Wednesday, October 16, 2013

அவ்வை இல்லத்திற்கு நன்கொடையாக 30 ஆயிரம் வழங்கிய எம்.சி.ஆர் அவர்களைப் பாராட்டும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள வாய்ப்புக் கிடைத்தமைக்கு மகிழ்ச்சியடைகிறேன்.


நல்ல பல காரியங்களைச் செய்து அதற்கு உறுதுணையாக இருந்து வருகிற எம்.சி.இராமச்சந்திரன் அவர்களைப் பாராட்டுகிறேன்.
நான் எம்.சி.ஆர். அவர்களைப் பல கோணங்களிலிருந்து பாராட்டியிருக்கிறேன். ஆனால் நானும் நிதியமைச்சர் சுப்பிரமணியம்அவர்களும் சேர்ந்து பாராட்டுவது என்பது இதுதான் முதல் தடவை .

நம்முடைய நிதியமைச்சர் அவர்கள் எம்.சி.ஆர். அவர்களை ஊக்குவிக்க, வாழ்த்திய வாழ்த்துரை பிறரைத் தூண்டுவதற்கு ஒரு தூண்டுகோலாக இருக்கிறது .
ஆதரவற்றவர்கள் அனாதைகள் ஆகியோருக்கு இல்லம் ஆற்றி வருகிற தொண்டு மிக நல்ல தொண்டாகும்.

இயேசு கூட “தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் தரப்படும்” என்று கூறியுள்ளார். எனவே அப்படிப்பட்டவர்களைக் கேளுங்கள் தரப்படும்.
எம்.சி.ஆர். இப்பொழுது மட்டுமல்ல; ஏற்கெனவே வேறு பல காரியங்களுக்குத் தாராளமாக அளித்துள்ளார்.

அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்கள் இப்படிப்பட்ட காரியங்களில் அளிப்பதற்குப் போட்டி மனப்பான்மை வளரவேண்டும் என்று. இதை நானும் வரவேற்கிறேன். சட்டமன்றத் தலைவர் அவர்கள் பேசும்போது, ‘அப்படி ஏற்படும் போட்டியிலும் எம்.சி.ஆர். அவர்கள்தான் வெற்றி பெறுவார்கள்’ என்று சொன்னார். இதை நான் வரவேற்கிறேன்.

நிதியமைச்சர் அவர்கள், ‘இப்படிப்பட்ட விழாவில் கட்சி எதுவும் கிடையாது’ என்று கூறினார். எம்.சி.ஆர். அவர்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர். அப்படியிருப்பினும் நிதியமைச்சர் அவர்கள் கட்சியைப் பற்றிக் கவலைப்படாமல் இவ்விழாவில் கலந்து கொண்டு அவ்வை இல்லத்தின் வளர்ச்சிக்கு நல்ல பல வழிவகைகள் கூறியுள்ளதை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்.

எம்.சி.ஆர் அவர்களின் உடல் மட்டும் அல்ல உள்ளம் கூட தங்கம் போன்றதாகும். தங்கம் உருக்கி வார்க்கப்பட்டு அடிதெடுக்கப்பட்ட பின்னரே பளபளப்பைப் பெறுகிறது. எம்.சி.ஆர் அவர்களும் வாழ்வில் வறுமையால் வாட்டப்பட்டு உருக்கி எடுக்கப்பட்டவர்.

ஏறக்குறைய எல்லா நடிகர்களின் வாழ்வும் இப்படிப் பட்டதாகத்தான் இருக்கும். வாழ்க்கையில் மிகவும் பாதிக்கப்பட்டு வறுமை சூழ்ந்து மிகச் சிரமப்பட்டுப் பத்து பதினைந்து ஆண்டுகள் நடித்து அதற்குப்பின் அய்ம்பதுஆண்டுகள் உழைத்தால்தான் பல இலட்சங்களைப் பார்க்க முடியும். ‘அப்படியெல்லாம் இருந்தாரே அவரா இவர்? என்று சிலர் பார்த்துக் கேட்கக் கூடிய நிலை பிறக்கும்.

ஆனால் நண்பர் இராமச்சந்திரன் தன் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படாது இந்தத் தொகை தன்னிடமே இருந்தால் பின்னால் பயன்படுமே என்றும் நினைக்காது குறைவின்றிக் கொடுத்து வருகிறார். ரூ.10 லட்சம் சம்பாதிப்பவர் ஒரு லட்சத்தில் மண்டபம் கட்டுவதை நாம் பார்க்கிறோம். கட்ட ஆரம்பிக்கும்போதே பணம் சம்பாதிப்பவர்களையும் கூட நாம் சந்திக்கிறோம்.


அப்படியில்லாது நண்பர் இராமச்சந்திரன் காத்திருக்கிறார் பணத்தை நோக்கி. எங்கே வருகிறது எங்கே வருகிறது என்று வழி பார்த்திருக்கிறார். வந்ததும் கொடுக்கிறேன் கொடுக்கிறேன் என்று வழங்குகிறார்.

ஆக, இந்த இல்லத்தைப் பொறுத்தவரை, அவர் எப்போதாவது பணம் தரவேண்டும் என்று சொன்னால் நான், ‘அட்டியில்லை’ என்று சொல்வேன். இந்த இல்லம் செழிக்கப் பாடுபடுவேன் என்று உறுதி தருகிறேன்.

-அறிஞர் அண்ணா . (நம்நாடு - 30.1.61)




"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..                         

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

www.senkettru.wordpress.com            

thamilarulaham.org

http://senkettru.blogspot.in/

http://iamnotaliberator.blogspot.in/

தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க

https://www.youtube.com/my_videos?o=U

No comments:

Post a Comment