Wednesday, November 6, 2013

முள்ளிவாய்க்கால் வியாபாரம் இத்தோடு முடிந்து விடுமா? இன்றும் தொடருமா? உலகெங்கும் வெற்றிகளை வரலாறாக்குதல் கண்டிருக்கிறோம். இங்கே தோல்வியின் வரலாற்றை எழுதி வைக்கிறார்கள். தோல்வியின் வரலாற்றை, தோற்றவரின் வரலாற்றை எதிரிகள் தான் எழுதி வைப்பார்கள்... தோல்வியின் சின்னங்களை எதிரிகள் தான் எழுப்புவார்கள்... தேவை வெற்றியின் வரலாறுகளும்... அல்லது வெற்றியை நோக்கி நகர்கின்ற வரலாறுகளுமே... இது காலகாலத்துக்கும் தமிழர்களின் பெருமையையா பறைசாற்றும்? அப்புறம் பா.ச.க. காரர்கள் விழாவுக்கு அழைக்கப்பட்டதன் நோக்கம்??? அழைத்தவர்களுக்கும் அழைக்கப்பட்டவர்களுக்கும் இருக்கும் அபூர்வ ஒற்றுமையைக் காட்டுகின்றது???



இதன் உளவியல் ஒன்றும் புரியவில்லை...அது நடந்த நாடடில் எழுப்பப்பட்டிருந்தால் கூட அதன் உளவியலைப் புரிந்து கொள்ளலாம்... ஆனால் இங்கே எதற்காக?

அதிலும் இதிலுள்ள காட்சிச் சித்தரிப்புகளின் புகைப்படங்கள் அனைத்தும் கையாலாகாதவர்கள் தமிழர்கள் என்கிற சித்திரத்தைத்தான் கால காலத்துக்கும் வழங்கப் போகிறது...

அப்புறம் பா.ச.க. காரர்கள் விழாவுக்கு அழைக்கப்பட்டதன் நோக்கம்??? அழைத்தவர்களுக்கும் அழைக்கப்பட்டவர்களுக்கும் இருக்கும் அபூர்வ ஒற்றுமையைக் காட்டுகின்றது???

விதியே விதியே தமிழ்ச்சாதியையே என்செயக் கருதி இருக்கின்றாயோ என்று பாரதியைப் போலப் பிலாக்கணம் வேண்டுமானால் பாடலாம்... முள்ளிவாய்க்கால் வியாபாரம் இத்தோடு முடிந்து விடுமா? இன்றும் தொடருமா? தனியே எவர்க்குமொரு குணமுண்டு...

"இந்தி"(தீ)யன் அல்ல தமிழன்டா "

"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..                         

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

www.senkettru.wordpress.com 

குமரிக்கண்டம் தமிழர் வரலாறு kumari kandam history of tamils

https://www.youtube.com/watch?v=w-ZZMK-9NLQ

No comments:

Post a Comment