இந்திய அரசின் எந்த திட்டத்திற்கும் சமசுக்ரித பெயர் தான் சூட்டப்படுகிறது. ராணுவ கருவிகள், போர் கப்பல்கள், வானூர்திகள், விண்வெளிக் கலங்கள் என அனைத்தும் சமசுக்ரித பெயரையே தாங்கி உள்ளன. நிலவிற்கு அனுப்பும் விண்கலத்திற்கு சந்திரயான், செவ்வாய் கோளுக்கு அனுப்பும் கலத்திற்கு மங்கள்யான், மேலும் அக்கினி, ப்ரிதிவி என அனைத்து ஏவுகனைகளுக்கும் சமசுக்ரித பெயர் தான் உள்ளது.
நடுவண் அரசின் கீழ் இயங்கும் ஆயுள் காப்பீட்டு திட்டங்கள் அனைத்திற்கும் சமசுக்ரித்த பெயர்கள் தான். நடுவண் அரசின் பாரத் ரத்தினா, அர்சுனா, பத்ம பூசன், பரம் வீர் சக்கிரா என அனைத்து விருதுகளும் சமசுக்ரித பெயரையே தாங்கி வருகின்றன .
இந்தியாவில் உள்ள அனைத்து நடுவண் அரசின் பள்ளிகளிலும் சமசுக்ரிதம் ஒரு விருப்ப பாடமாக உள்ளது. விருப்ப பாடமாக இந்த இடத்தை தமிழுக்கோ அல்லது வேறு இந்திய மொழிகளுக்கோ இப்பள்ளிகள் கொடுப்பதில்லை.
போதாக் குறைக்கு தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் குழந்தைகளுக்கு சமசுக்ரித்த பெயர்களையே சூட்ட பெற்றோர்களை ஊக்குவிக்கின்றனர் சோதிடர்கள். அனைத்து இந்து மதக் கோவில்களிலும் தமிழுக்கு இடமில்லாமல் சமசுக்ரித்த மொழிக்கே இடமளித்து வருகின்றனர் ஆரிய மதவாதிகள் மற்றும் கோவில் பூசகர்கள்.

இப்படி எங்கும் செத்த ஆரிய ஈன மொழி சமசுக்ரிதத்தை அனைத்து இடங்களிளும் வேரூன்றும் தீய வேலையே செய்துவிட்டப் பிறகு அதற்கு தனியாக தேசிய மொழி எனும் தகுதி தேவைதானா?
உண்மையில் தேசிய மொழியாக வருவதற்கு அத்துணை தகுதியும் உள்ள ஒரே மொழி தமிழ் மொழி தான் . அதை தேசிய மொழியாக்க ஆட்சி மொழியாக்க நம்மாலான அனைத்து வேலைகளையும் தமிழர்கள் நாம் செய்ய வேண்டும்.
உண்மையில் தேசிய மொழியாக வருவதற்கு அத்துணை தகுதியும் உள்ள ஒரே மொழி தமிழ் மொழி தான் . அதை தேசிய மொழியாக்க ஆட்சி மொழியாக்க நம்மாலான அனைத்து வேலைகளையும் தமிழர்கள் நாம் செய்ய வேண்டும்.
இதை நாம் இப்போது செய்யவில்லை எனில் சு. சாமி போன்றவர்கள் மேலும் சமசுக்ரித்த மொழியை அனைத்து மக்களிடமும் எப்படியெல்லாம் திணிக்க முடியும் என்ற வேலையை செய்து கொண்டிருப்பான்.
தமிழை இந்தியாவின் ஆட்சி மொழியாகுவோம் . இந்த இலக்கை வைத்து நம் போராட்டங்களை முன் நகர்த்துவோம். நம் தலைமுறையில் விண்வெளிக்கு தமிழ் பெயர் கொண்ட விண்கலத்தை அனுப்புவோம் .
தமிழை இந்தியாவின் ஆட்சி மொழியாகுவோம் . இந்த இலக்கை வைத்து நம் போராட்டங்களை முன் நகர்த்துவோம். நம் தலைமுறையில் விண்வெளிக்கு தமிழ் பெயர் கொண்ட விண்கலத்தை அனுப்புவோம் .
https://www.youtube.com/watch?v=sCJ70skXaqE
No comments:
Post a Comment