உலக வரைபடத்தில் தமிழ் நாடு என்று ஒன்று இல்லாமல் போய் இருக்கும். சேர, சோழர் , பாண்டியர்கள் ஆட்சி செய்த தமிழர் நிலங்கள் தமிழர் நாடு என்ற ஒற்றை அடையாளத்தின் கீழ் ஒன்றாக வந்ததும் இன்றைய நாளில் தான்.
இப்போதுள்ள தமிழ் நாட்டை நாம் பெற்றதற்கு அரும்பாடுபட்ட எல்லை காவலர்கள் மா.பொ.சி, மார்சல் நேசமணி அய்யா , மங்கலம்கிளார் மற்றும் பல போராளிகளுக்கும் நாம் வீர வணக்கத்தை செலுத்துவோம். மேலும் தமிழ் நாடு என்று பெயர் வருவதற்கு தன் இன்னுயிரை ஈந்த ஈகி சங்கரலிங்கனாருக்கு தமிழர்கள் நாம் இந்நாளில் மரியாதை செலுத்துவோம்.
வரலாற்றில் தமிழர் நாடு என்று உருவாகி விட்ட பின், தமிழர் நிலம் , வளம் , மொழி , பண்பாடு ஆகியவற்றை காப்பதும் , அந்நியர்கள் நம்மை ஆட்சி செய்யாமல் தமிழர் நாட்டை தமிழரே ஆட்சி செய்யும் நிலையை உருவாக்குவதும் தமிழர்களாகிய நமது கைகளில் தான் உள்ளது . விழி போல் எண்ணி மொழி காப்போம், இனம் காப்போம் , மண் காப்போம் என்று இன்றைய நாளில் சூளுரைப்போம். இருப்பதை காப்போம் . இழந்ததை மீட்போம்.
வாழ்க தமிழ், வளர்க நற்றமிழர், சுடர்க தமிழர் நாடு !
இந்தி"(தீ)ய - "இந்தி"(தீ)ய ஒன்றியம்-
"இந்தி"(தீ)யன் அல்ல தமிழன்டா "
"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..
செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்
www.senkettru.wordpress.com
No comments:
Post a Comment