இத்தனை ஆண்டுகளாக தமிழகத்தை ஏய்தும், சுரண்டியும் பிழைத்து வந்த இந்தியாவை எதிர்ப்பது தான் நேர்மையான போராட்டமாக இருக்க முடியும்.
தமிழர்களின் மண் உரிமை, மொழி உரிமை, பண்பாட்டு உரிமை, கனிம வளங்கள் உரிமை, நீர் உரிமை , அரசியல் உரிமை என எல்லா வகையான உரிமைகளை பறித்ததோடு மட்டுமில்லாமல், இன்று தமிழினத்தை அழிப்பதற்கு இலங்கையோடு கூட்டு சேர்ந்து தமிழக மக்களின் போராட்டங்களை கால் தூசுக்கும் மதிக்காமல் நம்மை பார்த்து எள்ளி நகையாடுகிறது இந்திய வல்லாதிக்க அரசு.
இப்படியான மாபாதகமான அரசின் கீழ் தமிழ் மக்கள் வாழ்வது என்பது எந்த விதத்திலும் பாதுகாப்பு இல்லாதது. ஈழத் தமிழர்களுக்கு மட்டும் இந்திய அரசு எதிரி அல்ல. தமிழக தமிழர்களுக்கும் இந்திய அரசே எதிரி நாடாக உருவெடுத்து உள்ளது.
இன்று ஆளுநர் ரோசையாவே வெளியேறு என்ற முழக்கம் காலத்தின் தேவையாக இருந்தாலும் இனி வரும் காலங்களில் இந்திய அரசே தமிழ்நாட்டில் இருந்து வெளியேறு என்ற முழக்கம் தான் தமிழ் மக்கள் வைக்க வேண்டிய முழக்கமாக உள்ளது. நமக்கு தேவையான அரசியல் அதிகாரத்தை பெற்றுக் கொண்டு, இந்திய அரசின் தலையீடு இல்லாத தன்னாட்சி பொருந்திய தமிழக அரசை நிறுவுவதே தமிழர்களின் எதிர்கால பணியாக இருத்தல் வேண்டும்.
தமிழகமெங்கும் ஆக்கிரமிப்பு நடத்திவரும் இந்திய அரசின் அலுவலகங்கள், ராணுவ மையங்கள், ஆய்வுக் கூடங்கள், அணு உலைகள் என அனைத்தையும் தமிழகத்தை விட்டு வெளியேற்றுமாறு நாம் கோரிக்கை வைத்து போராட வேண்டும்.
தமிழகத்தில் உள்ள அனைத்து நடுவண் அரசு நிர்வாகமும் தமிழக அரசின் கீழ் இயங்குதல் வேண்டும். தமிழர் நலனுக்கு எதிராக செயல்படும் இந்தியாவே, தமிழர் நிலத்தை விட்டு வெளியேறு என்ற ஒற்றை கோரிக்கை மட்டுமே நமக்கு உண்மையான நன்மையை பயக்கும் என்பதை உணர்ந்து நாம் அக்கோரிக்கையை வலுப்படுத்வோம்.
வெளியேறு ! வெளியேறு ! இந்தி"(தீ)யன் எல்லாம் வெளியேறு
https://www.youtube.com/watch?v=ueoaf2Qw7p4
No comments:
Post a Comment