Tuesday, November 5, 2013
இந்த அணு உலை , அணு மின் நிலையம் ஆபத்துன்னு சொல்லிக்கிட்டு போரடாடுராகளே அப்படி என்னதான்யா அதுல இருக்கு அதுல இருந்து எல்லாத்திலையும் வர்ற மாதிரி கரண்ட்டு தான வருது அப்பறம் ஏன் இவக கொடிய பிடிச்சுகிட்டு கத்திட்டு இருக்காங்கன்னு நினைக்கிறவர்கள் படிக்க வேண்டிய பதிவு!!!!!
உலகெங்கும் மின்சாரம் பெறுவதற்கு ஏறக்குறைய நமது மிதி வண்டி(dynamo) டைனமோவில் பயன்படுத்தப்படும் மின் காந்தப் புலம் தொழில் நுட்பமே அடிப்படையாக உள்ளது. பொதுவாக பெரிய டைனமோக்களை சுற்றுவதன் மூலம் பெரும்பான்மையான நாடுகளில் மின்சாரம் பெற்றுக் கொள்ளப்பெறுகின்றது.
உயர்ந்த நீர்த் தேக்கங்களில் இருந்து நீர் கீழே பாயும் விசையை பயன்படுத்தி டைனமோவைச் சுழலச் செய்து உற்பத்தி செய்வது "நீர் மின்சாரம்" எனவும், காற்றின் மூலம் பெரிய காற்றாட்டிகளை சுற்றச் செய்து டைனமோவைச் சுழலச் செய்து உற்பத்தி செய்வது "காற்றாலை மின்சாரம்" எனவும், நீரைக் கொதிக்க வைத்து, நீராவியின் சக்தியால் டைனமோவைச் சுழலச் செய்து உற்பத்தி செய்வது "அனல் மின்சாரம்" எனவும் அழைக்கப்பெறுகின்றன.
அனல் மின்சாரம் உற்பத்தியாக்குவதற்கு நீரைக் கொதிக்க வைத்து ஆவியாக்குவதற்கு நிலக்கரி, டீசல், பெட்ரோல், எரிவாயு போன்றவற்றை எரிபொருளாக பயன்படுதுகின்றார்கள். நீராவியின் விசையால் புகையிரதங்கள், பெரிய கப்பல்கள் இயங்குவதுபோல் பெரிய டைனமோக்களை சுழலச் செய்து மின்சாரம் பெறப்படுகின்றன. இவ்வாறு நீரைக் கொதிக்க வைத்து நீராவியாக்குவதற்கு நிலக்கரி, டீசல் போன்றவைகள் அதிகமாக தேவைப் படுவதனால் அதிகம் செலவாகின்றது. அதனால் அதற்குப் பதிலாக அணுவின் உட்கருவைப் பிளப்பதால் உருவாகும் வெப்பத்தைப் பயன்படுத்தி உற்பத்தியாக்குவதே "அணு மின்சாரம்".
ஒரு டன் அணுக்கரு யுரேனியம் உண்டாக்கும் வெப்பசக்தி, (2-3) மில்லியன் டன் இயல்வள எரிபொருள்கள் [நிலக்கரி, எரிவாயு அல்லது எரி ஆயில்] தரும் வெப்பசக்திக்குச் சமம். அதாவது சுண்டக்காய் அளவு யுரேனியம் [7 gram Uranium Pellet] 3.5 பீப்பாய் எரி ஆயில் [Barrels of Oil], 17,000 கியூபிக் அடி எரிவாயு [Natural Gas] அல்லது 1780 பவுண்டு நிலக்கரி தரும் வெப்பத்தை உண்டாக்குகிறது.
யுரேனியம் போன்ற சில தனிமங்கள் பிரிக்கப்படும்போது அதிக அளவு வெப்பமும் ஆற்றலும் வெளிவிடப்பெறுகின்றன. அவற்றை முறைப்படுத்தி அதைத் தொடர் நிகழ்வாக மாற்றி நீரைக் கொதிக்க வைத்து நீராவியாக்கி அதன் மூலம் டைனமோவைச் சுழல வைத்துப் பெறப்படுவது தான் அணு மின்சாரம்.
அணு உலையின் தொழில் நுட்பம் என்ன? அதனால் ஏற்படும் நன்மை தீமைகள் யாவை?
அணு உலைகளில் 2%-3% செறிவு யுரேனியம் என்ற தனிமம் எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. யுரேனியம் அணு, அணுஉலையில் பிரிக்கப்படும்போது சுமார் 2000 oC வரை வெப்பம் உண்டாகின்றது. இவ் வெப்பமானது நீரின் கொதி நிலையான 100 oC ஐ விட பன் மடங்கு அதிகமாகும். இந்த அனணுவை பிரிக்கும் போது உண்டாகும் வெப்பத்தைப் பயன்படுத்தி நீரை கொதிக்கச் செய்து நீராவியாக்கப் பெறப்படுகின்றது. அந்த நீராவி மூலம் டைனமோக்கள் சுழற்றப்பட்டு மின்சாரம் உற்பத்திசெய்யப்பெறுகின்றது. இம் முறையானது பெரிய அளவில் மின் சாரத்தை உற்பதியாக்குவதற்கு மிகவும் லாபகரமானது. ஆனால்;
அணுவை பிரிக்கும்போது அதிக வெப்பம் வெளிப்படுவதனால் அணுவைப் பிரிக்க பயபடுத்தும் அணு உலையைக் குளிர்விக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது. அதற்காக கடலிலிருந்து அல்லது வற்றாத நீர் நிலைகளில் இருந்து நீர் பெறப்படுகின்றது. கடல் நீரில் உப்பு இருப்பதனால் சுத்திகரிக்கப் பெற்று உப்பு அகற்றி, நன்னீராக மாற்றிய பின் அணு உலையை குளிராக்க பன்படுத்தப்படுத்துகின்றார்கள்.
யுரேனியம் அணுவைப் அணு உலையில் பிரிக்கும்போது வெப்பத்தை வெளியேறி பிரிவுறும் போது அது, புளுட்டோனியமாக மாறுகிறது. மேலும் அங்கு கடுமையான கதிரியக்கமும் (Radiation) ஏற்படுகிறது. இந்த கதிரியக்கம் பூமியில் வாழும் உயிரினங்களுக்கு பெரும் தீங்க்கினை உண்டாக்கக் கூடியன. மிகமிக அபாயகரமானது. இந்தக் கதிர்வீச்சினால் தைராய்டு பாதிப்பு, காசநோய், நீரிழிவு நோய், மலட்டுத் தன்மை, மூளை வளாச்சிக் குறைவு, புண்கள் என பல்வேறு நோய்கள் மனிதருக்கு ஏற்படுவதுடன் மற்றைய உயிரினங்களையும் அழிக்கும் திறன் கொண்டது. இவற்றில் இருந்து உயிரினங்களை பாதுகாப்பதற்காக தகுந்த பாதுகாப்பு தேவைப்படுகின்றன. அதனால் அணு உலையைச் சுற்றி கொன்கிரீட் சுவர்களும், கதிர் வீச்சை தடுக்ககூடிய பாதுகாப்பு வேலியும், கருவிகளும் அமைக்கப்பெறுகின்றன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment