Wednesday, October 16, 2013

AGS திரையரங்கம் தமிழ்த் தாய் வாழ்த்து பாடல் ஒலிக்காமல் இந்திய (ஒன்றிய) நாட்டுப் பண் மட்டுமே தங்கள் திரையரங்குகளில் ஒலிக்கச் செய்யும் காரணத்தால், நாம் தமிழர் கட்சியின் சார்பிலும், தமிழர் பண்பாட்டு நடுவத்தின் சார்பிலும் AGS திரையரங்க உரிமையாளருக்கு கோரிக்கை மனு ஒன்றை நேரடியாக கையளித்தோம். ஒவ்வொரு படக் காட்சிக்கும் முன் கட்டாய தமிழ்த் தாய் வாழ்த்து பாடல் இடம்பெற வேண்டும் என்பதே அக்கோரிக்கை ஆகும்.








பல திரைப்பட ரசிகர்கள் திரையரங்கில் கூடி இருக்க ‘தமிழ்த் தாய் வாழ்த்தை புறக்கணிக்காதே’ என்ற முழக்கத்தை அனைவரும் முன்வைத்தோம். உடனே திரையரங்க நிர்வாகமும், காவல்துறையும் எங்கள் கோரிக்கையை விரைந்து வந்து பெற்றுக் கொண்டனர்.

இது குறித்து நிர்வாகக் குழுவிடம் பேசி மூன்று நாட்களுக்குள் பதில் தருகிறோம் என்று திரையரங்க மேலாளர் பதிலளித்தார். அவர்கள் தமிழ்த் தாய் வாழ்த்து ஒலிக்க மறுத்தால் அவர்கள் திரையரங்கில் தமிழர்கள் நாங்கள் தமிழ் தாய் வாழ்த்தை ஒலிக்கச் செய்வோம் என்பதை உறுதியுடன் கூறினும்.

காவல்துறையும், தமிழ்த் தாய் வாழ்த்து முதலில் பாடுவது தான் முறையானது என்று ஒத்துக் கொண்டனர். தமிழக அரசின் விதிமுறைப்படி நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், முடிவில் "இந்தி(தீ)ய ஒன்றியப்  பண்ணையும் பாட வேண்டும் . அதை நடைமுறைப்படுத்த வேண்டியது தமிழகத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களின் கடமையாகும்.



ஏ.ஜி.எஸ் திரையரங்கில் இந்திய நாட்டுப் பண் மட்டுமே ஒலிப்பதாகவும், அதற்கு தமிழர்கள் அனைவரும் எழுத்து நிற்க வேண்டும் எனவும் நம்மிடம் புகார் வந்ததை தொடர்ந்து தமிழர் பண்பாட்டு நடுவம், நாம் தமிழர் கட்சி, தமிழக மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் இந்த திரையரங்கத்தில் பத்து நாட்களுக்கு முன் மனு கையளிக்கப்பட்டது. அந்த மனுவில், திரையரங்கில் இந்திய நாட்டுப்பண் ஒலிக்கும் நிலையில் தமிழ் தாய் வாழ்த்தும் ஒலிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தோம். 

தற்போது திரையரங்க நிர்வாகம் நம்முடைய கோரிக்கையை ஏற்றுள்ளது. ஏ.ஜி.எஸ் வில்லிவாக்கம், நாவலூர் திரையரங்கங்களில் முதலில் தமிழ் தாய் வாழ்த்துப் பாடல் ஒலித்த பின்பே இந்திய நாட்டுப் பண் ஒலிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறோம். இது தமிழர்களுக்கு, தமிழுக்கு கிடைத்த வெற்றியாகும். 

விரைவில் மற்ற திரையரங்கிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை ஒலிக்கச் செய்வோம். தமிழகத்தில் இனி எந்த நிறுவனமும் தமிழ்த் தாய் வாழ்த்தை புறக்கணித்து "இந்தி"(தீ)ய ஒன்றியப் பண்ணை மட்டுமே முதன்மை படுத்த முடியாது.

தாய் தமிழுக்கு உரிய மரியாதை செலுத்திய பின்பே மற்ற மொழிகளுக்கு உரிய இடமளிக்கப்படும் . அதற்கான வேலைகளை தமிழ் அமைப்புகள் நிச்சயம் செய்யும். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற இலக்கு அடையும் வரை நாம் ஓயாமல் பாடுபடுவோம். வாழ்க தமிழ் !

-இளையவேந்தன்

"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..                         

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

www.senkettru.wordpress.com            

thamilarulaham.org

http://senkettru.blogspot.in/

http://iamnotaliberator.blogspot.in/

தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க

https://www.youtube.com/my_videos?o=U

No comments:

Post a Comment