Wednesday, October 16, 2013

பூர்சுவா சனநாயக புரட்சி முற்றுப் பெறாத நாடுகளில் பாட்டாளி வர்க்க கடமை பூர்சுவா சனநாயக புரட்சி முற்றுபெறாத நாடுகளில் அரசமைப்பு சனநாயக ரீதியில் சீரமைக்கப்படாத நாடுகளில் அதாவது கிழக்கு ஐரோப்பா நாடுகளிலும், ஆசியாவிலும் தேசியக் கொள்கை விடயத்தில் பாட்டாளி வர்க்கக் கட்சிகளின் பணி இருவகைப்பட்டதாக இருக்க வேண்டும் என லெனின் கூறுகிறார்.

காந்திய வழியில் அறப்போர் செய்வது இந்தியை ஒன்றியத்தில் வேலைக்காகது என்பதையே நமது ஈகைச்சுடர் லெப்.கேணல் திலீபன் அண்ணா உறுதிப்படுத்தியுள்ளார்எல்லாத் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையையும் ஏற்றுக்கொள்வது, பூர்சுவா வர்க்கம் அனைத்துத் தேசிய இனங்களின் சமத்துவத்திற்காகப் போராடாது. தொழிலாளி வர்க்க சனநாயகமாவது முரண்பாடற்ற முறையில் மனப்பூர்வமாக இனசமத்துவத்திற்காகப் போராட வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட அரசின் எல்லைக்குள் வாழும் எல்லாத் தேசிய இனங்களின் பாட்டாளி மக்களும் தங்களது வர்க்கப் போராட்டத்தில் நெருக்கமாக பிரிக்க முடியாது ஒன்றுபடுவது. அவ்வரசின் வரலாற்றில் எம்மாறுதல் நிகழ்ந்தாலும், பூர்சுவாக்களால் தனி அரசுகளின் எல்லைகள் எவ்வாறு மாற்றப்பட்டாலும் இந்த ஒற்றுமை நீடிப்பதாக இருக்க வேண்டும்.

இந்த லெனினிய நிலை ஒவ்வொரு இனமும் தனித்தனியே பிரிதல், தனித்தனி அணி என்ற கருத்துகளை மறுக்கிறது.ஏகாதிபத்திய சகாப்த விதிகளைப் பற்றி லெனின் முழுமையாக ஆய்வு செய்தபின் இந்த மேற்கூறிய கடமைகள் மாறிவிட்டதாகக் கூற முடியுமா?

ஒடுக்கும்தேச பாட்டாளிகளது கடமைகளாகவும் ஒடுக்கப்படும் தேச பாட்டாளிகளது கடமைகளாகவும் லெனின் கூறுவது என்ன?

1916ல் லெனின் எழுதிய சோசலிச புரட்சியும் தேசங்களின் சுயநிர்ணய உரிமையும் என்ற கட்டுரையில் ஒரு குறிப்பிட்ட அரசின் எல்லைக்குள் ஒடுக்கப் பட்ட தேசங்கள் பலவந்தமாகப் பிடித்து வைத்துக் கொள்ளப்பட்டிருப்பதற்கு எதிராகப் பாட்டாளிவர்க்கத்தால் போராடமல் இருக்க முடியாது.

அதாவது சுயநிர்ணய உரிமைக்காகப் போராடமல் இருக்க முடியாது. மற்றொரு பக்கத்தில் ஒடுக்கப்பட்ட தேசத்தின் தொழிலாளர்களுக்கும் ஒடுக்கும் தேசத்தின் தொழிலாளர்களுக்கும் இடையிலான முழுமையான நிபந்தனையற்ற ஒற்றுமையை நிறுவன ஒழுங்கமைப்பு உட்பட ஆதரித்துக் காத்து செயல் படுத்துவது ஒடுக்கப்பட்ட தேசத்தைச் சேர்ந்த சோசலிசுடுகள் குறிப்பாக செய்ய வேண்டியதாகும் எனத் திட்டவட்டமாகக் கூறுகிறார்.

ஒடுக்கும் தேசிய இனத்தைச்சார்ந்த பாட்டாளிவர்க்கம் தமது இன சுரண்டும் வர்க்கங்களின் பேரினவாதத்தையும் பிற இனங்கள் மீதான அடக்குமுறையையும் பிற இனங்களை கட்டாயமாக ஒரு அரசில் பிடித்து வைத்திருப்பதையும் பிரதேச விசுதரிப்புகளையும் விட்டுக்கொடுக்காது எதிர்க்க வேண்டும்.

அந்த அரசு எல்லைக்குள் வாழும் அனைத்து இனங்களுக்கும் பிரிந்து போகும் உரிமையை கோரவேண்டும். இதைச்செய்யாத ஒரு மார்க்சியவாதி சர்வதேசியவாதியல்ல.

அதேசமயம் ஒரு ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தைச் சேர்ந்த மார்க்சியவாதி தனது கிளர்ச்சிகளில் தேசங்களின் மனப்பூர்வமான ஐக்கியத்தை வலியுறுத்த வேண்டும். தனது தேசத்தின் அரசில் விடுதலையை ஆதரித்துக் கொண்டே அருகாமையிலுள்ள அரசுடன் ஐக்கியப் படுவதையும் ஆதரிப்பது சாத்தியமே.

அவர் சிறு தேசிய குறுகிய மனப்பான்மையும், தனித்துவப் போக்குகளையும் எதிர்த்துப் போராடவிட்டால் அவரும் ஒரு சர்வதேசிய வாதியல்ல. "ஒடுக்கும் தேசத்தின் சமூக - சனநாயகவாதி பிரிந்து செல்லும் சுதந்திரத்தையும் ஒடுக்கப்பட்ட தேச சமூக சனநாயகவாதி ஐக்கியப்படும் சுதந்திரத்தையும் வலியுறுத்துவது முரண்பாடாக தோன்றலாம்.

ஆனால் சற்று ஆழமாகச் சிந்தித்தால் சர்வதேசத்திற்கும் தேசங்களின் ஒன்றினைப்பிற்கும் வேறெந்த பாதையும் கிடையாது. இருக்க முடியாது என்பது புரியவரும்.

-சமரன்-Revolutionary

பொதுவுடைமை

http://www.facebook.com/senthalam.blogspspot.in
http://www.samaran1917.blogspot.com

இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..                         

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

www.senkettru.wordpress.com

thamilarulaham.org

http://senkettru.blogspot.in/

http://iamnotaliberator.blogspot.in/

தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க

https://www.youtube.com/my_videos?o=U

No comments:

Post a Comment