Saturday, December 7, 2013

ஈழ தமிழர்களை வைத்து அரசியல் செய்து கொண்டு இருபவர்களின் முகத்திரை தொடர்ந்து கிழிக்கப்படும் சீமானின் ஈழ அரசியலும் ,துரோகங்களும்.



தலைவர் கூறியது என்ன இவர்கள் செய்வது என்ன?????

இன்னும் 10 வருடங்களில் ,நாங்கள் ஆட்சியை பிடிப்போம், இது சீமான் சூளுரைக்கும் வார்த்தைகள் இது.

ஈழ பிரச்னை என்பது , இப்பொழுது உள்ள சூழ் நிலையில் பூகோள ரீதியாக ,வெளி நாட்டு பிரச்னை ,
இதை கூட புரிந்து கொள்ளாமல் , இங்கே இருப்பவர்கள் சீமான் சொன்னதை வேத வாக்காக நினைத்து ,இன்னும் 10 வருடங்களில் சீமான் ஆட்சியை பிடிப்பார், சீமான் தான் முதல் அமைச்சர் ஆகிவிடுவார் , பிறகு வெறும் ஒரு கையெழுத்தில்
ஈழத்தை பெற்று கொடுப்பார் என்று நினைத்து கொண்டு இருகின்றனர்.

இப்பொழுது ,நாம் செய்ய வேண்டியது மத்திய அரசாங்கத்தை அழுத்தங்களை கொடுப்பதன் முலமாக தான் இந்தியாவின் வெளி உறவு கொள்கையை மாற்ற முடியும் ,
அதை செய்தால் தான் சர்வதேச அளவில் ஈழ விடுதலைக்கு ஆதரவு திரட்ட முடியும்,
அதற்க்கு ,நாம் எல்லாம் ஒரே நேர் கோட்டில் ஈழ விடுதலைக்கு ஆதரவு
கொடுக்க வேண்டுமே ஒழிய , அடுத்த முதல் அமைச்சர் நான் ஆகிய பிறகு ஈழ விடுதலையை நான் தான் பெற்று கொடுப்பேன் சொல்லுவது
பச்சை துரோகம் , சுயநலம் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது.

இவர் சொன்னபடி ,தலைவர் இவரை முன் எடுக்க சொன்னார் என்றே வைத்து கொள்வோம், தலைவர், சீமானிடம் நீ முதல் அமைச்சர் ஆகிட்ட பிறகு தான் ஈழ பிரச்சனையை நீ தான் திர்க்கணும், வேறு யாருக்கும் ஈழ விடுதலைக்கு ஆதரவு கொடுக்க கூடாது என்றா சொல்லி இருப்பார்.
தலைவர் இந்த அரசியலையா முன் எடுக்க சொல்லி இருப்பார் ,

2011 தேர்தலிலே சீமானின் துரோகத்தை பார்தோமே,

2011 தேர்தல் சமயத்தில் ,வலியபோய் சீமான் அதிமுக அணிக்கு ஆதரவு என அறிவித்தது சரியென்றே வைத்துக்கொண்டாலும் "இங்கே ஈழம் மலர்ந்தால் அங்கே ஈழம் மலரும் என்று பேசியதை ஒருபோதும் மணிக்க இயலாது". 

பிறகு சீமான் சொன்னது நாங்கள் அதிமுகவிற்கு ஒட்டுகேட்கபோவதில்லை திமுக காங்கிரஸ் அணிக்கு எதிராவே ஒட்டுகேட்கபோகிறோம்.
அப்படி இருக்கும் பட்சத்தில் இவர் அ தி மு க வை ஆதரிக்க காரணம் என்ன , அ தி மு க வை ஆதரிக்கமலே காங்கிரஸ் எதிராக வேலையை செய்து இருக்கலாமே ,

அசின் பிரச்னை நடக்கும்பொழுது , விசய் கால்சீட்டு பெற்று அந்த பிரச்சனையை அமுக்கியது சீமான், சங்கிதாவின் கணவர் கிருசு இலங்கை சென்று வந்த விவாகரம் விசுவரூபம் எடுத்தபொழுது ,சங்கீதா நாங்கள் சீமானிடம் பேசி விட்டோம் ,அவர் எங்களை மன்னித்து விட்டார் என்று நிருபர்களிடம் வெளிப்படையாக கூறினார்,
போராட்டம் செய்ததோ ,உணர்வாளர்கள் ,ஆனால் மன்னிப்பதோ சீமான்,

ஈழ தமிழர்கலுக்கு தேவை ஒரு தனி நாடு, வெறும் ஆதரவு அல்ல; அதை பெற்று கொடுக்கமால், பிரச்சனையை வைத்து தன்னை அரசியல் ரீதியாக முன்னிலை படுத்தி கொள்வது ,சுய நல அரசியல் என்று சொல்லாமல் வேறு என்ன என்று சொல்வது.

ஈழ தமிழர்களின் வைத்து அரசியல் செய்து கொண்டு இருபவர்களின் முகத்திரை தொடர்ந்து கிழிக்கப்படும்.







Friday, December 6, 2013





தெலுங்கைத்தாய் மொழியாகக் கொண்டவர்கள் தங்களை தெலுங்கர் என்றும் ,கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் கன்னடன் என்று (பெரியார் உட்பட),மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் மலையாளி என்றும் சொல்லிக் கொள்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.ஆனால் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டதமிழர்கள் மட்டும் தங்கள் மாநிலத்தில் “ தமிழன்” சொல்லக்கூடாது, என்று “ திராவிடன்” என்றே சொல்லவேண்டும் என்று பெரியார் உட்பட திராவிட இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் கூப்பாடு போடுவது ஏன்.

"இந்தி"(தீ)யன் அல்ல தமிழன்டா "

"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..                        

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

www.senkettru.com
http://senkettraemattru.blogspot.in/
http://iamnotaliberator.blogspot.in/
http://naalaithamizhlaalum.blogspot.in/ (in german alone)
தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க…
நாம் தமிழர் என்ற மூத்த குடி,சிறிலங்கன் அல்ல -I am a Tamil NOT a Srilankan
https://www.youtube.com/watch?v=MtFoWwR226U/