Friday, November 1, 2013

தமிழ் தாய் சிலை ; சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த மதுரை நகரில், 100 கோடி ரூபாய் செலவில், தமிழ் தாய் சிலையை பிரமாண்டமான அளவில் அமைக்க, தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது.

 

இதற்கான அறிவிப்பை, முதல்வர்
சயலலிதா, சட்டசபையில்
நேற்று வெளியிட்டார்.
 
உலக அளவில் பிரசித்தி பெற்ற,
பிரமாண்டமான சுதந்திர தேவி சிலை, அமெரிக்காவில் அமைந்துள்ளது. அதே போல், தமிழகத்தில், கன்னியாகுமரி அருகே திருவள்ளுவர் சிலை உள்ளது. இந்த வரிசையில், தற்போது, தமிழர்களின் நாகரீகம், பண்பாடு, இலக்கியச் செல்வங்கள், கட்டடக் கலை ஆகியவற்றை உலகுக்கு எடுத்துக்காட்டும் வகையில், தமிழ் தாய் சிலை,
மதுரையில் அமைக்கப்படும் என,
முதல்வர் சயலலிதா, 110வது விதியின் கீழ்,
சட்டசபையில் நேற்று அறிவித்தார்.
 
அமெரிக்க சிலை அமெரிக்க சுதந்திர
தேவி சிலையின் உயரம் 151 அடி. இதன் அடித்தளம் மட்டும் 65 அடி. 90.7 டன் செம்பும், 113.4 டன் இரும்பும் கலந்து இச்சிலை உருவாக்கப்பட்டது.
அதன் தலையில் உள்ள கிரீடத்தில் இருக்கும், 7 நீட்சிகள், 7
கடல்களையும், 7 கண்டங்களையும் குறிக்கும்.
 
கையிலிருக்கும் புத்தகம், அறிவையும்;
அதிலிருக்கும் தேதியான, 1887,
சூலை, 4 என்ற தேதி, அமெரிக்கா உருவான நாளையும்
குறிக்கிறது. 1902ம் ஆண்டு வரை, இச்சிலை கலங்கரை விளக்கமாக
பயன்படுத்தப்பட்டது.
 
தற்போது, அமெரிக்காவின் பெருமையை பரைசாற்றும் சின்னமாக கருதப்படும் இந்த சிலை,
சுற்றுலா பயணிகளுக்காக
அருங்காட்சியகமாக
செயல்படுகிறது.

திருவள்ளுவர் சிலை
அதே போல், கன்னியாகுமரியில்,
கடல் நடுவே, நீர் மட்டத்திலிருந்து, 30
அடி உயரமுள்ள பாறை மீது, 133
அடிஉயரத்தில், திருவள்ளுவர்
சிலை அமைந்துள்ளது.
 
சிலை வைத்துவிட்டு தமிழனை சாகடித்துவிடுவோம் முழுமையாக!!!

இந்தி"(தீ)ய - "இந்தி"(தீ)ய ஒன்றியம்-  

"இந்தி"(தீ)யன் அல்ல தமிழன்டா "

"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..                         

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

www.senkettru.wordpress.com 

தமிழ் குழந்தைகளின் இனப்படுகொலை தட்சனாமருதமடு கிளைமோர்த் தாக்குதல் ௨௯.௦௧.௨௦௦௮ (29.01.2008)

http://www.youtube.com/watch?v=eNXp8elWZks

No comments:

Post a Comment