Sunday, November 10, 2013

அய்யா கொளத்தூர் மணியின் புதிய தலைமுறை பேட்டியிலிருந்து...... சன்ராம் - தமிழர்கள் ஆள வேண்டும் என்கிறார்கள் அவர்கள். திராவிடர் என்று நீங்கள் பேசுகிறீர்கள். அது என்ன ஒரு அடையாளம். மனிதனுக்கு இருக்கக் கூடிய ஒரு அடையாளம்தானா! ஒற்றை அடையாளத்தோட ஒருவனுடைய வாழ்க்கை முடிந்து போகுதா என்ன???


கொளத்தூர் மணி - முடியவில்லை. நான் வழக்கமாக சொல்வது உண்டு. ஒவ்வொரு மனிதனுக்கும் பல அடையாளங்கள் உண்டு. எனக்கு வீட்டில் என் மகளிடம் அப்பா என்ற அடையாளம் உண்டு. என் அம்மாவிடம் மகன் என்ற அடையாளம் உண்டு. என் மனைவிக்கு நான் கணவன் என்ற அடையாளம் உண்டு. வெளியே நான் வருகிறபோது என்னுடைய தொழிலுக்கு அடையாளம் உண்டு.

அப்படிதான் சமூக விடுதலைப் போராட்டத்தில் திராவிடர் என்ற அடையாளத்தோடு ஆரிய பண்பாட்டுக்கு எதிராகப் போராடுவோம். அரசியல் விடுதலைக்கு தமிழன் என்ற அடையாளத்தோடு தமிழ்நாட்டு விடுதலைக்குப் போராடுவோம். ஏன் ஒற்றை அடையாளத்துக்குள் சுருக்கிக் கொள்ள வேண்டும் என்பதுதான் எங்களுடைய கேள்வி.

அய்யா கொளத்தூர்மணி அவர்களின் குழப்பலான கேள்விக்குப் பதில்.........


மொழிவழிப்பட்ட ஒரு தேசிய இனத்திற்கு ஒருமொழிதான் அடிப்படையாக இருக்கமுடியும். எனவே ஒரு மொழியின் பெயர்சார்ந்த சொல்தான் அந்த இனத்தின் பெயராகவும் இருக்கமுடியும்,அந்த வகையில்,தமிழ்மொழிசார்ந்த தேசியஇனத்தின் பெயர் தமிழர் என்பதே சரி.

இந்தியன் என்பதும்,திராவிடன் என்பதும் ஒவ்வொரு மொழிசார்ந்த சொல் இல்லை. எனவே இந்தியன் என்றசொல்லும், திராவிடன் என்ற சொல்லும் தமிழ் இனத்தைக் குறிப்பதற்காக மட்டும் அல்லாது ,வேறு எந்த இனத்தையும் குறிப்பிடுவதற்காகவும் பயன்படாது என்பதே உண்மை


.மேலும் ஒரு தனி மனிதனையோ அல்லது ஓர் இனத்தையோ அடையாளப்படுத்த முனைபவர்கள், மூல அடையாளம் அல்லது முதன்மை அடையாளம் பற்றியும்,சார்பு அடையாளம் பற்றியும் தெளிவுபெற்றிருக்கவேண்டும்.ஒரு மனிதனின் மூல அடையாளம் அவனுடைய பெயர்.

அந்த அடையாளம்தான், அன்றாட வாழ்விலும்,அரசுஆவணங்களிலும் தொடர்ந்தும்,நிலையாகவும்,துல்லியமாகக் குறிப்பதாகவும் இடம் பெறுகிறது,அது மாறுவதில்லை.அதே மனிதன் அவன் மனைவியைச் சார்ந்து பெறுகிற இன்னார் கணவன் என்ற அடையாளம்; உறவுசார்ந்த அடையாளம்,ஒருவர் வேலையைச் சார்ந்து பெறுகிற அடையாளம் நடிகர்.,வட்டாட்சியர் போன்றவை.

இந்தச் சார்பு அடையாளங்கள் மாற்றத்துக்கு உட்பட்டவை, நிலையற்றவை. .எனவே ஒருவரை சார்பு அடையாளங்களால் குறிக்காமல் முதன்மை அடையாளத்தால் குறிப்பதே உலக முறையாக இருந்து வருகிறது.
அதைப்போலவே ஒர் இனத்திற்கு மொழிசார்ந்த அடையாளம் முதன்மை அடையளமாகவும், மற்ற கூறுகள் சார்ந்த அடையாளங்கள் சார்பு அடையாளங்களாகவும்இருக்கின்றன.அந்த முறையில் தமிழர்க்கு மொழிசார்ந்த அடிப்படையில் தமிழர் என்பதே முதன்மை அடையாளம்.

இன்றைய அரசமைப்புநிலையைச் சார்ந்த இந்தியர் என்ற சார்பு அடையாளமும், மேற்கொண்டகொள்கையைச்சார்ந்தபொதுமையர் என்ற சார்பு அடையாளமும் தமிழர்களுக்கு நிலையானது இல்லை, துல்லியமாகக் குறிப்பதும் இல்லை.எனவே தமிழரைத், தமிழரின் முதன்மை அடையாளமான தமிழர் என்ற சொல்லால் அடையாளப்படுத்துவதே முறையாகும்.

மேலும் இந்தத் திராவிடப் பற்றாளர்கள், தங்கள் மூல ஆசான் கடைசியாகச் சமூகதளத்தில் 9.12.1973-இல் நடத்திய மாநாட்டிற்குப் பெயரே, “தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாடு”??. என்பதை மறந்துவிட்டுச் சமுதாயதளத்தில் தமிழர்கள் தங்களைத் திராவிடர்கள் என்று அழைத்து கொள்ளவேண்டும் என்று முழக்கிவருகிறார்கள்.

இன்னும் ஒருபடி மேலே சென்று எண்ணிப் பார்த்தால் , தமிழர்களின் அடையாளப் பெயரைத் தீர்மானிக்கும் உரிமை தமிழர்களுக்கு மட்டுமே உரித்தானது; இந்த உரிமையை, எந்த வந்தேறி இனத்திற்கும், அது சில காலம் தமிழர் இனத்தை ஆண்டது என்பதற்காகக்கொடுக்கமுடியாது

http://www.youtube.com/watch?v=MpKBSBWg3dg

No comments:

Post a Comment