Sunday, November 10, 2013

பேரரசர் ராச ராச சோழனின் 1028வது சதய விழா இன்று(நவம்பர் 10,11) தஞ்சையில் கொண்டாடப்படுகிறது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சோழமன்னன் ராச ராச சோழன் சதய நட்சத்திரத்தில்பிறந்­தார் என்று கல்வெட்டு செய்திகள் தெரிவிக்கின்றன,எனவே ஒவ்வொரு ஆண்டும் ராச ராசன் பிறந்த நாள் விழாவாக சதயவிழா கொண்டாடப்படுகிறது.



தஞ்சையை தலைநகராக கொண்டு 30 ஆண்டுகாலம் சிறப்பான ஆட்சி செய்து பல போர்களில் வெற்றி பெற்று சோழ அரசை அடுத்த சில நூற்றாண்டுகளுக்கு அரியணையில் இருக்க வைத்த காலம் அது.
பேரரசர் ராச ராசன் தஞ்சையில் சிறப்பு வாய்ந்த பெரிய கோவிலை கட்டியதன் வாயிலாக தமிழர்களின் பெருமையை உலகறியச்செய்தவர்.


அறுபதாயிரம் யானைப்படையும், ஒரு லட்சம் குதிரைப் படையும், ஒன்றரை லட்சம் காலாட்படையும், ஆகியவற்றை உள்ளடக்கிய வலிமையான இராணுவத்தை கொண்டு ஆட்சி புரிந்துள்ளான்.


இந்திய ஒன்றியத்தின் மூத்த குடி தமிழர்களே கொரியா வரை ஆண்டனர். ஆதாரங்கள் இணைக்கப் பட்டுள்ளது.
இந்தியாவின் முதற் கப்பற்படை அமைத்து கடல் கடந்து நாடுகளை வென்ற பெருமைக்குரிய மன்னன் ராச ராசன். இத்தகைய பெருமைக்குரிய மாமன்னனின் 1028 வது சதயவிழா இன்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது

 

http://www.youtube.com/watch?v=TkBZL9yNAQc

No comments:

Post a Comment