Saturday, November 2, 2013
தமிழ் மொழி மீட்ப்பாளர் பரிதிமாற் கலைஞர் நினைவு நாள் 2.11.1903. ஒரு நூற்றாண்டுக்கு முன்பே 'சூரிய நாராயண சாசுதிரி' எனும் வடமொழிப் பெயர் நீக்கி 'பரிமாற்கலைஞர்' என்று தனித் தமிழில் சூட்டிய பெருமகனார். உயர்தனிச்செம்மொழி தமிழென்றும், வடமொழிக்கு முந்திப் பிறந்தது தமிழென்றும் உலகுக்கு அறிவித்தவர். அது மட்டுமின்றி பிரித்தானியரால் திணிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கு தமிழர்கள் அடிபணியக் கூடாது என்றும் ஆணித்தரமாக வாதுரை செய்தவர்.
ஆரியகுலத்தில் பிறந்தாலும் தமிழராய் தமிழுக்காய் வாழ்ந்து மடிந்திட்ட பரிதிமாற் கலைஞர் அவர்தம் எழுதிய 'தமிழ்மொழி வரலாறு' நூலில், "ஆரியர்கள் தமிழரிடமிருந்து பல அரிய விசயங்களையும் மொழிபெயர்த்து தமிழர் அறியும் முன்னரே அவற்றை தாமறிந்தன போலவும், வடமொழியினின்றுமே தமிழிற்கு அவை வந்தன போலவும் காட்டிவிட்டனர்.
தமிழருக்கு ஆரியர் "இந்தி"(தீ)ய ஒன்றியத்திற்கு வரும் முன்னரே எழுதப் படிக்கத் தெரியும். எழுத்து சுவடி யென்பன தனித்தமிழ் சொற்களாதலுங் காண்க!" என்று குறிப்பிட்டுள்ளார்.
புகழ்பெற்ற தமிழறிஞர் சி.வை.தாமோதரம் அவர்கள் சிறு வயது முதலே பரிதிமாற்கலைஞரின் தமிழ்த் துடிப்பை அறிந்தவர். பரிதிமாற்கலைஞர் குறித்து அவர் கூறியது வருமாறு: "பிராம்மணராயிருந்து, சாஸ்திரயென்னும் பட்டம் புனைந்திருந்தும் தமிழ் மொழியில் இவ்வளவு ஆர்வங்கொண்டு, அதை நீர் ஆராய்ந்திருப்பது நமக்கு ஓரளவு விந்தையே அளிக்கின்றது. உம்மைத் 'தமிழ் சாசுதிரி' என்று அழைத்தல் சாலப் பொருந்தும்" என்றார்.
அவரின் விருப்பப்படி 19 02இல் மதிவாணன் எனும் கதை நூலினை பரிதிமாற் கலைஞர் உயர்தனிச் செம்மொழி நடையில் எழுதி வெளியிட்டார்.
இவர் பிறந்த மதுரை நகரம் தமிழுணர்ச்சியற்று கிடந்ததை வேதனையோடு பின்வருமாறு தெரிவித்தார். "தாய்மொழியாகிய தமிழினை மறந்து செல்வப் பொருளீட்டலிலேயே காலம் போக்கியுழலும் மதுரையாகிய தாம் பிறந்த நகர்கிரங்கியாற்றாது பாடியது"
1901ஆம் ஆண்டு மே24 இல் மதுரையில் பாசுகர சேதுபதியார் தலைமையில் பாண்டித்துரைச்சாமி மேற்பார்வையில் நான்காம் தமிழ்ச்சங்கம் நிறுவப்பட்டது. இச்சங்கம் செந்தமிழ் எனும் திங்களேட்டை வெளியிட்டது. அதன் முதல் ஏட்டில் தான் பரிதிமாற் கலைஞர் உயர்தனிச் செம்மொழி தமிழே! என்று தலைப்பிட்டு கட்டுரை வெளியிட்டார்.
தமிழுக்கு செம்மொழித் தகுதிநிலையை ஒரு நூற்றாண்டுக்கு பிறகு தில்லி அரசால் வழங்கப்பட்டது, இது பரிதிமாற்கலைஞருக்கு கிடைத்த வெற்றியென்று தமிழர்கள் மகிழ்ச்சியில் திளைத்திருந்த போது தில்லி அரசு மலையாள மொழிக்கும் செம்மொழி தகுதி நிலையை தற்போது வழங்கியுள்ளது. இது தமிழை அவமானப்படுத்தும் செயலாக தமிழர் இயக்கத் தலைவர்கள் எவரும் இதுநாள் வரை கண்டிக்க வில்லை.
குடும்பத்திற்கு பதவிகள் வேண்டி முதிர்ந்த வயது நிலையிலும் தில்லிக்கு சக்கர நாற்காலியில் படையெடுத்த கலைஞருக்கும். முப்பத்தி மூன்று வயது வரை தமிழுக்காகவே வாழ்ந்து மறைந்த பரிதிமாற்கலைஞருக்கும் உள்ள வேறுபாடு இது தான்.
முப்பத்தி மூன்று வயதுவரை வாழ்ந்தலென்ன, தமிழுக்கு உண்மையாக தொண்டு செய்வோன் என்றும் சாவதில்லை! பரிதிமாற்கலைஞருக்கு வீர வணக்கம்!
-
"இந்தி"(தீ)யன் அல்ல தமிழன்டா "
"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..
செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்
www.senkettru.wordpress.com
ஆரிய திராவிட கூட்டுக்களவானிகளை வேரறுப்போம்!
https://www.youtube.com/watch?v=MpKBSBWg3dg
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment