என்று மாற்றினார். காலப்போக்கில் தனக்கு சோறு போட்ட தமிழ் மொழியின் மேம்பாட்டுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணிக்கத் துணிந்தார் மறைமலை அடிகள். தமிழாசிரியர் பணியை விட்டு விட்டு சொந்தமாக தொழில் தொடங்கினார். ஆங்கிலம், சமஸ்கிருதம் போன்ற மொழிகள் தமிழில் பரவிக் கிடந்ததை உணர்ந்து வருந்திய மறைமலை அடிகள் கலப்படத்திலிருந்து தமிழை மீட்கவும், தனித்தமிழில் பேசவும், எழுதவும் தமிழர்களுக்கு ஊக்கமூட்ட முடிவெடுத்தார். வெறும் பேச்சோடு நின்று விடாமல் அதற்கு ஒரு முன்னுதாரணமாக செயல்படத் தொடங்கினார். தனித்தமிழ் இயக்கத்தை நிறுவினார். அப்போதுதான் தன் பெயரை மறைமலை அடிகள் என்று மாற்றிக் கொண்டார். அவரைப் பின்பற்றி பல தமிழர்கள் தங்களுக்கு தூய தமிழில் பெயர் சூட்டிக் கொண்டனர்.

முல்லைப்பாட்டு, பட்டிணப்பாலை போன்ற நூல்களுக்கு எளிமையான தமிழில் உரை எழுதினார். கடுமையானத் தமிழாக இல்லாமலும், கலப்புத் தமிழாக இல்லாமலும் எவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் தூயத் தமிழை அவர் பயன்படுத்தினார். வடமொழியில் காளிதாசன் படைத்த சாகுந்தல எனும் காதல் காவியத்தை தமிழில் மொழிப் பெயர்த்தார். மொழிக்கலப்பு தமிழ் மொழிக்குப் பாதிப்பாக அமையும் என்று நம்பிய அவர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு ஹிந்தி மொழி தடையாக இருக்கக்கூடாது என்பதில் கவனமாகவும், குறியாகவும் இருந்தார். ஹிந்தி மொழி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைக்கும் சென்றார். ஆங்கிலத்தில் உள்ள நல்ல நூல்களைப் படித்தறியவும், நல்ல தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும் ஆங்கில அறிவு அவசியம் என்று அவரே கூறியிருக்கிறார்.

தனித்தமிழ் இயக்கத்தின் காரணமாக அந்தக்கால கட்டத்தில் வழக்கத்திலிருந்த பல சமஸ்கிருத சொற்கள் வழக்கொழிந்து போயின. நமஸ்காரம், ஜலம், சந்தோஷம், அபேட்சகர் போன்ற வடமொழி சொற்கள் முறையே வணக்கம், நீர், மகிழ்ச்சி, வேட்பாளர் என்றாயின. அந்தத் தூய தமிழுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டியது மறைமலை அடிகளுக்குதான். தமிழையே உயிர் மூச்சாக சுவாசித்த அவர் தம் வாழ்நாளில் மொத்தம் 56 நூல்களை எழுதினார். அவருக்கு கடவுள் பக்தி நிறைய இருந்தாலும் முற்போக்கு சிந்தனையும் அதிகமாக இருந்தது. தம் வாழ்நாளில் அவர் காதலித்த விசயங்கள் இரண்டு ஒன்று தமிழ், மற்றொன்று மனைவி செளந்தரம். எனவே மனைவி இறந்த சில மாதங்களிலேயே பிரிவைத் தாங்காமல் அவரும் மரணத்தைத் தழுவினார். கடைசி வரை தமிழுக்காக உழைத்த மறைமலை அடிகள் 1950-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ஆம் நாள் தமது 75-ஆவது வயதில் காலமானார்.

'தனித்தமிழ் இயக்கம்' என்ற ஒன்று தேவைதானா? என்று எவர் வேண்டுமானாலும் எளிமையாக கேள்வி கேட்டுவிடலாம். ஆனால் ஒரு மொழியின் மீது காதல் கொண்டவர்களால்தான் அதன் முக்கியத்துவத்தை உணர முடியும். தமிழ் மொழிதான் தமிழரின் உண்மையான அடையாளம் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்ததால்தான் தனித்தமிழ் இயக்கத்தையே ஆரம்பித்தார் மறைமலை அடிகள். அவரைப்போன்றோர் சிந்திய வியர்வையின் பலனாகத்தான் இன்று நமது தமிழ்மொழி செம்மொழி தகுதியைப் பெற்றிருக்கிறது. அவருக்கு தமிழுலகம் நன்றி கூறும் அதே வேளையில் அவரிடமிருந்துக் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்ன என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.

