Friday, November 1, 2013
தமிழனாய் இருப்பதற்காக வெட்கப்படுகின்றேன் ..! எனது தங்கைகளை, எனது அக்காக்களை ஏதோ ஒரு சிங்கள நாய் கூட்டங்கள் இழுத்துச் சென்று கடித்துக் குதறி கொன்று குவிக்கின்றனர்.
அதுவும் எமது நாட்டில், எமது மண்ணில் ஒரு அன்னிய நாய் வந்து எமது பெண்களை இவ்வாறு கொன்று குவித்த போது, மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நாம் இனி தமிழன் என்றும் தமிழ் என்றும் கூறுவதானால் என்ன பயன்...?
இனி என்ன வரலாறு வேண்டி இருக்கின்றது எமக்கு. தமிழன் என்றால் யார் என்றால் இனி எதிர்காலம் இப்படித்தான் கூறும்.
சொந்த நாட்டில், சொந்த மண்ணில் சொந்த இன பெண்களின் கற்புகள் அந்நியனால் சூறையாடப்படும் போது அமைதியாக வேடிக்கை பார்த்த கூட்டம் தான் தமிழர்.
12கோடி தமிழர் உலகமெங்கும் இருந்தும் கேவலம் வெறும் 1 கோடி கூட இல்லாத சிங்களவன் முன் மண்டியிட்ட கூட்டம் தான் தமிழர்.
நாம் கோழைகள் தானே. இனி என்ன நடந்தாலும், என்ன வந்தாலும் அன்று போன எம் தங்கைகளின் உயிர்கள் இனி வருமா?
அன்று அங்கே இராணுவத்தினரிடம் சிக்கிய எம் தங்கைகளை ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். தமிழன் என்று சொல்ல வெட்கபடுவீர்கள்.
இத்தனைக்கும் இந்த சம்பவம் நடந்த மே 17,18 நாட்களில் அதே முள்ளிவாய்க்காலில் தான் நானும் இருந்தேன் என்று சொல்லவே கேவலமாக இருக்கு.
இனி நாம் எத்தனை பெரிய வெற்றிகள் பெற்றாலும், எத்தனை இடம்களை கைப்பற்றினாலும், சொந்த பெண்களை கூட காப்பாற்ற முடியாத கோழைகள் தமிழர் என்ற கறை எம்மை விட்டு போகாது.
எமது தங்கைகளிடம் மன்னிப்பு கேட்க கூட தகுதியற்ற ஈன பிறவிகளில் ஒருவன்.
- ஈழ மைந்தன்
"இந்தி"(தீ)யன் அல்ல தமிழன்டா "
"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..
செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்
www.senkettru.wordpress.com
இசைப்ரியாவின் இனப்படுகொலை ஆதாரங்கள் - chilling new evidence from channel 4 - srilankan killing of isaipriya
http://www.youtube.com/watch?v=anBpFJAMnMI
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment