Friday, November 8, 2013

ஆயிரம் பெரியார் வந்தாலும் ஆயிரம் சங்கராசாரியார்கள் வந்தாலும் கடைசித் தமிழன் இருக்கும் வரை தமிழை அழிக்கமுடியாது.

 

சென்ற எத்துவாளி தி.மு.க ஆட்சியின் போது சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி புகுத்தப்பட்ட்து.பின் இப்போது ஆட்சியில் இருக்கும் ஆரிய தி.மு.க சயல்லிதா ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி புகுத்தப்பட்டுள்ளது.

எல்லா வித தி.மு.காவின் செயல்களையும் எதிர்ப்பதாகவே காட்டிக் கொள்ளும் சயல்லிதாவும்,களவாணி தி.மு.கவும் தமிழை ஒழித்துக் கட்டுவதில் மட்டும் ஒன்றாகிவிடுகிறார்கள். இது தான் ஆரியம் திராவிடத்தின் கள்ளக் கூட்டு என்பது.ஆரியத்தின் கள்ளக் குழந்தை திராவிடம்.ஆனால் இவர்களால் ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு தலைகீழாக நின்றாலும் தமிழை ஒழித்துக் கட்டுவது என்பது முடியவே முடியாது என்பதற்கு வரலாறு சுட்டிக்காட்டுகிறது . 


சுமார் 1000 ஆண்டுகளாக ஏன் இன்று வரை ஆண்ட,ஆண்டுகொண்டிருக்கிற எந்த ஒரு அரசின் ஆதரவும் இல்லாமல் தமிழ் இன்றும் இளமைத் துள்ளலோடும் ,உலகின் வேரெந்த மொழிக்கும் இல்லாத சிறப்போடும் உயிர் வாழ்வதே இந்த உலகின் மிகப் பெரும் ஆச்சரியம்,அதிசயம்.காரணம் அது அறிவியலொடு தன்னை இணைத்துக் கொண்டுள்ளது தான் காரணம். ஆயிரம் பெரியார் வந்தாலும் ஆயிரம் சங்கராசாரியார்கள் வந்தாலும் கடைசித் தமிழன் இருக்கும் வரை தமிழை அழிக்கமுடியாது.

https://www.youtube.com/watch?v=4oSW5p1HRxA

No comments:

Post a Comment