Sunday, November 3, 2013

கன்னடர்களிடம் போட்டுக் கொடுக்கும் திராவிடம்..... சன்ராம் - 400-500 வருடங்களாச்சு. இந்த பூமியில் இருக்கீங்க. இந்த காற்றை சுவாசிக்கிறீங்க. இன்னும் உங்களுடைய வீட்டில பேசக் கூடிய தாய்மொழியை மாற்றாமல் இருக்கிறீங்க. தமிழர்களுடன் நீங்க கரையாமல் இருக்கிறீங்க. அப்பறம் உங்களுக்கு எப்படி ஆளும் உரிமை அப்படிங்கிற வாதத்தை அவங்க முன் வைக்கிறாங்க


கொளத்தூர் மணி - எல்லோரும் தமிழ் பேசினால்கூட சென்னைத் தமிழ் பேசுபவர்களை ஒத்துக்கொள்ள மாட்டோம் என்று கூட அவர்கள் சொல்லத் தொடங்குவார்கள். இவர்களே கர்நாடகத்தில் வாழ்கிற தமிழர்களுக்கு உரிமை இல்லை என்று பேசுகிறார்கள். இதே குற்றச்சாட்டை தமிழர்கள் மீது கன்னடர்களும் வைக்கிறார்கள்.

கர்நாடகத்தில் வாழ்ந்தால் கூட எங்கள் நாட்டில் வாழ்ந்து கொண்டு இன்னும் நீங்கள் வீட்டில் தமிழ்தான் பேசுகிறீர்கள். தமிழ்ப் பள்ளி வேண்டும் என்று கேட்கிறீர்கள். தமிழ் வழியில் பயில வேண்டும் என்று கேட்கிறீர்கள். நீங்கள் எல்லாம் இந்த நாட்டுக்கு துரோகி என்பதாக அந்த நாட்டுக்காரர்கள் பேசுகிறார்கள். அதை எப்படி பார்ப்பது என்பதைதான் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஒற்றை அளவுகோல் வேண்டும். எதை சொன்னாலும் சரி. ஒற்றை அளவு கோலை வையுங்கள். எல்லோரும் மாநில மொழியில் கல்வி கற்க வேண்டும் என்று வையுங்கள். எல்லோரும் தாய் மொழியில் கல்வி கற்க வேண்டும் என்று வையுங்கள். நாங்கள் தாய்மொழிக் கல்வியை வலியுறுத்துபவர்கள்.

மாநில மொழி என்பதை விட தாய்மொழிக் கல்வியை வலியுறுத்துகிறோம். அரசு பதவிகளுக்குப் போவதற்கு மாநில மொழியில் தேர்ச்சி இருக்க வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்கிறோம்..

தொடக்கக் கல்வியை தாய்மொழியில்தான் கொடுக்க வேண்டும் என்பது எங்களுடைய கருத்து. அது கர்நாடகத்தில் இருக்கிற தமிழனுக்கும் பொருந்தும். தமிழ்நாட்டில் இருக்கிற தெலுங்கனுக்கும் பொருந்தும்.

அவர்கள் மண்ணைப் பார்க்கிறார்கள், நாங்கள் மக்களைப் பார்க்கிறோம் என்று சொல்லும் திராவிடர்கள், எம் மண்ணைக் கன்னடர்களிடம் இழந்ததால் எம் தமிழ் மக்களை அவனின் சொந்த தமிழ் பூமியில் அவனது தாய் மொழி உரிமையக் காட்டிக் கொடுக்கும் எட்டப்பர்களாகத்தான் திராவிடம் இருக்கிறது இதற்குப் பிறகும் திராவிடம் தமிழர்களின் நலன் காக்கும் அமைப்பு என்று எத்தனை காலம் தான் தமிழர்கள் காதில் பூச்சுற்றுவார்களோ?????

கொளத்தூர்மணியின் புதியதலைமுறைப் பேட்டியே அதை எடுத்துச் சொல்கிறது.

-ஏகாந்தன்நம்பி ஏகாந்தன்

"இந்தி"(தீ)யன் அல்ல தமிழன்டா "

"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..                         

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

www.senkettru.wordpress.com

 

No comments:

Post a Comment