Tuesday, October 1, 2013

தமிழக அரசு உத்தரவுபடி , எந்த அரசு விழாவிலும் முதலில் தமிழ் தாய் வாழ்த்து பாடப்படுதல் வேண்டும். தமிழ் தாய் வாழ்த்து பாடலுக்கு பிறகு தான் இந்திய தேசிய கீதம் உட்பட எந்த பாடலையும் பாட வேண்டும்.

தமிழர் வரலாறு

சென்னை மற்றும் கோவையில் உள்ள சில திரையரங்குகளில் கட்டாய இந்திய ஒன்றிய கீதம் ஒலிபரப்பப்டுகிறது. ஆனால் தமிழ்த் தாய் வாழ்த்து பாடலுக்கு அங்கு இடமில்லை !

இந்த திரையரங்குகளில் ஒவ்வொரு படக் காட்சிக்கு முன்னும் கட்டாயமாக இந்திய ஒன்றிய கீதத்தை ஒலிபரப்புகிறார்கள் . அதற்கு அனைவரும் எழுந்து நின்று பாடும்படி செய்கிறார்கள். ஏன் இவ்வாறு செய்கிறார்கள் என்று விசாரித்தால் இந்திய ஒன்றிய நாட்டின் ஒற்றுமைக்கு இதை நாங்களே செய்கிறோம் . எங்கள் பின்னால் இருந்து யாரும் எங்களை இயக்குவதில்லை என்கிறார்கள். ஆனால் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்படுவது இல்லை. இது குறித்து தமிழர்கள் பலரும் திரையரங்க நிர்வாகிகளிடம் பேசிய போது தமிழ் தாய் வாழ்த்து எங்கள் திரையரங்கில் போடவேண்டும் என்ற எந்த சட்டமும் எங்களுக்கு இல்லை என தமிழ் தாய் வாழ்த்து பாடலை போட மறுத்துள்ளனர்.

தமிழ் அமைப்புகள் இந்த திரையரங்கங்களுக்கு நேரடியாக கோரிக்கை வைத்துள்ளது.
அந்த கோரிக்கையில்,

தமிழக அரசு உத்தரவுபடி , எந்த அரசு விழாவிலும் முதலில் தமிழ் தாய் வாழ்த்து பாடப்படுதல் வேண்டும். தமிழ் தாய் வாழ்த்து பாடலுக்கு பிறகு தான் இந்திய ஒன்றிய கீதம் உட்பட எந்த பாடலையும் பாட வேண்டும். தமிழகத்தில் இருக்கும் சில திரையரங்கில் இந்திய ஒன்றிய கீதம் கட்டாயம் ஆக்கப்பட்ட காரணத்தால், தமிழ் தாய் வாழ்த்து பாடலையும் கட்டாயம் ஆக்கப்படுதல் வேண்டும். தமிழ்த் தாய் பாடலை புறக்கணித்தால் தமிழர்கள் உங்கள் திரையரங்கை புறக்கணிக்க பரப்புரை செய்வோம். உடனே தமிழ்த் தாய் பாடலை உங்கள் திரையரங்கில் ஒலிக்க செய்யுமாறு வேண்டுகிறோம் . அவ்வாறு ஒலிக்கவில்லை எனில் உங்கள் திரையரங்கின் உள்ளே நாங்களே தமிழ்த் தாய் பாடலை ஒலிக்கச் செய்வோம் என்றும் வலியுறுத்தி உள்ளோம்.

-இளையவேந்தன்

No comments:

Post a Comment