ஈழத்து பெண் போராளி இசைப்பிரியா
சிங்கள ராணுவத்தால்
பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு
கொலை செய்யப்பட்ட சேனல் -4 வெளியிட்ட
காணொளியை இப்போதுதான் பார்த்தேன்.
என்ன செய்வது...
கையால் ஆகாத மனிதனாய்...
கிடந்து உழல்கிறேன் ...
தமிழ் இனத்தை அழிப்பதையே கொள்கையாகக் கொண்ட பாசிச இனவெறி பிடித்த சிங்கள ராணுவம்...
தனது விரிவாக்க வெறிக்காக ,
"இந்தி"(தீ)ய ஒன்றியத்தின் சுரண்டல் கூட்டத்தின் நலனை மட்டும் பேணி வரும் "இந்தி"(தீ)ய ஒன்றியத்தின் அரசின் துணையோடு, தமிழ் மக்களை கொன்று ஒழித்து வருகிறது சிங்கள ராணுவம்...
இலங்கையில் உள்ள அனைத்து வளங்களையும் கொள்ளையடிக்கும் நோக்கோடு... இனவெறி பிடித்த சிங்கள அரசுக்கு , அத்தனை உதவிகளையும் செய்யும் உலகத்தை சுரண்டி வரும் & சுரண்ட விரும்பும் நாடுகள் ...
இனவெறி பிடித்த சிங்கள ராணுவதிற்கு துணையாகவும் , பாதுகாப்பாகவும் கூட்டாளியாகவும் உள்ள, நமது தமிழ்தேசத்தை அடிமைப்படுத்தியுள்ள "இந்தி"(தீ)ய ஒன்றியம்...
"இந்தி"(தீ)ய ஒன்றியத்தின் கொடுரத்தை, அதன் துரோகத்தை,
சிங்கள அரசுக்கு துணை நின்றதை மட்டும் பேசிவிட்டு...
தமிழ் ஈழ மக்களுக்கு எவ்விதத்திலும் உதவ முடியாமல்
உள்ள நமது தமிழகத்தின் அடிமை நிலையை
பேச வக்கற்ற அரசியல் கட்சிகள்...
தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பதையும்,
தமிழகத்தில் ஆட்சியை பிடித்து விட்டால் உடனே
தமிழ் ஈழத்திற்கு அனைத்து உதவியும் செய்ய முடியும்
என்ற போலியான நம்பிக்கையை எம்மக்களிடம் ஏற்படுத்தும்
பொய்யர்கள் கூட்டம் மறுபுறம் ...
தமிழகத்தை ஆளும் அரசு,
"இந்தி"(தீ)ய ஒன்றியத்திற்கு மடல் எழுதுவதைத் தவிர ,
வேறு எந்த முடிவு எடுக்கும் அதிகாரமும்
உண்மையில் இல்லை என்பதை
நேர்மையாக சொல்ல வக்கற்றவர்களே
எம் தமிழ் நாட்டில் மாபெரும்
அரசியல் தலைவர்களாய் உலவும் அவலம் ...
பேசிப் பேசியே என் தமிழகத்தை, மக்களை
ஏமாற்றி திரியும் கட்சிகள்...
அடையாளப் போராட்டங்கள் மட்டும் நடத்தி, நடத்தியே
எம் தமிழ் மக்களை எழுந்து விடாமல் தடுத்து நிறுத்தி
காயடித்து வரும் கட்சிகள் ...
எட்டுக் கோடி தமிழர்கள் நாம் தமிழகத்தில் இருந்தும்,
ஒன்னரைக் கோடி சிங்கள அரசின் அட்டுழியதிற்கு
முடிவு கட்ட , எமது தமிழக மக்களுக்கு என்று
சொந்த தேசிய அரசு இல்லை என்று உண்மையை
தெருவில் இறங்கி பேசக்கூட வக்கற்ற தமிழக கட்சிகள் ...
தமிழகம் அடிமையாக உள்ளது ...
தமிழகத்தின் விடுதலை மூலம் மட்டுமே
மற்றவர்களுக்கு நாம் உதவ முடியும்
என்ற உண்மை எம் தமிழ் மக்கள்
அறியாமல் இருக்கும் வரை...
தமிழக விடுதலைக்கான செயல்பாட்டை
முன்னெடுக்காமல் இருக்கும் வரை ...
"இந்தி"(தீ)ய ஒன்றியம் ஆளும் தேர்தல் கட்சிகளால் மட்டுமே
தமிழ் ஈழ விடுதலைக்கும் , தமிழ் ஈழ மக்களுக்கும் உதவுவதற்கு தடை என்ற பொய்யான மாய பிம்பத்தை உடைக்காத வரை ...
எம் இனத்திற்கும் , எம் மக்களுக்கும் விடிவு என்பது எப்போதும் இல்லவே இல்லை !
"இந்தி"(தீ)யன் அல்ல தமிழன்டா "
"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..
செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்
www.senkettru.wordpress.com
இசைப்ரியாவின் இனப்படுகொலை ஆதாரங்கள் - chilling new evidence of comrade isaipriya rape & killings
http://www.youtube.com/watch?v=anBpFJAMnMI
No comments:
Post a Comment