
காயத்திரி இவளும் தமிழச்சி தான். இவள் எந்த தீவிரவாத இயக்கத்தையும் சேர்ந்தவள் அல்ல. இவள் தடைசெய்யப்பட்ட எந்த ஆயுதத்தையும் ஏந்தாதவள். மனித உயிர்கள் உட்பட எந்த உயிரையும் வெடிகுண்டுகள் போட்டு, பெட்ரோல் குண்டுகள் போட்டு படுகொலை செய்யாதவள். காயத்ரி ஆதிக்க சாதி தமிழர்களால் அடிமையாக்கப்பட்ட தன் அறிவுச்சார்ந்த சமூகத்தை உயர்த்த வேண்டும் என்ற ஒரே இலட்சியத்திற்காக திருசெங்கோடு விவேகானந்தா கல்லூரியில் போன வருடம் உயர்கல்வி படிக்க சென்றவளை வக்கிரமிகுந்த ஆதிக்க தமிழ் சாதிவெறியர்களால் கற்பழிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட இந்த ஆதி தமிழச்சிக்கு இங்குள்ள எந்த இழிவான தரங்கெட்ட தமிழர்களும் நீதிக்கேட்டு போராடவில்லையே!
No comments:
Post a Comment