
பெரும் பெரும் பாதகைகளில் இந்த நாயகர்களுடன் தமிழக ரசிகர்களின் படங்கள் சிறிய அளவில் இணைக்கப் பட்டிருந்தது. தமிழக மக்களின் அடிமைத் தனத்தின் உச்சமாக அஜித்தின் படத்திற்கு சில தமிழர்கள் பாலூற்றி சிறப்பு மரியாதை செய்துள்ளனர். ஏழை ரசிகர்களின் வீட்டில் தின்பதற்கு சோறு இருக்கிறதோ இல்லையோ , இங்கு பதாகைகளுக்கு ஊற்ற பால் இருக்கிறது .
தமிழக மக்கள் திரைப்படத்திற்கு நெடுநாட்களாக அடிமைகள் என்பது தெரிந்த விடயம் தான். ஆனால் குறைந்தது திரைபடத்தில் நடிப்பது தமிழர்கள் தானா என்று தெரிந்து மரியாதை செலுத்தினால் கூட சகித்துக் கொள்ளலாம். 'ஆரம்பம்' படத்தில் நடிக்கும் இரண்டு நாயகர்கள் மற்றும் இரண்டு நாயகிகளும் தமிழர் அல்லாதவர்கள் . அதாவது மலையாளிகள் மற்றும் வடநாட்டவர். தமிழ்ப் படங்களில் தமிழர் அல்லாதவர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இவர்களுக்கு பணத்தையும் கொடுத்து மரியாதை வேறு செய்கின்றனர் தமிழர்கள். தமிழன் மட்டும் தான் வந்தாரை வாழ வைப்பது மட்டுமல்லாமல் அவர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறான். தமிழர் பணத்தில் கொழுத்த இவர்கள் தமிழர் பிரச்சனை என்றால் மட்டும் ஓடி ஒளிந்து கொள்கிறார்கள்.
அடிமைத் தனத்தில் சிக்கித் தவிக்கும் தமிழினமே! திரைப்படத்தை பார்ப்பதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளுங்கள். வந்தேறிகளை தலையில் தூக்கி சுமக்கும் இழிவான வேலையை செய்யாதீர்கள். ஒரு தமிழ் திரைப்படத்தை ஊக்குவிக்க வேண்டுமெனில் குறைந்தது அதில் நடிக்கும் நாயகன் அல்லது நாயகி தமிழர் தானா என்பதை ஒரு முறை உறுதி செய்து விட்டு ஊக்குவியுங்கள். யாருமே தமிழர் அல்ல என்றால் அப்படத்தை தயவு செய்து புறக்கணியுங்கள்!
இந்தி"(தீ)ய - "இந்தி"(தீ)ய ஒன்றியம்-
"இந்தி"(தீ)யன் அல்ல தமிழன்டா "
"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..
செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்
www.senkettru.wordpress.com
No comments:
Post a Comment