Tuesday, November 5, 2013

சயாவின் இரட்டை நிலை அம்பலம் ! தமிழின விரோதப் போக்கை கட்டவிழ்த்து விட்டுள்ளார் ! தமிழர்கள் செய்த தொடர் போராட்டம் காரணமாக அன்று தமிழக சட்ட மன்றத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினார் சயலலிதா. அவர் தமிழர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்று பலரும் நினைத்தனர் . ஆனால் இன்று சயாவின் உண்மை முகம் வெளிப்படத் தொடங்கி விட்டது.



அண்மையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை நோக்கி மாணவர்கள் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து நினைவுச் சுடரேந்தி தஞ்சை நோக்கி புறப்பட ஆயத்தம் ஆனார்கள். ஆனால் சுடர் பயணம் தொடங்கிய சிறிது நேரத்தில் தமிழக காவல் துறை மாணவர்கள் அனைவரையும் கைது செய்தது. சுடர் பயணத்தை தடுத்து நிறுத்தியது . வரலாற்று சிறப்பு மிக்க முள்ளி வாய்க்கால் முற்றம் திறப்பு விழாவில் இந்த சுடர் பயணம் நிறைவடைய உள்ள நிலையில் , இந்த சுடர் பயணத்தையே தடை செய்துள்ளார் தமிழக முதல்வர். 

தமிழர்களின் ஒட்டு மொத்த பேரழிவை சித்தரிக்கும் விதமாக அமைந்துள்ளது முள்ளிவாய்க்கால் ஈகியர் முற்றம் . அந்த முற்றத்தின் ஒரு பெரு நிகழ்வாக அமைவது மாணவர்களின் சுடர் பயணம் . இப்போது இந்த சுடர் பயணத்தை தமிழக அரசு தடை செய்ததின் மூலம் சயா ஈழத்திற்கு மட்டும் எதிராக மாறவில்லை , ஒட்டுமொத்த தமிழினதிற்கே எதிரியாக மாறிவிட்டார் .

இது ஒரு வரலாற்று பெரும் தவறாகும் . தமிழ் மக்கள் இதை எக்காலத்தும் மறக்க மாட்டார்கள் . வரும் தேர்தலில் சயாவின் தமிழின விரோதப் போக்கிற்கு தமிழர்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்பதில் ஐயமில்லை. சயா தன்னுடைய இரட்டை நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும் ஆரிய திராவிடர்களை ஆட்சிக் கட்டிலில் இருந்து தமிழர்கள் தூக்கி எறிய வேண்டும்.

"இந்தி"(தீ)யன் அல்ல தமிழன்டா "

"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..                         

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

www.senkettru.wordpress.com 

No comments:

Post a Comment