ஒன்பதாம் வகுப்பு வரைதான் கல்வி கற்றிருந்தாலும் ஆசிரியர் பணியை எட்டும் துணிவு அவரிடம் இருந்தது. அந்தத் துணிவால் ஆசிரியர் பணி கிடைத்தும் தன்னுடையக் கொள்கைக்காக அந்தப் பணியை விட்டு விலகி வெறும் பேச்சால் மட்டுமே கொள்கைகளைப் பரப்பி விட முடியாது என்ற தெளிவும் அவரிடம் இருந்ததால்தான் அவர் தன்னுடையக் கொள்கைகளை வாழ்ந்தும் காட்டினார். இவற்றால்தான் அவருக்கு தமிழ் வரலாற்றில் ஒரு தனி இடம் கிடைத்தது. 'தனித்தமிழ்' என்ற வானமும் வசப்பட்டது. அன்னாரின் நினைவு நாளில் ஆங்கிலம் மற்றும் பிற மொழிக் கலப்பில்லாமல் தமிழில் பேசுவோம். தமிழாராய் இணைவோம். கூடிய மட்டும் தமிழரிடத்தில் தூய தமிழில் உரையாட பழகுவோம். செந்தமிழை மீட்டெடுப்போம்.

-இளையவேந்தன்

எதிர்க்கத் துணிந்தால் தமிழ் ஆளும். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற நிலையடையும் வரை போராடுவோம்

படம்

தமிழ் மொழியை நீதிமன்ற வழக்காடு மொழியாக்க தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் சாகும் வரை பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தோழர்கள் கயல் (எ) அங்கயர்க்கண்ணி, பகத்சிங் மற்றும் வேல்முருகன் இன்று இரண்டாம் நாள் இரவும் நீதிமன்ற வளாகத்திலேயே தங்கி தங்கள் போராட்டத்தை முன்னேடுக்கின்றனர்.

தமிழர்களுக்கு கிடைத்த முதல் கட்ட வெற்றி !

தமிழ் மொழியை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக்க உண்ணா நிலைப் போராட்டம் செய்த மூன்று வழக்கறிஞர்கள் தங்கள் போராட்டத்தை இன்று முடிவுக்கு கொண்டு வந்தனர்.

தொடர்ந்து மூன்று நாட்களாக போராடி வந்த வழக்கறிஞர்கள் கயல், பகத் சிங், வேல்முருகன் ஆகியோர், இன்று வழக்கறிஞர்கள் சங்கம் கொடுத்த உறுதி மொழி அடிப்படையிலும், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அகர்வால் கொடுத்த உறுதி மொழியின் அடிப்படையிலும் தங்கள் பட்டினிப் போராட்டத்தை முடித்துக் கொண்டனர்.

நீதிபதி அகர்வால் , இனி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழில் வழக்காடலாம் என்ற வாய் மொழி உத்தரவை பிறப்பிப்பதாக உறுதி அளித்தார். மேலும் கீழை நீதி மன்றத்தில் இனி ஆங்கிலத்தில் தீர்ப்பு வழங்கலாம் என்ற தீர்மானத்தை இரத்து செய்து விடுவதாகவும் கூறி உள்ளார் . இதனால் கீழை நீதிமன்றத்தில் இனி தமிழ் மொழியில் தான் தீர்ப்பு வழங்கப்படும் என அறியப்படுகிறது.

வழக்கறிஞர் சங்கம் அவர்கள் சங்கத் தேர்தல் முடித்தவுடன் நடுவண் அரசுக்கு அழுத்தம் கொடுத்து தமிழில் வழக்காட அதிகாரப் பூர்வ நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர் . உயர் நீதிமன்றத்திலும் தமிழை அலுவல் மொழியாக்க குடியரசு தலைவர் ஒப்புதல் பெற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

தமிழுக்காக, தமிழர் நலனுக்காக தொடர்ச்சியாக போராடி வந்த தமிழ் வழக்கறிஞர்கள் அனைவருக்கும் நம் பாராட்டுகளை தெரிவிப்போம். எதிர்க்கத் துணிந்தால் தமிழ் ஆளும் .

