மனித நேய கண்ணிவெடி அகற்றும் பணியினில் ஈடுபட்டிருக்கும் சர்வதேச அமைப்பொன்றின் பணியாளர்களிடையே இத் தடயம் சிக்கியிருக்கிறது.
கிளிநொச்சி நகரையண்டிய திருவையாறு பகுதியினில் வீசப்பட்டு வெடித்த நிலையினில் காணப்படும் கொத்து குண்டெனப்படும் கிளசுடர் ரக குண்டுகளது எச்சங்களே மீட்டெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த மனித நேய கண்ணி வெடியகற்றல் பணியினில் ஈடுபட்டிருக்கும் சர்வதேச அமைப்பு மீட்டெடுக்கப்பட்டுள்ள கொத்து குண்டின் தடயங்களை தமது அலுவலகத்தில் காட்சிக்கென உள்ளே வைத்துள்ளது.
இக்குண்டினது உற்பத்தி நாடு உள்ளிட்ட அனைத்து விவரங்களும் திட்டமிட்டு அழிக்கப்பட்டே அது பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியாதிருப்பதாக கூறப்படுகின்றது. எனினும் இக்குண்டு ரசிய நாட்டு தயாரிப்பாக இருக்கலாமென நம்பப்படுகின்றது.
வன்னி யுத்த நடவடிக்கைகளின் போது கிளசுடர் ரக குண்டுகள் பயன்படுத்தப்பட்டமை தொடர்பாக பல்வேறு தரப்புகளும் குற்றச்சாட்டுகளை எழுப்பி வந்திருந்த போதும் இது வரையிலும் இலங்கை அரசு அதனை மறுத்தே வந்துள்ளது.
குறிப்பாக வன்னி இறுதி யுத்த நடவடிக்கைகளின் போது சட்டவிரோத இரசாயன ஆயுதங்களும் பெருமளவினில் பயன்படுத்தப்பட்டமை தொடர்பான தகவல்களும் வெளியாகிக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இவை வன்னியில் மக்கள் மீது சிறீலங்கா அரச படைகளினால் பாவிக்கப்பட்ட கொத்துக்குண்டுகள் (Cluster Bomb)
கிளசுடர் குண்டு இவ்வாறே இருக்கும். இதனை விமானத்திலிருந்து போடும் போது மிக வேக மாக வந்து நிலத்திற்கு 100 மீற்றர் உயரத்தில் வெடிக்கும். அப்போது அதற்குள் இருக்கும் பல நூற்றுக்கணக்கான சிறு குண்டுகள் மேலும் சிறறி நிலத்தில் வீழ்ந்து வெடிப்பதால் பாரிய சேதங்களை ஏற்படுத்தவல்லது. உலகில் காணப்படும் அவ்வகையான குண்டின் சில படங்களே கடைசியாக உள்ள இரு படங்களும்.
No comments:
Post a Comment