-இளையவேந்தன்

Monday, September 16, 2013

ஏன் கன்னட ராமசாமி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு திராவிட கழகம் என்று ஆரம்பித்தார்? ஏன் தமிழ் கழகம் என்று ஆரம்பிக்கவில்லை? ஏன் கன்னட ராமசாமி தனி தமிழ் நாட்டை அன்று வெள்ளையரிடம் கோரவில்லை?

இந்த மண்னாலும் மொழியாலும் தான் நமக்கு பெருமை 556003_304686229634828_93292291_n tamilileelam

" கன்னட" இ. வே . ராமசாமி


திராவிடம் என்றால் என்ன?

ஏன் கன்னட ராமசாமி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு திராவிட கழகம் என்று ஆரம்பித்தார்?

ஏன் தமிழ் கழகம் என்று ஆரம்பிக்கவில்லை?

திராவிட கழகம் கண்டவர்கள் என்ன இனத்தை சேர்ந்தவர்கள்?

ஏன் கன்னட ராமசாமி தனி தமிழ் நாட்டை அன்று வெள்ளையரிடம் கோரவில்லை?

இதற்க்கு தரவிடர்களின், திராவிடன்களின் , திராவிடச்சிகளின் , திராவிட சோம்பு தூக்கும் தமிழர்களின் பதில் என்ன?

எவனுமே கூறமாட்டான், ஏன்னா அவனுக்கு பணமும் பதவியும் தன் அவசியம்.

தமிழரை திராவிடர் என்று கூறுபவர்கள் , எம்மை ஆண்டு சுகம் கண்டு, எம்மை அழிக்க நினைக்கும் பஞ்சம் பிழைக்க வந்த கூட்டம்.

அடுத்து தமிழினத்தை விற்று பிழைப்பு நடத்தும் துரோக கும்பல்.

ஈ.வே.ராமசாமி ஒரு கன்னடர், அவர் கன்னடர் என்பதால் தான் தமிழ் கட்சி என்றோ, தமிழ் கழகம் என்றோ ஆரம்பிக்க வில்லை, மேற்க்கத்தேயர் தற்போதைய இந்தியாவின் பூர்வ குடி மக்களை குறிக்க பயன் படுத்திய திராவிடம்" " என்பதை பயன் படுத்தினார், தன் மொழி பற்றை மறக்காகத ராமசாமி . இதுவே தமிழின அழிவிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. திராவிடம் பேசுபவன் எல்லாம் பிறப்பால் தமினாக இருக்க முடியாது, கன்னடன், தெலுங்கன் ஆகத்தான் அதிகமாக இருக்கிறது, இதன் உண்மை அறியா தமிழ் உறவுகளும் இதற்குள் சிக்கி விட்டன் .

திராவிடத்தை அழித்து , தமிழர் தமிழரை அளும் நிலையை உருவாக்கக உறுதி கொள்வோம் தமிழ் உறவுகளே.

-ராவணன் தமிழன்


Friday, September 13, 2013

மாற்றமும் புரட்சியும் மக்கள் மனதில் முதலில் தோன்ற வேண்டும்

படம்

எமது தமிழினத்தை சாராதா ஒருவன், எமது தாய்த்தமிழ் தெரியாத ஒருவனுக்கு என்னை ஆளும் உரிமை என்றுமே கிடையாது. இப்படி ஒரு வாழ்க்கையை ஏற்று வாழ்பவர்கள் அடிமைகளே ஆவர்.

மோடி என்ற மத கலவரத்தை ௨௦௦௨ (2002) இல் அரங்கேற்றிய தீவிரவாதியின் பேச்சை கேட்க்க மக்கள் திரண்டிருக்கின்றனர். இதை ஒரு இனத்துரோகி வேறு மொழிபெயர்ப்பு செய்துகொண்டிருக்கிறது என்பதை பார்க்கும் போது பாரதி பாடிய "நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்" என்பதே குமுறல்களாக வெளிப்படுகிறது.

தமிழரின் விடுதலை தமிழை நேசிக்கத் தொடங்கும் போதே மலரத்தொடங்கும்.

-நவிலோன்